News
12 வயதுக்கு குறைந்த சிறுவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது
நீதிமன்றத்தில்,சிறுவரை முன்னிலைப்படுத்துவதற்கான வயதெல்லையை எட்டு வயதிலிருந்து 12 வயதாக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. சர்வதேச ரீதியில் அங்கPகரிக்கப்பட்ட சட்டத்துக்கு அமைய புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்,எந்தவொரு சட்ட நடவடிக்கைக்காகவும் 12 வயதுக்கு குறைந்த சிறுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தவறுகளை திட்டமிடப்பட்ட குற்றங்களாக கருத முடியாது…
கனகராயன்குளம் சிறுமியின் உடல் மீள தோண்டி எடுப்பு
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று சந்தேகிக்கப்படும் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமியின் உடலை மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன என்று சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளது என்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் கொழும்புத் தலைமைக் காரியாலயம் கூறியிருந்தது. ஆயினும் சிறுமியின் உயிரிழப்புக்கு இருதயம் மற்றும் மூளை தொடர்பான பாதிப்பே காரணம் என்று வைத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது…
மனிதக் கழிவிலிருந்து தங்கம்: அமெரிக்கா ஆய்வு
மனிதக் கழிவுகளில் இருக்கக்கூடிய தங்கத்தை பிரித்து எடுக்க முடியுமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு நடைபெறுகிறது. பாறைகளில் இருக்கக் கூடிய அளவுக்கு அந்தக் கழிவுகளில் தங்கம் இருக்குமாயின் அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது என்பதில் கவனம் செலுத்துவது பலனைத்தரும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கழிவுகளில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும்போது, அவை சுற்றுச்சூழலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை…
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானிக்க முடியாது -சபாநாயக
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தெளிவின்மை காணப்படுவதையிட்டு விளக்கமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் புதிய நிலைமையொன்று தோன்றியுள்ளது. எனவே, இது தொடர்பில் கிடைக்கக் கூடிய உதாரணங்களை கவனமாக ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவது சபாநாயகரை பொறுத்த விடயமாகும் என்றார். நாடாளுமன்ற மரபுகள் மற்றும்; நிலையியல் கட்டளையிட்டு பெரிதும் பேசுகின்ற பிரதமர், எதிர்க்கட்சி…
தேசிய கீதத்தை தமிழ், அரபு, ஆங்கில மொழிகளில் இசைத்தால் போதுமானது: பொதுபல சேனா
எம்.எம் மின்ஹாஜ் நாட்டில் நல்லாட்சி நிலவுவதனால் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டியதில்லை. தமிழ், அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் இசைத்தால் போதுமானது. இவ்வாறு சென்றால் தேசிய கொடியில் சிங்கத்தை அகற்றுமாறும் கோருவர். இதற்கு எதிர்ப்பு வெளியிட்டால் எம்மை இனவாதிகள் என்பார்கள் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். உலகில் எங்கும் இல்லாத நல்லாட்சி இலங்கையில் நிகழ்கின்றமை நகைப்புக்குரியது. இந்த நல்லாட்சியில் சிறுப்பான்மையினருக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர்…
மஹிந்தவுக்கு 21 வாகனங்கள் 213 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் : எனினும் பாதுகாப்பு இல்லை என்கின்றார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு 21 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 213 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வசதிகளை வைத்துக்கொண்டு அவர் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் மஹிந்த ராஜபக் ஷவுக்கான வாகனங்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் குறைக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை…
இங்கிலாந்துக்கு காத்து இருக்கிறது, மிகப் பெரிய ஆபத்து
இங்கிலாந்து பாராளுமன்ற குழு, காசநோய் தாக்கம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை அந்த நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கொடிய காசநோய் பரவ இருக்கிறது என்றும், இன்னும் 35 ஆண்டுகளில் இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 7 கோடியே 50 லட்சம் பேர் பலியாகலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் தாக்கம் காரணமாக உலகின் பொருளாதாரம் ஒரு சதவீதம் அதாவது, ஐரோப்பிய நாடுகளின் ஒரு ஆண்டு உற்பத்தி அளவுக்கு…
வீடு வாங்கிய செய்தி.. கோத்தாபய ராஜபக்ஷவிடம் ரூ. 2000 கோடி நட்டஈடு
தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடமும் ‘லங்கா’ பத்திரிகையிடமும் தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடான கோரிக்கை கடிதங்களை நேற்று அனுப்பு வைத்தார். அரசியலில் பழிவாங்கும் நோக்கில் தனிநபர் பெயரை கலங்கப்படுத்த முன்னால் பாதுகாப்புச் செயலாளரும் ‘லங்கா’ பத்திரிகை நிறுவனமும் மேற்கொண்ட முயற்சிகள் தவறானவை என்பதனாலேயே தான் இந்த தீர்மானத்தை…
மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சவால்
தேசிய அரசாங்கத்தை விமர்சித்து மக்களை திசை திருப்ப சில அரசியல் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். அரசியல் சுயநலத்தில் நாட்டைக் காவு கொடுக்க நாம் தயாரில்லை என தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் தலைவராக்க மக்கள் விரும்பவில்லை. முடிந்தால் மஹிந்த ராஜபக் ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்தார். ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க…
கட்டார் அமீருடன் இலங்கை செய்த ஒப்பந்தங்களின் விபரம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த கட்டார் நாட்டு அமீர் இலங்கையில் மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருந்ததுடன் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் நாடு திரும்பினார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் ஆகியோருக் கிடையில் விசேட சந்திப்பு…
மலையக ரயில் சேவை பாதிப்பு
நாவலப்பிட்டியிலிருந்து நானூஓயா வரை சென்ற எரிபொருள் மற்றும் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது. அதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தள்ளனா்வட்டவளை மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில் 102 1/4 கட்டைப்பகுதியில் (24.03.2015) மாலை 4.10 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
கண்டெடுக்கப் பட்ட பொருளின் நிலை என்ன?
-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் மார்க்கம் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. அந்த வரிசையில் பாதையில் பிறரின் பொருளை கண்டெடுத்தால் அதை என்ன செய்வது என்பதை தொடர்ந்து அவதானிப்போம். ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப்…
