பள்ளிவாசல் சுவர் விழுந்து ஒருவர் வபாத், 3 பேர் காயம்
திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாயலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரவித்தனர். இன்று காலை(1) இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாயலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே…
