Headlines

நான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன் – போப் ஆண்டவர் பிரான்சிஸ்

77 வயது போப் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்று இருந்தார். தனது பயணம் முடிந்து வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எனது இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை தெரிந்தது. நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன். அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில் நான் இன்னும் சில காலம் மட்டுமே அதாவது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன்…

Read More

புலனாய்வு பொலிஸார் இருவர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரை திங்கட்கிழமை (25) இரவு கைதுசெய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள், 38 வயதுடைய குறித்த பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்றில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருகின்றது. பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்….

Read More

முடியாது என்று எமக்கு எதுவுமில்லை – ஜனாதிபதி

“முடியாது என்று எமக்கு எதுவுமில்லை, மக்கள் எம் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஊவாவில் ஆட்சியமைக்கலாம் என்று ஐ.தே.க. கனவு காண்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது எனவும் தெரிவித்தார். பதுளை ஹாலிஎலயில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மகளிர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, “பெண்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் சக்தியாக உள்ளதாகவும், உலகிலேயே பெண்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கும் நாடு இலங்கை”…

Read More

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சில சிவில் அமைப்புக்களுக்கு பெறுமதிமிக்க பொருட்களை கையக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 108,000 யூரோ பெறுமதியான மடிக்கணிணிகள் மற்றும் தொலைபேசிகள் உட்பட பல அலுவலக உபகரணங்கள்…

Read More

ஒலுவில் அணைக்கட்டுக்கு துறைமுக அதிகார சபை ஒப்புதல்

-சுஐப் எம்.காசிம் – ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் மண் அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள, முன்கூட்டிய ஒப்புதலை ( Pending Approval) துறைமுக அதிகார பணிப்பாளர் சபை வழங்கியுள்ளதாக, அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ள துறைமுக அதிகார சபையின் நிபுணர்களும், கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் உயரதிகாரிகளும் அந்தப்…

Read More

கடந்த கால அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது வத்தளையில் அமைச்சர் ரிஷாட்

சுதந்திரத்திற்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே  இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வத்தளை ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய நுழைவாயிலை இன்று (13) திறந்து வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை அதிபர் எம்.எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள்…

Read More

இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்றுகூடல்

தற்போதைய நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த ஒரே அமைப்பாக செயற்பட மிகவும் உச்சாகத்துடன் முன்வந்துள்ள ஐரோப்பா வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (27.11.2016) சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.    ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், சுவிஸ்,நோர்வே, சுவீடன் ,ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஒன்றுகூடலில்…

Read More

அ.இ.ம.கா. கல்முனை அலுவலகத்துக்கு தீவைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் குடியில் திறந்திருந்த தமது அலுவலகத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விஷமிகள் தீவைத்துள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பாகப் போட்டியிடும் கலீலுர்றஹ்மான் என்பவரின் அலுவலகமே தீ வைக்கப்பட்டதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இந்தத் தீ பரவாமல் சமயோசிதமாக அணைக்கப்பட்டதாகவும் அலுவலகத்தில் இருந்த தேர்தல் விளம்பர சுவரொட்டிகள், மற்றும் பிரசுரங்கள் கட்டிடத்தின் சிறிதளவான பகுதி…

Read More

பர்மாவில் கடத்தப்பட்ட 16 வயது ஹாசராவின் கதறல்

அபுசெய்க் முஹம்மத் பத்துபேர் சேர்ந்து ஹாசரா ,வயது 16 என்ற பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். அந்த பெண் சந்தித்த நேரில் பார்த்த கொடுமைகள் கடல்பயணம் முதல் முகாம்கள் வரை பார்க்கலாம் … கடத்தப்பட்ட பெண் மேற்கு பர்மாவை சேர்ந்தவள். 14 பெண்களோடு அவள் ஆபத்தான கப்பலில் பலநாட்கள் பயணிக்கிறாள் . அந்த மரக்கப்பலில் 95 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளோடு பயணம் தொடர்கின்றது . குலைந்த அரிசியும் ,100 மில்லிதண்ணீரும் மட்டுமே உணவாக தரப்பட்டது நான் முதலில்…

Read More

ஒபாமா இலங்கைக்கு, வருவதற்கான வாய்ப்பு – மங்கள சமரவீர

ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று வொங்டனில் உள்ள இலங்கைத் தூதுரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகின்றது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி  கூடிய விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளுண்டு என்று வொங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது. மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூட இலங்கை வருவதற்கான வாய்ப்புகள்…

Read More

காத்தான்குடி நூதனசாலையில் உருவச் சிலை: ACJU பத்வா குழு கடிதம்

காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூதனசாலை’ தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது…

Read More

அ.இ.ம.காங்கிரஸினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராக ஏற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகாரமே கொழும்பு வெற்றி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டஅங்கீகாரமே கொழும்பு மாவட்ட வெற்றி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர்எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.  நடைபெற்று முடிந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் ஒருஆசனத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர்தெரிவித்தார்.  அவர் மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்  நடைபெற்று முடிந்த…

Read More