News
இனவாத சக்திகளுக்கு வன்னி மாவட்ட மக்கள் அடிபணியப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்
இந்த நாட்டில் மீண்டும் இனவாத சிந்தனைகளை விதைத்து அதன் மூலம் மனித அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு வன்னி மாவட்ட மக்கள் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியினை மீண்டும் வெகு விரைவில் கூறுவார்கள் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இனவாதம்,மதவாதம்,பிரதேசவாதங்கள் எமது முன்னேற்றத்தின் தடைக்கற்கல் என்றும் சொன்னார். வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு வவுனியா பட்டானிச்சூர் வெங்கடேஷ்வரா மஹாலில் இன்று இடம் பெற்ற…
அடிக்கு மேல் அடி; சற்றுமுன்னர் நேபாளில் மற்றுமொரு சக்தி வாய்த்த நில நடுக்கம்
சற்றுமுன்னர் நேபாளில் மற்றுமொரு 6.7 ரிக்டர் சக்தி வாய்த்த நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.. நேபாளின் காத்மாண்டு நகரில் இருந்து சில கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேத விபரம் இதுவரை தெரியவில்லை. நேற்றைய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்டர் ஷாக்குகள் (After Shock) ஏற்பட்டு வருகின்றன. மிதமான அளவில் அவை இருந்து வந்த நிலையில் இன்று சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது. இந் நில அதிர்வானது நேபாளத்தில் ரிக்டரில்…
நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்தது
நேபாளத்தை இன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன. ஆனால், ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசுபதி நாதர் ஆலயம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில்,…
25 வருடகாலமாக இயங்காமல் இருந்த ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீண்டும் ஆரம்பிக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபா
இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 25 வருடகாலமாக இயங்காமல் இருந்த ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபாய்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார். தமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆராயும் கூட்டம் கொழும்பில் இடம் பெற்ற போது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இலங்கையின் பழமையான…
நேபாள நாட்டுப்புற கதையில் சொன்ன மாதிரியே தாக்கிய பெரிய நிலநடுக்கம்! 80 வருட திடுக் தகவல்கள்!! இது அறிவியலா.. அனுபவமா?
நேபாளத்தை பொருத்தளவில், நீண்ட நூற்றாண்டுகளாகவே, மக்கள் மத்தியில் ஒரு செவிவழிச் செய்தி உலவிவருகிறது. அதாவது, ஒவ்வொரு 80 வருடங்களுக்கு ஒருமுறையும், நேபாளம் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்திக்கும்..என்பதுதான் அந்த செவிவழிச் செய்தியாகும். இதேபோல 1934ம் ஆண்டு, நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம்-பீகார் நிலநடுக்கம் என்று அது அழைக்கப்பட்டது. இந்த பெரிய நிலநடுக்கத்தில், 12 ஆயிரம் பேர் நேபாள நாட்டில் உயிரிழந்தனர். இந்தியாவில் 7 ஆயிரம் பேர் இறந்தனர்.இதன்பிறகு சிறிய அளவில் பலமுறை நேபாளத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன….
குவைத்தில் அல்குர்ஆன் மனனப் போட்டி – இலங்கை சிறுவன் சாதனை
முன்னால் குவைத் பாராளுமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான ‘ஜாஸிம் கராபி’ அவர்களின் மறைந்த தந்தை ‘முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி’ அவர்கள் நினைவாக வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் அல்-குர்ஆன் மனனப் போட்டியின் 18 ஆவது வருட பரிசளிப்பு விழா ஷாமியா பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது திவானியாவில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது . இது குவைத்தில் அரபி ,அரபி அல்லாதவர்களுக்கு ஒன்றாகவே நடாத்தப்படும் தேசிய ரீதியிலாக மிகப் பெரிய போட்டியாகும்.இந்த வருடப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 2450…
நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும், உதவும் நடவடிக்கைகளில் இலங்கை விமானப்படை
நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 875 எட்டியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையினரும் இணைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. நேபாளத்தில் நிகழந்துள்ள அனர்த்தத்தினைத் தொடர்ந்து, நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவரினால் அவசர அழைப்பு இலக்கமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 009779851020057 குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதி தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நேபாளத்திலுள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வினைப் பெறுவதற்கான காலம் மலர்ந்துள்ளது – சந்திரிக்கா
அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர்;; காலம் சென்ற எஸ்.வி. செல்வநாயகம் நினைவு தினப் பேச்சில் உரையாற்றினார். இந்த நாட்டின் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் ஆட்சியில் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. சரித்திரத்திலேயே என்றும் இல்லாதவாறு ஒரு சர்ந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு காரணம் என்னவென்றால் இரண்டு முக்கியமான தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. அவற்றோடு வேறு பல சிறு கட்சிகளும் அதற்கு ஆதரவாகப் செயல்படுகின்றன. இந்த…
கொழும்பை (புதுக்கடை) சேர்ந்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் கடலில் முழ்கி பலி
கொழும்பு , புதுக்கடை பிரதேசத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் கடலில் குளிக்கும் போது முழ்கியுள்ளனர். இதன்போது தந்தை காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் தாயும் பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. தாயாருக்கு 31 வயது எனவும், பிள்ளைகளுக்கு 10, 6, 2 வயது என தெரிய வருவதுடன் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.
விரல் ரேகை தொழிநுட்பம் பற்றிய அல்-குர்ஆனின் முன்னறிவிப்பு!
Dr. Mifraaz shaheed (MBBS) மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள். أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ (75: 3-4) இதே விரல் ரேகை மாறாமல் நாளை மறுமையில் எழுப்புவேன் என்று அல்லாஹ் விரல் நுனியை சிலாகித்துகூறுவதன் மூலம், உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கின்றார்களோ அத்தனை கோடி பேருக்கும் வெவ்வேறுபட்ட கை…
சிங்கப்பூரில் தலை சிக்கிய நிலையில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள் ! (வீடியோ இணைப்பு)
சிங்கபூரின் ஜோராங் கிழக்கு தெரு கவுசிங் போர்டில் 371 வது வீட்டில் ஒரு பச்சிளங்குழந்தை 2 வது மாடியின் கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் முதுகு பின் பகுதி கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல்…
மாயமான மலேசிய விமானத்தின பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக தகவல்
காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கிடப்பதாக விமான போக்குவரத்து துறை வல்லுநர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்குப் புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்370) திடீரென ரேடார் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பில் இருந்து விடுபட்டு மாயமாக மறைந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமல் போனதால் அது இந்தியப்…
