Headlines

தலைவர் ரிஷாட் திருமலை விஜயம் – ஆதரவாளர்களுடன் சுமுகமான சந்திப்பு!

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை, குச்சவெளி பகுதிகளுக்கு இன்றைய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச வாழ் மக்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அண்மையில், யாழ்ப்பாணத்துக்கான அமைச்சர் றிஷாத்தின் விஜயத்தின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

Read More

ஜனாதிபதியின் கூட்டத்தல் கல்லை வைத்திருந்த 02 இராணுவ வீரர்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாத்தறையில் பங்கேற்ற இராணுவ வெற்றி நிகழ்வின்போது கல்லை வைத்திருந்ததாக கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின் போது அவையவங்களை இழந்த கடற்படை வீரர்களை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிவந்த கடற்படை வீரர் ஒருவரின் கைப்பையில் இருந்தே கல் ஒன்று கைப்பற்றப்பட்டது. எனினும் எவரோ தம்மீது பொறாமைப்பட்டு குறித்த கல்லை தமது கைப்பைக்குள் வைத்திருக்கலாம் என்று கடற்படைவீரர் தெரிவித்துள்ளார். எனினும் அவரும் அவருடன் மற்றும் ஒரு கடற்படைவீரரும்…

Read More

மாணவத் தலைவர் தின நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கொழும்பு 15, மோதரை புனித ஜேம்ஸ் ஆரம்ப பாடசாலையின் மாணவத் தலைவர் தின விழா, அண்மையில் பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான முஹமட் பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.        

Read More

ரணவிரு ஞாபகார்த்த விழா ஜனாதிபதி தலைமையில்!

தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் எதிர்வரும் 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள படைவீரர்கள் ஞாபகார்த்த திடலில் இடம்பெறவுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். மேற்படி நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார நிகழ்வுகளையடுத்து நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து…

Read More

வடக்கு முஸ்லிம்கள் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும் – அநுரகுமார

-அஸ்ரப் ஏ சமத்- பேராதனை பல்கலைக்கழக புவியல் துறை பேராசிரியா்  சாஹூல் எச். ஹஸ்புல்லா ஆங்கில மொழி முலம் எழுதிய மீள திரும்புவதற்கு   மறுக்கப்படும் உரிமைகளும்  சவால்களும் என்ற தலைப்பில் நுால் ஒன்று (28) கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது, நுாலின் முதற் பிரதியை இவ் வைபத்திற்கு  பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜே.வி. பி தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பிணா் அநுர குமார திசாநாயக்க முசலி முன்னாள் பிரதேச சபைத் தலைவா் எஹியாவிடம்…

Read More

ஐஸ்வாளி குளியல் நிதி உதவி 100 பில்லியன் டாலரை கடந்தது

லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் கடந்துள்ளது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 29ஆம் தேதி முடிய நன்கொடையாக இந்த நிதியினைத் திரட்டியுள்ளது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே…

Read More

அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரை ACMC குழுவினர் சந்திப்பு

தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம்.வொலன்ட் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோர் இன்று (30) பாராளுமன்றத்தில் சந்தித்து உத்தேச தேர்தல் முறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்குப் பொருத்தமான தேர்தல் முறை தொடர்பிலும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பேணக்கூடிய விதிமுறைகள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினர் வொலன்டிடம் எடுத்துரைத்தனர்.

Read More

அநாதைகளுடன் இரண்டற கலந்த அற்புதமான தலைவர் (படங்கள் இணைப்பு)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ர்ஷீட் அல் மக்தூம் அவர்களால் சுமார் 156 மில்லியன் திர்ஹம் செலவில் அநாதைகளுக்கென அமைக்கப்பட்ட “Family Village” இன்று திறந்து வைக்கப்பட்ட பின்னர் அங்குள்ள அநாதை சிறார்களுடன் மிக அன்பாக அன்னி யோன்னியமாக பழகும் காட்சியே இது…..

Read More

எதிர்ப்ப‌வர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் (கட்டுரை)

இஸ்ஸதீன் றிழ்வான் வடக்கு முஸ்ளிம்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியான போதுதான் சில மீடியாககளும் இனவாதிகளும் வில்பத்து விடயத்தை தூசுதட்டி பேசுபொருளாக்கினர். இப்போது சர்வதேச சமூகம் மரிச்சிக்கட்டிக்கும் வடக்கு மக்களுக்கும் குரல்கொடுக்கும் அளவு விடயம் வீரியமடைந்திருக்கிறது. இலங்கை அரசு வடக்கு மீள்குடியேற்றத்தை ஆமை வேகத்தில் நகர்த்தி, கவனித்துவந்தபோது இந்த வில்பத்தை பாதுகப்போம் என்ற தொனி உயர்ந்திருப்பது எமக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் வடக்கு மீள்குடியேற்றத்தை உத்தியோகபூர்வமாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க மைத்திரி அரசு ஒரு அமைச்சர்…

Read More

காலி குளிர்பான பாட்டில்களால் காஸா சிறுவர்கள் உருவாக்கிய படகு

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சிக்கிக் கொண்டு போர் இல்லாத வேளைகளில் பொழுது போகாத காஸா இளைஞர்களில் இருவர் ஒன்று சேர்ந்து புதிதாக ஏதாவது செய்தால் என்ன? என்று சிந்தித்ததன் விளைவாக சுமார் ஆயிரம் காலி குளிர்பான பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட சிறு படகு உருவாகியுள்ளது. எலக்ட்ரீஷியனாக இருக்கும் பாஹா ஒபைட்(25) மற்றும் வக்கீலாக தொழில் செய்யும் மொஹமட் ஒபைட்(25) ஆகியோர் இந்தப் படகை தயாரித்துள்ளனர். 4 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த படகை…

Read More