மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்தது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் திகதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலே தலையை துண்டித்து கொலை செய்து வெளியிட்ட காணொளியில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர்.அதேபோல் தற்போது ஸ்டீவன் சாட்லாஃபை பத்திரிக்கையாளரை கொலை செய்து காணொளியை வெளியிட்டுள்ளனர். அதில் காணொளியில் மண்டியிட்டு இருந்த ஸ்டீவன் கூறுகையில், ஒபாமா உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில்…
