Headlines

கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம்

கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மின்சாரத் தடை காரணமாக நேற்று 17 நிமிடங்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதன்படி, நேற்று (16) காலை 9.58 முதல் 10.15 மணி வரையில் 17 நிமிடங்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. இந்த 17 நிமிடங்களைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில் எவ்வித தடையும் இன்றி பங்குச் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.!

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும் நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்குவதாகவும் மற்றும் சீன நிறுவனம்  உள்நாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும், கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்படும் காணிகளுக்கு சந்தை பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Read More

கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கண்டியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை… கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி எரிக்கப்பட்டு வருவதற்கு…

Read More

அரசதுறை நிறுவனங்களில் வெற்றிடங்கள் பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை

– ஆர்.கிறிஷ்­ணகாந் – பட்­ட­தா­ரி­க­ளுக்­காக அர­சாங்க நிறு­வ­னங்­களில் 17000 தொழில் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­ற­தென்றும் இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு பொருத்­த­மான தகு­தி­யு­டைய பட்­ட­தா­ரி­களை தேர்வு செய்­வ­தற்­காக குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இக் குழு தொடர்­பான அறிக்­கை­யொன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள்  இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் குறித்து விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று விரைவில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வேலை­யில்லா பட்­ட­தா­ரி­களின் பிர­ச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பொருட்டு…

Read More

அவநம்பிக்கையினூடாக வெளிப்பட்ட கோபமாகவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய உரையைப் புரிந்துகொள்ள முடிகிறது. # வெறுப்பு !!!

நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும், மேற்படி ஆட்சித் தலைவர்கள் இருவரிடத்திலும், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை விடுத்திருக்கின்றார். வரக்காபொல பிரதேசத்தில், சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சர்…

Read More

கிழக்கை வடக்குடன் இணைக்கக்கூடாது; கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளம்

கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று (7) நடைபெற்றது. இதன்போது,  உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தல். நிலைமாறு கால புனரமைப்பு செயற்பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம், எதிர்கால தேசிய வேலைத்திட்டங்களில் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய அவசியம் போன்றவை ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன. இதேவேளை, எக்காரணத்துக்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்கக்கூடாது என்ற…

Read More

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உதவி

கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தகவல் அறிந்துள்ளதோடு உதவி அறிவிப்பையும் விடுத்துள்ளார். இந்தநிலையில் இன்று பெரும்பாலும் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.

Read More

நிறைவேற்று அதிகாரங்களை மைத்திரிபால குறைப்பார்: அமெரிக்கா நம்பிக்கை

இலங்கையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளை சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வார் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சமந்தா பவார் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அதிகாரக் குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் பவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சோதனைகளில் இருந்து மீண்டு சமநிலையை பேண ஜனாதிபதி மைத்திரிபால விரும்புவதாகவும் பவர் தெரிவித்துள்ளார்.

Read More

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் க்சி ஜின்பிங்-ஐ இன்று சந்தித்தார். இந்தியா – சீனா நாடுகளுக்கிடையிலான உறவுகளில் நீடிக்கும் சிக்கல் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினார்.

Read More

எவன்கார்ட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் இது தொடர்­பி­லான மேல­திக விப­ரங்­கள் நாளை (இன்று) வியா­ழக்­கி­ழமை சபையில் தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­மென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அறி­வித்தார். எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக ஜே.வி.பி. எம்.பி.யும் எதிர்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர திஸா­நா­யக எழுப்­பிய கேள்­விக்கு நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்கண்டவாறு தெரி­வித்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது…

Read More

கல்முனை வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் தாகமொன்று தணிகிறது…!

(டாக்டர் என். ஆரிப்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். இது முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு கரையோரப் பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டதுமாகும். நீண்ட காலக்குறைபாடு இத்தகைய பிரதேசத்தில் இதுவரை ஜனாஸாக்களை அரச, தனியார் வைத்தியசாலைகளில் இருந்து எடுத்து வருவதற்கான பிரத்தியேகமான வாகனங்கள் இல்லாமை ஒரு பெரும் குறைபாடாகவே இருந்து வந்தது. முன்னேற்றம் கண்ட இந்தப் பிரதேசத்தில் வாகனங்கள் மலிந்தே காணப்பட்டாலும், ஜனாஸாக்களை தமது வாகனங்களில்…

Read More

அதிரடிகளை ஆரம்பிக்கவுள்ள மைத்திரி – மஹிந்தவுடனும் பேச்சு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தவுள்ளார். அதேவேளை இந்த விழாவின் மேடையில் ஜனாதிபதிக்கு இருபுறமும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் ஆசனங்கள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடப் பூர்த்தி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியாகும். அன்றைய தினம் வேலை நாள் என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More