Headlines

முஸ்லிம்கள் மீள்குடியேறும்போது, அபாண்டங்களை சுமத்துவது கண்டிக்கத்தக்கது – அமைச்சர் றிஷாத்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்கள் வாழ்ந்த முறிப்பு பிரதேசத்தில் மீளக்குடியேற சென்ற போது அவர்களுக்கு எதிராக அப்பட்டமான அபாண்டங்களை சுமத்தி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வேளையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செய்கின்றனர் இது வண்மையான கண்டனத்துக்குரியதாகும் என்று பாராளுமன்ற த்தில் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த மக்களது மீள்குடியேற்றத்துக்கு உதவி செய்யாவட்டாலும்,உபத்திரமாவத செய்யாதீர்கள் என பகிரங்கமாக வேண்டுகோள்விடுத்தார். இன்று பாராளுமன்ற விவாதத்தில்…

Read More

கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு!

வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில் பின்னர் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இதனால், சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியரின் விடுதி அறையின் பூட்டை உடைத்து பார்த்த போது குறித்த வைத்தியர் கோமா நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த…

Read More

24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர்  தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து கைதுசெய்தனர். தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் கைப்பற்றிய பொலிஸார்,  அவர்களை நேற்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தொடர்பாடல் அதிகாரிகள் நியமனம்

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நேற்று அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத்  பதியுதீன் இந்த நியமனக்கடிதங் களை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையினை சேர்ந்த மார்க்க அண்டனும்,முல்லைத்தீவு மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார்…

Read More

சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுக்கும் வகையில் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுக் காலை மன்னாரில் நடைபெற்றது. மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ தலைமையில் மன்னார் நீதிமன்ற பிரதான வீதியில் மு.ப. 10.30 மணியளவில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும், சிறு வர்களுக்கு எவ்வாறான வகையில் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்தும்…

Read More

வில்பத்து தொடர்பான வழக்கு இன்று

– வாஜித் – பேரினவாத சமூகம்,இனவாத ஊடகங்கள் மற்றும் வங்குரோத்து அரசியல்வாதிகள் ஒன்றாக சேர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட இருக்கின்றது. அமைச்சர் மீது சுமத்தபட்ட குற்றசாட்டுக்கள் றிஷாட் பதியுதீன் வில்பத்து காடுகளை அழித்து முஸ்லிம் வலையம் ஒன்றை உருவாக்குகின்றார்,காட்டு யானைகளை அழிக்கின்றார் என்றும் இன்றும் பல போலியான குற்றசாட்டுகளை சுமத்தியும் ஆறுக்கு மேற்பட்ட வழக்குகளை தொடுத்து உள்ளார்கள். வில்பத்து…

Read More

முசலி பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை

– எஸ்.எச்.எம்.வாஜித் – மன்னார்-முசலி பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் நலன் கருதி இன்னும் ஓரு சில மாதங்கள் அல்லது வருடத்தில் அணைத்து வசதிகளுடன் கூடிய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை ஒன்றினை அமைத்து தருவதாக நேற்று மாலை இடம்பெற்ற  வன்னி  விடியல் சமூகவலை தள கலந்துறையாடல் குழுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இப்படியான சமூக நல திட்டங்களை மக்கள் மத்தியில்…

Read More

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே அமையும் – அமைச்சர் றிஷாத்

மக்கள் எதிர்­பார்க்கும் நன்­மை­களை வழங்கக் கூடிய புதிய அர­சாங்­க­மொன்றை ஐக்­கிய தேசிய முன்­னணிக் கட்சி அமைக்கும் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தேசியத் தலை­வரும், அமைச்­சரும், வேட்­பா­ள­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார். வவு­னியா சாளம்­பைக்­கு­ளத்தில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில், ஜன­வரி 8ஆம் திகதி பெறப்­பட்ட வெற்­றியும் அதன் மூலம் மக்கள் எதிர்­பார்க்கும் நன்­மை­க­ளையும் வழங்கக் கூடிய புதிய…

Read More

உணர்ச்சிகரமாக பேசி வாக்குகளை சேகரிக்க முயல்கின்றனர் – அமைச்சர் றிஷாத்

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து சகல சமூகங்களின் தேவைகளை பெற்றக்கொடுக்கும் பணியினை முன்னெடுத்துவந்துள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீன் இதனை தொடர்ந்து முன்னெடுக்க முல்லைத்தீவிலிருந்தும் ஆளும் கட்சிக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவம் ஒன்றை பெற்றுத்தர வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். நேற்று இரவு முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில்…

Read More

மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது

மன்னார் நகர மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் இருந்ததது,அவர்கள் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்யவில்லை.இவ்வாறானதொரு நிலையில் வன்னி மாவட்டத்தில் எமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அதிகரித்து இரண்டு வருட காலத்துக்குள் மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது என வன்னி மாவட்ட ஜ.தே.மு .முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பேசாலையில் தெரிவித்தார். மன்னார் பேசாலை மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து…

Read More