News
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு மன்னார் பெரியகடை கடற்கரை மற்றும் அணைக்கட்டு வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்….
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களது கம்பெரேலிய திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பெரியகடை நகரத்திற்கான கொங்கிரீட் பாதை மற்றும் அணைக்கட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1.6 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதை மற்றும் அணைக்கட்டு திறந்துவைக்கும் நிகழ்வானது மன்னார் நகர சபை வேற்பாளர் அன்டன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து…
‘ சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐ எஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும் ” – தெரிவுக்குழு முன் ரிஷாட் பதியுதீன் !
ஆர். சிவராஜா- ”வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலை தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை.இவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்கஅரசாங்கம் செயல்பட வேண்டும் ” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்சாட்சியங்களை அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். கே. – ச.தொ.ச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள்உள்ளனவா? ப. –…
அவசரகாலச் சட்டத்தின் கீழ் காரணமின்றி கைதானோர் விடுவிக்கப்பட வேண்டும்!
எவ்வித காரணமும் இன்றி அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தாக்குதல்களால் சேதமடைந்த பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகளுக்கான நஷ்டஈடுகளை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வலியுறுத்தினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அவசர காலச்சட்டம்…
தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம்.
வடகிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 380 ஆசிரியர்களும் வடக்கு மாகாணத்தில் 380 ஆசிரியர்களும் மொத்தமாக 1119 ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொண்டார்கள் குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்மந்தன், அப்துல்லா மஃறூப், மாவை சேனாதிராஜா, எம்.எஸ்.தௌபீக்,…
தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்துக்கார அங்குரார்ப்பண நிகழ்வு
திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (27) வியாழக் கிழமை தம்பலகம பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது. குறித்த கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நட்டு வைத்தார். சுமார் 90 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அமையப்பெறவுள்ளது இதன் போது வைத்தியசாலையின் வளாகத்தினுள் நிர்மாணிக்கப்படவுள்ள மேலும் ஒரு சிறுவர் பூங்காவினையும் பிரதமர் அங்குரார்ப்பணம் செய்து…
எந்தச் சவாலுக்கும் முகங் கொடுத்து வெற்றியடைய வேண்டும்: அப்துல்லா மஃறூப் எம்.பி.
கடந்த கால யுத்த சூழ் நிலையின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றி நியமனங்களை பெற்றிருப்பது அவர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். வடகிழக்கில் தொண்டராசிரியர்களாக பணியாற்றி வந்த சுமார் 1119 ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வடகிழக்கு…
ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென தெரிவுக்குழுவில் அம்பலம்
முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தெரிவுக்குழு விசாரணைகள் மூலம் பொய்ப்பிப்பு. இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கினார். அவர் வழங்கிய சாட்சியம் வருமாறு, கேள்வி : ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தினர். இக்காலப் பகுதியில் விசாரணை நடவடிக்கைகளுக்கு எவரேனும் அழுத்தங்களை…
அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்
உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீண்டும்திருத்தி வௌியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விகரமசிங்க மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளளார். இச்சிக்கலைத் தீர்த்து வைக்க முகத்தை திறந்து…
பிரிவினை வாதத்தை உருவாக்குபவர்கள் ஒரு சிலரே இதனால் நாட்டு நிலைமை மோசமடைகிறது- அப்துல்லா மஃறூப் எம்.பி
தற் கொலை செய்வதை இறைவன் மன்னிப்பதில்லை” தற்கொலைதாரிகளை எமது மார்க்கமும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் முஸ்லீம் பிரிவினையையும் தெற்கில் சிங்களம் முஸ்லிம் மக்களை பிரித்து பிளவு படுத்த அத்ரலிய ரத்ன தேரர் முயற்சிக்கிறார் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். இன்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாட்டின் நாளா பாகமும் சந்தோசம் நிம்மதியினை பெற்று தந்த நல்லாட்சியை நாசகார கூட்டத்தினால்…
அல் குர் –ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் சமர்ப்பிப்பு
புனித அல்-குர்ஆனை விமர்சிப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள்அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் (எம்.பி)பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றில் நேற்று (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ; “மத குரு ஒருவர் புனித அல்-குர் ஆனை இந்த உயர் சபையில் விமர்சித்திருக்கின்றார். எமது வேதநூலான புனித குர்-ஆன் பெருமானார் (ஸல்) அவர்கள்எழுதியது அல்ல. அவருடைய கற்பனையில் வந்ததும் அல்ல. இறைவன் ஜிப்ரீல் அலை(ஸல்) அவர்கள் மூலமாக அல்-குர் ஆனை…
கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை
கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும்,சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குதீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்தலைவருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முஸ்லிம் காங்கிரஸின்தலைவர் ரவூப் ஹக்கீமும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை அல்லதுமுஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும், தமிழ்த் தேசியகூட்டமைப்பின்…
குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…
தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகதயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ அரசியலிருந்து விலகுவாரா?என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்பதியுதீன் பகிரங்க சவால் விடுத்தார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய் அவர் மேலும் கூறியதாவது, ”இந்த சபையின் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்ஸஇனங்களுக்கு இடையே குரோத உணர்வுகளையும் வைராக்கிய சிந்தனைகளையும் தொடர்ந்துஏற்படுத்தி வருகின்றார். என்னைப்பற்றி பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்திஎனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றார். ” ”தெமட்டகொட குண்டுவெடிப்பு சம்பவத்தின் தற்கொலைதாரியான பெண் ஒருவர் எனது தாயின்சகோதரரின் மகள் என திரும்ப திரும்ப அவர் கூறி எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றார்.எனது தாய்க்கு சகோதர்கள் எவரும் இல்லையெனவும் விமல் வீரவன்ஸ கூறுவது சுத்தமான பொய்எனவும் நான் பொறுப்புடன் இந்த சபையில் கூறுகின்றேன். ” இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைத்து நல்லுறவை இல்லாமலாக்கும் விமல்வீரவன்ஸவின் கீழ்த் தரமான செயலை வண்மையாக கண்டிக்கின்றேன். வாக்குகளைஅதிகரிப்பதற்காகவே விமல் இந்த பொய்களை பரப்புகின்றார். தற்போதைய சூழ்நிலையில்இனங்களுககிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதே பொறுப்புள்ள அரசியல்வாதியின் பன்பாகும்ஆகும். ”நான் மூன்று பிள்ளைகளின் தந்தை, எனக்கென்று குடும்பம் உள்ளது, கட்சி ஒன்று உள்ளது . எனதுகட்சியில் பெரும்பாலான ஆதரவாளர்கள் உள்ளனர். இவ்வாறான பொய்யான பிரசாரங்கள் மூலம்என்மீதும் எனது சமூகத்தின் மீதும் விமல் களங்கம் கற்பிக்கின்றார். மக்களை நிம்மதியா வாழவைப்பதும் அவர்களுக்கான பணிகளை முன்னெடுத்து இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தைவளர்த்தெடுப்பதே எனது வேலைத்திட்டங்களாக இருக்கின்றன.” பயங்கரவாத்திற்கு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் ஆதரவளித்தவர்கள் அல்ல. இந்த சிறிய நாட்டில்இன உறவு தளைத்தோங்குவதற்கு முஸ்லிம்களாகிய நாம் பாடுபட்டு வருகின்றோம். உண்மைஎன்றொரு நாள் வெல்லும் என்பதை அனைத்து மதங்களினதும் போதனையாகும். என்றும் ரிஷாத்பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.
