News
அனைத்து கட்சி தலைவர்களுடனும் இன்று ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அனைத்து கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க. மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதியுடனான இன்றைய அரசியல் கட்சிகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறுபான்மை கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கமைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக தயாரிக்கப்படும் யோசனைகள் எதிர்வரும் 13ஆம் திகதி…
மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம் பெற்ற மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்பட்டது -மன்னார் அரசாங்க அதிபர்
மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம் பெற்று மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்படுத்தப்பட்டதொன்று என்றும் இதில் எந்தவொரு வெளிமாவட்ட மக்களும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதை மன்னார் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும் இன்னும் சிங்கள ஊடகங்கள் அதனை இருட்டடிப்பு செய்து ஒரு பக்கசார்பான செய்தியினையே ஒளிபரப்பு செய்வது கண்டனத்துக்குரிய செயலென பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு மக்களின் பாதுகாப்பு அமைப்பு,மன்னார் மாவட்ட சமத்துவத்துவத்துக்கும்,இன ஒற்றுமைக்குமான ஜனநாயக மையம்,மன்னார் முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம்,முசலி மண் பாதுகாப்பு ஒன்றியம்.வவுனியா…
முஸ்லிம் மீள் குடியேற்றத்தை தூக்கிப்பிடிக்கும் இனவாதிகள் ஏன் வவுனியா சிங்கள குடியேற்றத்தை பேசவில்லை- அமைச்சர் றிஷாத் அதிரடி பேட்டி (Audio)
இலங்கையின் வடக்கே வில்பத்து பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தை அண்டிய பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் வேலைத்திட்டங்களின்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படாமல், ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்புள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பிரதேசங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. வடக்கு-இலங்கையில் காடுகள் அழிக்கப்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் தற்போதைய…
விண்டோஸ் 10 க்கு அடுத்து எதுவும் வெளிவராது: காரணம் என்ன?
மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘இக்னைட்’ (Ignite) தொழில் நுட்ப மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெர்ரி நிக்சன், “தற்போது நாங்கள் விண்டோஸ் 10-ஐ வெளியிடுகிறோம். இதுதான் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி…
இதுதான் விதியின் விளையாட்டு… அனுரகுமார திஸாநாயக்க கூறும் இன்டரெஸ்டிங் ஸ்டோரி
அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை மஹிந்த அணி யின் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம் என்றும் அவர் தெரிவித்தார். பெல்வத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. தலைவரும் எம்பியுமான அநுர திஸாநாயக இவ்வாறு தெரவித்தார். இங்கு அவர் மேலும்…
இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றத்தில் நடந்தது என்ன? அரசியல் பழிவாங்கலா? அதிகார துஷ்பிரயோகமா?
ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம் நல்லாட்சி நிலவுகின்ற எம் நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் நல்லாட்சி பிழையாக விமர்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றம் தொடர்பில் ஒரு உண்மை மறைக்கப்பட்டு பிழையான கருத்தாடல்கள் கல்குடா முஸ்லிம் பிரதேச மக்களிடம் விதைக்கப்பட்டு வருகின்றது. ஒரு உண்மையை மறைத்து விடாது, இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டு விடாது, மக்கள் மன்றத்திற்கு நடந்ததை நடந்ததாகக் கொண்டு சென்று மக்களை விழிப்பூட்டுவது ஊடகவியலாளர்களுடைய கடமையாகும். அந்த வகையிலும்,…
யார் இந்த டி வில்லியர்ஸ்..? வாசியுங்கள் அதிருவீர்கள்..!!
உலகக் கோப்பையை போலவே ஐ.பி.எல். தொடரிலும் டி வில்லியர்ஸ் அதிரடியால் மிரட்ட தொடங்கி விட்டார். மும்பை அணிக்கு எதிராக அவர் அடித்த 133 ரன்கள்தான் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் தனிப்பட்ட வீரர் ஒருவரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இந்த தொடரில் மேலும் 3 ரன்கள் எடுத்தால் ஆரஞ்சு தொப்பி அவரிடம் வந்து விடும். ஆனால் தான் எப்போதும் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. அணிக்காகவே எனது பணி தொடர்கிறது என்கிறார் டி வில்லியர்ஸ். ஏம்பா…
சவூதியில் ஒரே இரவில் 105 பேர் இஸ்லாத்தை தழுவினர்…..!!
மௌலவி செய்யது அலி ஃபைஜி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் ஒரே இரவில் 105 பேர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு…. சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ரயில்வே திட்ட பணிகளில் பிரேசில் நாட்டவர்கள் உட்பட பல நாட்டை சார்ந்தவர்களும்…
ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்…..!
ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்….. அவள் யார்,,,,,,,,,,? அவள்தான்… ஹிஜாப் பெண்மணி……! என் பெண்மையின்அடையாளம் ஹிஜாப்… என் கண்ணியத்தின் அடையாளம்… ஹிஜாப்……!
இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் அபாரவெற்றி, 8 லிருந்து, 13 ஆக உயர்ந்த முஸ்லிம் எம்.பி.க்கள் தொகை
இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் (07-05-2015) நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 13 முஸ்லிம்கள் எம்பி’க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர், நடப்பு நாடாளுமன்றத்தில் 8 முஸ்லிம்கள் உள்ள நிலையில், இது அபாரமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நடப்பு நாடாளுமன்றத்தில், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக உள்ள நிலையில், அதே எண்ணிக்கையை இந்திய வம்சாவளியினர் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டிருந்த 24 முஸ்லிம்களில் 13 முஸ்லிம்கள் வெற்றி…
கட்டாரில் தொழில்புரியும், இலங்கையர்களின் அவசர கவனத்திற்கு..!
-Arsath gafoor- கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு தற்போது அவசரமாய் கீழே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களின் தேவையில் உள்ளனர். உணவு, நீர், பற்பசை, பிரஷ், சர்ட், சரம், டீசர்ட், சவர்க்காரம், தலையணை, பெட்ஷீட் இவற்றை வழங்குவதற்கு விரும்பும் சகோதரர்கள் கீழே உள்ள கொமியுனிட்டி வெல்பெயார் போரம் அங்கத்தவர்களை தொடர்புகொள்ளவும். பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளப்படும் தாரிக்…
வீட்டில் கிடக்கும் பொருட்களை பயனுள்ள மருந்தாக மாற்றுவது எப்படி..?
உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. தலைவலி 1. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 2. விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி எடுத்து விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும். 3. தலைவலி, மூக்கடைப்பு நீங்க நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு…
