Headlines

விரைவில் எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம்

வேறு மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது. இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக…

Read More

போனை சார்ஜ் செய்ய உதவும் தோல் மணிபர்ஸ்

ஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ‘ஐ போன்’ பயன்படுத்துபவர்கள் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் இறங்குவதால் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே கையுடன் சார்ஜரை எடுத்து செல்வதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதை போக்க தற்போது புதுவித தொழில் நுட்பத்துடன் கூடிய சார்ஜரை தயாரித்துள்ளனர். சார்ஜர் செய்யும் ‘பவர் பேங்க்’ மடக்கி வைக்க வசதியாக இருக்கும் தோல் மணிபர்சுக்குள் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ…

Read More

IPHONE ஐ கண்டுபிடித்தது யார்? – புதிய சர்ச்சை

ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை கண்டிபிடிக்கவில்லை என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி சர்ச்சைக் கூறிய கருத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி “ எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கு இல்லையா (ஐபோனை காட்டியப்படி), இதில் உள்ள கிட்டத்தட்ட அனைத்தும் அமெரிக்க அரசின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சியில் இருந்து வந்தது. ஜி.பி.எஸ். எல்.இ.டி. பிளாட் திரை, டிஜிட்டல் கேமரா, வயர்லெஸ் தரவு சுருக்கம் உட்பட முக்கியமான அனைத்தும் அரசின்…

Read More

இலங்கையில் 5G

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சரான ஹரின் பெர்னான்டோ மற்றும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

வட துருவத்தில் மர்மமான இராட்சத துளை, யார் மறைக்கும் உண்மை இது..?

சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான ஒரு விளக்கமாகவோ அல்லது கருதுகோளாகவோ இருக்கும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கும். பொதுவாக சட்டவிரோதமான, மறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட அல்லது தீங்கிழைக்கும் தொடர்புடைய இரகசியங்கள் அல்லது நிகழ்வுகளை சார்ந்தே தான் இந்த சதியாலோசனை கோட்பாடுகள் பிறக்கும்..! அப்படியாக, நாசாவும் பிற உலக நாட்டு அரசாங்கமும் பூமி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஒரு மர்மமான இராட்சத…

Read More

வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா?

வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத்  தங்களின் விருப்பங்களுக்கு வடிவமைத்து கொள்ள முடியும். இது ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றியுள்ள நிலையில் அன்ரொய்டில் இன்னும் இது தேர்வு முறையிலேயே இருக்கின்றது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும்…

Read More

சூரியன் – புதன் – பூமி ஒரே நேர்கோட்டில்

 ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும். 2006ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா,இலங்கை  போன்ற நாடுகளில் காணலாம். இந்த அறிய நிகழ்வு வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து 2019ஆம்…

Read More

பஸ்ஸுடன் மோதியது சாரதியற்ற கூகுள் கார்

கூகுள் நிறுவனத்தின் சாரதியற்ற காரொன்று பஸ் ஒன்றுடன் மோதிய சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ளள வீதியொன்றில் பெப்ரவரி 14 ஆம் திகதி இக் கார் சென்றுகொண்டிருந்தபோது பயணிகள் பஸ் ஒன்றுடன் மோதியதாகவும் இவ் விபத்து தொடர்பான சில பொறுப்புட மைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் நேற்று முன்தினம் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ஸர்கள், கெமராக்கள் பொருத்தப்பட்டுளள்ள Lexus SUV ரகத்தைச் சேர்ந்த இக் கார், கலிபோர்னியாவின் மவுட் வியூ நகரிலுள்ள…

Read More

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

முதன்மை சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை பொருள் விற்பனை தொடர்பாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை இக்கைது…

Read More

குழந்தைகளுக்கான புதிய தேடல் பகுதியை உருவாக்கியுள்ள கூகுள்

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. www.kiddle.co என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி…

Read More

தொலைபேசிக் கட்டணங்கள், திடீரென உயர்வு

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது. சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு…

Read More

இலங்கையில் பலூன் வழி கூகுள் இணையம்!

இன்று (16) முதல் பலூன் வழி கூகுள் இணைய வசதியை பயன்படுத்தும் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது. பலூன் வழி இணைய சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. பலூன் வழி இணைய சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து…

Read More