News
‘ரண் மாவத்’ அபிவிருத்திகள் சம்மாந்துறையில் ஆரம்பிப்பு..!
‘ரண் மாவத்’ அபிவிருத்திப் பணிகளின் கீழ் அம்பாறை 3ஆம் வீதி – முதலாம் குறுக்குத் தெரு – மகளிர் பாடசாலை வீதிகளின் 1150 மீற்றர் காபட் இடும் பணிகள் வேலைத்திட்டம் இன்று (14.06.2019) பி.ப. 1.30 மணிக்கு (ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து), பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்களான ஏ….
சமுர்த்தி உரித்து வழங்கும் வைபவத்தில் அப்துல்லா மஃறூப் எம்.பி பங்கேற்பு
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் ஆறு இலட்சம் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்து வழங்கும் வைபவம் திருகோணமலைக்கான நிகழ்வு கந்தளாவில் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் அமைச்சர்களான தயாகமகே, அனோமாகமகே மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், இரா.சம்மந்தன், எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், சந்திப் சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்
கலிமாச்சொன்னது தவறா? கண்ணீர் சிந்தினார் இஷாக் எம்.பி
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லஞ்சியாகம அ/கல்லஞ்சியாகம அரபா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது. பாடசாலை அதிபர் எஸ்.எ.நுவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்…
விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் ஆயத்தம்: மகா நாயக்க தேரர்களிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு!
தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால் எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கண்டியில் இடம்பெற்ற போதே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து…
மௌனம் காக்கும் மேலாண்மைவாதம்! ஐக்கியமே சமூக இருப்புக்கான மார்க்கம்.
ராணுவ யுத்திகளும்,ஆயுதப் பலமும் பயங்கரவாதத்தை மௌனிக்கச் செய்ததைப் போல், அரசியல் யுக்திகளும் இராஜதந்திர நகர்வுகளும் பேரினவாதத்தை மெளனம்காக்க வைத்துள்ளது. பௌத்தர்களின் 2500 வருட கலாசாரங்கள் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் ஏனைய நாகரீகங்கள் மற்றும் இனங்கள் தலைகுனிந்து வாழவேண்டும் என்று, கடும்போக்கு தேரவாதம் நினைக்கிறது. இந்தக் கடும்போக்கிற்குப் பின்னாலுள்ள சக்திகளை அடையாளம் காணும் வரை எமது நாட்டில் எதையும் சாதிக்க முடியாது.இவர்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லைதான்.ஆனால் எத்தனை வீதமான பௌத்தர்கள் இவர்களை…
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10,113 சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு
மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 10,113 சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே கலந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார்…
முஸ்லிம் பெண்களின் ஹபாயா விவகாரம் தொடர்பில் யாரும் திணிக்க முடியாது- ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அப்துல்லா மஃறூப் எம்.பி
அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது. இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் இங்கு வருகை தந்திருக்கும்…
அமைச்சர் றிசாத் எவ்வித காரணங்களுக்காகவும் அமைச்சு பதவியை இராஜினமா செய்யமாட்டார்- பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்படத் தெரிவிப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எவ்வித காரணங்களுக்காகவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்பட தெரிவித்தார். திருகோணமலை உவர் மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று (02) ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில் அமைச்சர் மீதான வீண் பழி சுமத்துவதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் அவர் மீது கொண்ட…
கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்!
கண்டியில் இன்று (03) பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரம ரத்னவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் இன்று (03) அதிகாலை மெட்ரோ நியூஸ் இணையத்துக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று 3 ஆம் திகதி மூடுவதென கண்டி சிங்கள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், 9.00 மணிக்கு அனைத்து வர்த்தகர்களையும் சிங்கள…
பயங்கரவாதத்தை ஒழிக்க படையினருடன் இணைந்து முஸ்லிம்கள் போராடும் வேளையில் இனவாத ஊடகங்களால் வேதனையடையந்துள்ளனர் என -இராஜாங்க அமைச்சர் அமீர்அலி
பயங்கரவாதத்தை ஒழிக்க முழு முஸ்லிம் சமுகமும் இராணுவத்தினருடனும் பொலிசாருடனும் இணைந்து பாரியளவிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் சில இனவாத ஊடகங்களின் செயற்பாடுகளினால் மிகவும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தயவு செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கைகளை இத்தகைய ஊடகங்கள் கைவிடவேண்டுமென விவசாய கிராமிய பொருளாதார அபிவிருத்தி நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று(31) காலை ஓட்டமாவடியிலுள்ள அமைச்சிரின் அலுவலகத்தில் ஊடகவியாலளரிடம் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இந்த நாட்டு…
நல்லிணக்கத்திற்கான பாரிய பொறுப்பை சுமந்து பாடுபட ஊடகங்கள் முன்வர வேண்டும் -நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்
மக்களது உள்ளங்களில் இன்றைய சூழ்நிலையில் சந்தேகங்களும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ள நிலையில் சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் பொறுப்பு என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார் . நிந்தவூர் பிரதேச சபையின் 14 ஆவது அமர்வின் போது(வியாழக்கிழமை-30) அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் மற்றும் புத்தி ஜீவிகளுக்கும் எதிராக சில ஊடகங்கள்…
பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம்!!!
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமாகிய அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது. குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (31) காலை இடம் பெற்றது. அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விடயங்கள் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ் நிலைகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில்…
