Headlines

மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் அ.இ.ம.காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டி

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வனிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.   கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்தார்.   இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்;-   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட கிழக்கில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்ததால்…

Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை – (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சிவமோகன், திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவுக்கச்சேரியில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள், மற்றும் சமூக நல நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். முல்லத்தீவு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டு சில…

Read More

இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்றுகூடல்

தற்போதைய நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த ஒரே அமைப்பாக செயற்பட மிகவும் உச்சாகத்துடன் முன்வந்துள்ள ஐரோப்பா வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (27.11.2016) சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.    ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், சுவிஸ்,நோர்வே, சுவீடன் ,ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஒன்றுகூடலில்…

Read More

அ.இ.ம.கா. வின் பிரான்ஸ் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு (படங்கள் இணைப்பு)

ஏ.எச்.எம். பூமுதீன் ஐரோப்பிய நாடான பிரான்ஸில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரான்ஸ் கிளைத்தலைவராக இஸ்ஸத் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அ.இ.ம.கா வின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் முன்னிலையில் இத் தெரிவு இடம்பெற்றது. அதே நேரம் பிரான்ஸ் கிளையின் செயலாளராக ரமழானும் பொருளாளராக ஜவாமித்தும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்களாக லாஹீர், சுயீர் மற்றும் முகம்மட் ஆகியோர் தெரிவு செய்யப்ட்டனர்….

Read More

“ஷில்பசவிய” நிகழ்வு!

கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடு “செமட்ட செவண” வீட்டு உறுதிப் பத்திரம் விசிரி கடன்கள் மற்றும் “ஷில்பசவிய” நன்மைகளை வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு, டேபா மாநாட்டு மண்டபத்தில் நேற்று  (02/12/2017) இடம்பெற்றது. ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி,  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் உதயகுமார், வீடமைப்பு அதிகார சபையின் தலைவர்…

Read More

இஸ்ரேலிய கல்விக் கூடங்களை புறக்கணிப்போம் – பிரிட்டன் கல்வியாளர்கள் அதிரடி

பாலத்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் “சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு” எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரிட்டனிலிருந்து வெளியாகும் “கார்டியன்” பத்திரிகையில் அவர்கள் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில், இந்தப் பிரகடனம் வெளியாகியிருக்கிறது. இதில் 343 கல்வியாளர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இஸ்ரேலை கலாசார ரீதியாக புறக்கணிக்கும் நடவடிக்கைகள் பிளவுபடுத்துபவை என்றும் அவை பாரபட்சமானவை என்றும் கூறி ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரௌலிங் உட்பட 150 பிரிட்டிஷ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கடிதம் ஒன்றை…

Read More

கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். சில தரப்பினர் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு…

Read More

மல்வானை விஜயம் வீடியோ

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (23) இரவு மல்வானை பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார். மல்வானையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காந்தியவலவ, ஆட்டாமாவத்த, ரக்‌ஷபான போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் அமைச்சர்  கேட்டறிந்தார். இந்த சத்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் ஹாஜி அவர்களும் அமைச்சர் றிஷாதுடன்  விஜயம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. Produce_0

Read More

ஆதரவற்ற சிறுமி துஷ்பிரயோகம்: தலைமறைவானார் மத போதகர்

தாய், தந்தையரை இழந்து சபை ஒன்றின் பாதுகாப்பில் வளர்ந்த சிறுமி ஒருத்தியைச் சபையின் மதபோதகர் சில ஆண்டுகளாகத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது இதுகுறித்துப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதையடுத்து குறித்த பாதிரியார் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது. சிறுமிக்கு ஒரு இளைய சகோரனும் உண்டு. பெற்றோர் இல்லை. அதனால் சிறுமி இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கிருந்து சிறுமியை மருத்துவர் ஒருவரும் அவரது தாயும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர். சகோதரனை வேறு…

Read More

தொடர்ந்து தூங்கும் மிஹின் லங்கா விமானி.. இது மூன்றாவது முறை

மிஹின் லங்கா பயணிகள் விமானத்தில் பணிபுரியும் இந்திய விமானி மீண்டும் ஒருமுறை தமது உறுதிமொழியை தகர்த்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின் லங்கா விமானியான கப்டன் வாஹ், ஏற்கனவே இரண்டு தடவைகள் விமான ஓட்டத்தின் போது நித்திரை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார். இதன்பின்னர் அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கப்பட்டார். இந்தநிலையில் தாம் இனிமேல் விமானப் பயணங்களின் போது நித்திரை செய்ய மாட்டேன் என்று அவர் எழுத்துமூலம் உறுதியளித்திருந்தார். எனினும் பங்களாதேஸ் – கொழும்புக்கு இடையிலான சேவையின் போது…

Read More

ஈராக் இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் பக்தாத்திலுள்ள பாராளுமன்றத்தை முற்றுகை!

ஈராக்கில் தாம் கைப்பற்றிய இராணுவ வீரர்களை ISIS குவியலாக நிறுத்தி சுட்டுக் கொலை செய்து வரும் நிலையில் இப்படுகொலைக்கு நியாயம் வேண்டி ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள அந்நாட்டுப் பராளுமன்றத்தை குறித்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் இதன் போது தமது அன்புக்குரியவர்களின் முடிவு என்ன ஆனது என்பது குறித்துத் தெரியப் படுத்துமாறு குறித்த உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர். கிறீன் ஷோன் எனும் சர்வதேச பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் ஈராக் பாராளுமன்றத்தை இராணுவ வீரர்களின் சுமார்…

Read More

“கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறியப்படுத்தவும்” அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இஸ்மாயில் எம்.பி!

சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் தலைமையில் நேற்று (02) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  இந்தக் கூட்டத்தில் சம்மாந்துறை மண்ணின் தேவைகள் கருதி இஸ்மாயில் எம்.பி அவர்களினால் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கதிற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் விபரங்களையும், அதன் உரிமை தொடர்பான ஆவணங்களையும் கண்டறிதல். கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு சம்மந்தமாக இதுவரைக்கும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறியப்படுத்தவும். பொதுமக்களுக்காக வாரத்தில் ஒரு நாளை மண் அகழ்வதற்கான…

Read More