Headlines

வடக்கு தொடருந்து போக்குவரத்து வழமைக்கு

ரத்து செய்யப்பட்டிருந்த வடக்கு தொடருந்து வழி போக்குவரத்துக்கள் இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின தொடரூந்து தம்புத்தேகம மற்றும் செனரத்கம தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று தடம்புரண்டது. இந்தநிலையில் தடம்புரண்ட தொடரூந்து நேற்றிரவு வரை மீளமைக்கப்பட்டிருக்காத நிலையில் அஞ்சல் தொரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வடக்கு தொடருந்து வழித் தடத்தில் நேற்று இரவு பயணிக்கவிருந்த 4…

Read More

வட முஸ்லிம்களின் மீள்குடியுயேற்றம் ; ஜனாதிபதி பணிப்புரை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியுயேற்றம் மற்றும் அதற்கான தடைகளை அகற்றுதல் தொடர்பில் ஆராய அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் குழுவொன்றினை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி இரு வாரங்களுக்குள் இக் குழு போதுமான கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் மூன்று வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையுடன் தன்னை சந்திக்குமாறு பணிப்புரைவிடுத்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி அமைச்சரவையிலும்,அதற்கு முன்னர் பாராளுமன்றத்திலும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரச இயந்திரத்தினது பார்வை போதுமானதாக இல்லை என்பதை கடும் வேதனையுடன் வெளிப்படுத்தியிருந்தார்….

Read More

முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக றிஷாத்: ஜனாதிபதி மைத்திரியுடன் நாளை சந்திப்பு

– ஏ.எச்.எம்.பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர் அமைச்சருமான  ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. கடந்த புதன் கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிகவும் அசமந்தமான போக்கை அரசு கடைப்பிடித்து வருவதாக கண்டித்து…

Read More

முஸ்லிம்கள் தம் காணிகளில் உள்ள, பற்றைகளை துப்புரவு செய்வது காடழிப்பு அல்ல – ஜனுபர்

– பாரூக் சிஹான் – முல்லைத்தீவு பகுதியில் காடழிக்கப்படுவது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் கொண்டு வந்த பிரேரணை சக வட மாகாண சபை உறுப்பினர் ஜனுபரின் கூற்றினால் பிற்போடப்பட்டுள்ளது. மாகாணசபையின் 37வது அமர்வு நேற்றைய தினம் காலை 9.30 மணிக்கு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ஆரம்பமாகி முழு நேர அமர்வாக மாலை 5 மணிவரையில் நடைபெற்றிருந்தது முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்திற்காக பெருமளவு காடுகள் கேட்பார் இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது…

Read More

அமைச்சரவையில் றிஷாத் கொந்தளிப்பு: அமைதிப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது. அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கடும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன்போதே, இந்த கொந்தளிப்பான நிலை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று (05) திகதி காலை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது….

Read More

வவுனியா வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வு

ஐந்து வருடங்களாக புனர்வாழ்வு அமைச்சராக இருந்தீர்கள் எனவும்   முஸ்லிம்களை குடியேற்றவில்லை என்று தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஐந்து வருடங்களில் நாலரை வருடங்கள் இந்த நாட்டிலே சமாதானம் இருக்கவில்லை. ஆறு மாதங்கள் தான் சமாதானம் இருந்தது. முகாமிலே தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று இலட்சம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருபத்தையாயிரம் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்திருந்தால் நான் ஒரு மனிதனாக இருக்க முடியாது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிக் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில்…

Read More

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்புத்தான் – சுமந்திரனின் பதிலடி

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு…

Read More

வீட்டு தொகுதிகள்  மற்றும் பள்ளிவாயல் திறந்து வைப்பு

முசலி – கொண்டச்சி கிராமத்தில் கட்டார் செம்பிறை சங்கத்தின் நிதியுதவினால் இலங்கை ஐமாதே இஸ்லாமியின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 60வீடுகள், கடைதொகுதி, பள்ளிவாசல், தண்ணீர் தொகுதி மற்றும் கல்வி கூடம் ஆகியவற்றை இன்று அமைச்சர் றிஷாத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கட்டார் செம்பிறை சங்க உறுப்பினர்கள். இலங்கை ஐமாதே இஸ்லாமியின் வெளிவிக்கார பணிப்பாளர் மொளலவி அப்துர் றஹ்மான், ஊர்மக்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

ஹயஸ் வாகனம் தடம்புரண்டு வீட்டுக்குள் புகுந்தது

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் பகுந்த சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீடும் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுடன் மயிரிழையில்…

Read More

முல்லைத்தீவில் அதிர்ச்சி கொடுத்த 70 அடி நீளமான திமிங்கலம்!

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதி கடற்பரப்பில் 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. எனினும் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் எட்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் கடலினுள் மீண்டும் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 23ம் திகதி கொக்கிளாய் கடற்பகுதியில் நடைபெற்றுள்ளது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கலம் கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உயிருடன்…

Read More

புத்தளம்- மன்னார் போக்குவரத்திற்குத் தடை

புத்தளம் – மன்னார் பிரதான வீதி தற்போது மூடப்பட்டுள்ளமையினால், போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் எளுவங்குளம் பகுதியில் கலாஓயா பெருக்கெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, எளுவங்குளம் பகுதியில் பாலத்திற்கு மேல் நீர் பெருக்கெடுத்து செல்வதினால் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், எளுவங்குளம் பாலம் எவ்வித பாதுகாப்பும் இன்றி காணப்படுகின்றமை, பல்வேறு அச்சுறுத்தல்களை தோற்றுவித்துள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே…

Read More

அமைச்சர் தயாசிறி கிளிநொச்சி பயணம்

நல்லாட்சி அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி நேற்றைய தினம்  பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விளையாட்டு மைதனத்தினை அவர் பார்வையட்ட பின்னர்  தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினையும்  மேற்கொண்டார். எதிர்வரும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் இம்முறை கிளிநொச்சியில் இடம்பெற உள்ளமை குறிப்பிடதக்கது.

Read More