Headlines

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சினையில் சூச்சியின் தலையீடு தேவை: தலாய் லாமா

மியன்மாரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு உதவுவதற்கும், சுமூக நிலைமையை ஏற்படுத்துவதற்கும் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சியால் முடியும் என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம் ஏற்கெனவே மியான்மர் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் கடந்த காலங்களில் பேசியிருப்பதாகவும், அவரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இதனை தலாய் லாமா தெரிவித்துள்ளார். மேலும்…

Read More

கொகா கோலாவுக்கு மன்னிப்பு!

கொகாகோலா நிறுவனத்திற்கு தற்காலிக அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. களனி கங்கையில் எண்ணெய் கழிவு கலப்பதாக குற்றம் சுமத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றாடல் அனுமதிப்பத்திரம் அண்மையில் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டிருந்தது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீளவும் அனுமதிப்பத்திரத்தை வழங்க சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. இவ்வாறான தவறுகள் மீள இழைக்கப்படாது என நிறுவனம் உறுதியளித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய காரணத்தினால் தற்காலிக அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக அதிகார சபையின்…

Read More

பஷார் அல் – ஆசாத், ரஷ்யா பயணம்

ஐ.எஸ் களை அழிப்பது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.எஸ் களுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் சிரியா ஜனாதிபதி பஷார் அல்- ஆசாத் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்று, விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து புடின் கூறியதாவது, கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக சிரியா…

Read More

மாற்றுவலுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் : இலங்கை அணியில் 9பேர்

பிரேசிலில் இடம்பெறவுள்ள மாற்றுவலுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற, இலங்கையிலிருந்து 9பேர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது. அனில் பிரசன்ன ஜயலத் என்பவரின் தலைமையின் கீழ் இந்த அணி அனுப்பப்பட்டுள்ளது. இவர் 100, 200 மீ. ஓட்டப் போட்டிகளிலும் நீளம்பாய்தலிலும் பங்குபற்றுகிறார். இவர் ஏற்கனவே இந்தப் போட்டிகளில் சாதனையாளராக உள்ளார். 2012இல் இலண்டனில் இடம்பெற்ற போட்டிகளில் ஒரு வெண்கலப் பதக்கத்தை தங்கள் குழு வென்றெடுத்தாக குழுத் தலைவர் ஜயலத் தெரிவித்தார். செப்டெம்பர் 7இலிருந்து 18 வரை இடம்பெறும் இந்தப்…

Read More

கிழக்கு கடலோரங்களில் சிறிதளவில் மழை பெய்யலாம்!

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (01) மாலை அல்லது இரவு வேளையில் இடி , மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருகோணமலை பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடலோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம். கிழக்கு  கரையோரமாக மணிக்கு 20 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும்  வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.

Read More

கோத்தபாய மாலைதீவுக்குத் தப்பியோட்டம்!!

நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், தனது மனைவி அயோமாவுடன், விமானப்படை விமானம் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டார். மாலைதீவுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே வீசா பெறத் தேவையில்லை. வீசா இல்லாமல் செல்லக் கூடிய மற்றொரு நாடாக சிங்கப்பூர் இருந்தாலும், அங்கு இராணுவ விமானத்தில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது. அதேவேளை, ராஜபக்சவின் புதல்வர்களும் சீனாவுக்குச் சென்றுவிட்டனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் தாம் தோல்வியடைவதை உணர்ந்து கொண்டு மகிந்த…

Read More

வேதாந்தி சேகு இஸ்ஸத்தீன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைகின்றார்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், வடக்கு  கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸத்தீனை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் (06) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. மு.காவின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, மற்றும் மு.காவின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்துகொண்டு…

Read More

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நவீன ரக சி.ரி. ஸ்கேனரை பெற்றுக் கொள்வதற்கு உதவி கோரல்

– அஷ்ரப் ஏ சமத், சத்தார் எம் ஜாவித் – மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லைக்கு நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் ஒன்றை வழங்­க­வ­தற்கு இன, மத பேத­மின்றி ஒன்­றி­ணைந்து உத­வு­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சுமார் 1,100 பேர் தங்கி சிகிச்சை பெறு­வ­தா­கவும், அத­னை­விட நாளாந்தம் சுமார் 1,500 பேர் வரை சிகிச்­சை­களை பெற்றுச் செல்­வ­தற்­காக வருகை தரு­வ­தா­கவும் வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை, இலங்­கையில் சுமார் ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மா­ன­வர்கள் இந்த நோயினால்…

Read More

கண்டி மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் மற்றும் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் உள்ளிட்ட குழுவினர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  கடந்த வியாழக்கிழமை (04) அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர். கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சருடன்  கலந்துரையாடிய குழுவினர், மேற்கொண்டு அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். கண்டி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க  தீர்மானித்திருப்பதாகவும், தங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்தும்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோமராங்கல்ல கிராம மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

சுற்றுலாத்துறைக்கான சர்வதேச மாநாடு!

ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஜுலை மாதம் 11 முதல் 14 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘அபிவிருத்தி, சாமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சுற்றுலாத்துறை ஓர் ஊக்கியாக’ என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாட்டினை நடாத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சும் அதன் கீழ் இயங்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் ஒழுங்குகளை மேற்கொண்டு…

Read More

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும்…

Read More