Headlines

UPFA யில் போட்டியிட கைச்சாத்திட்ட விமல், வாசுதேவ, பந்துல, டலஸ் அழகப்பெரும..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கது. மகாவலி கேந்திரத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது. இதுவரை விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும…

Read More

கல்பிட்டி ஜன்னதுல் அஷாபிர் பாலர் பாடசாலைக்கு நிதியொதுக்கீடு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில், கல்பிட்டி, பெரியகுடியிருப்பு ஜன்னதுல் அஷாபிர் பாலர் பாடசாலைக்கு ரூபாய் 100,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நடவடிக்கைக்காக தொலைக்காட்சி (Television) மற்றும் பிளாஸ்டிக் கதிரைகளும் வழங்கப்பட்டுள்ளன….

Read More

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதியின் வத்தளை – மாபோலை பகுதியில் கொள்கலன் பார ஊர்தியொன்று மின் கம்பத்தில் விபத்திற்குள்ளானதினாலேயே பிரதான வீதி ஊடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

சீகிரியா சுவரில் காதலனின் பெயரை கிறுக்கிய பெண்ணுக்கு 2 வருட சிறை

சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது காதலனின் பெயரை கண்ணாடி சுவரில் எழுதி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தம்புள்ளை நீதிமன்றம் 2 வருட சிறைத்…

Read More

அரச ஊழியர்களினது விடுமுறைகள் ரத்து!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனைத்து அரச ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய நிலைமை சீராக்கப்படும் வரையில் விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நிவாரண சேவைகளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு சரியான முறையில் வழங்காத பட்சத்தில் 1905 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும்…

Read More

தோப்பூர் “நிலசெவன” கட்டிடத் திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் முன்மொழிவில் நிர்மாணிக்கப்பட்ட, தோப்பூர் “நிலசெவன” கட்டிடம் மற்றும் மூதூர் புதிய பிரதேச செயலக கட்டிடம் ஆகியன அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களினால் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், துரைரட்ன சிங்கம் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். (ன)    

Read More

பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவியுயர்வு

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிவழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையானது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் (23) கூடவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது இதற்கான அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இதன்போது கொழும்பு – வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன உள்ளிட்டஅதிகாரிகள் 7 பேரே பிரதி…

Read More

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபை – முஸ்லிம்களின் ஒத்துழைப்பு கோரும் சம்பந்தன்

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். இதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

Read More

ஈக்குவடோர் தாக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு

ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய இந்த பூமி­ய­திர்ச்­சியில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நிலையில் பலி­யா­ன­வர்கள் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்­கு­வடோர் எதிர்­கொண்ட பாரிய பூமி­ய­திர்ச்­சி­யாக இது விளங்­கு­கி­றது. இந்த அனர்த்­தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். பூமி­ய­திர்ச்சி தாக்கி இரு…

Read More

திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

Read More

அல் அமான் அறபிக் கல்லூரிக்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

கிண்ணியா ஏழுபுளியடி கிராமத்தில் உள்ள அல் அமான் அறபிக் கல்லூரியின் சுற்றுமதில் நிர்மாணிப்புக்காக அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (05) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணி ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இச் சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. இவ் நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான…

Read More