News
உடலில் செண்ட் (வாசனை திரவியம்)அடித்து கொள்ளுபவர்களுக்கு சில ஆலோசனைகள்.!
வியர்வை நாற்றம் தெரியாமல் , மணக்காமல் நல்ல வாசனை வீசுவதற்காக நாம் எல்லோரும் சென்ட் பாவிக்கின்றோம் . என்னதான் வித்தியாசமான உடையுடன், விதவிதமான அணிகலன்களை அணிந்து வலம் வந்தாலும், ஒருவர் உடம்பிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அவரைச்சுற்றி இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிடும். வெயில் காலத்தில் இதனுடைய பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். சிலரிடம் துர்நாற்றம் இல்லையென்றாலும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை வாசனையால் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி வருகின்றனர். perfumes சில வாசனை திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக…
பிபாவை சுத்தப்படுத்த தயார்!
‘‘துணைத்தலைவர் பதவி கிடைத்தால் ‘பிபா’ அமைப்பை சுத்தப்படுத்த தயார்’’ என கால்பந்து ஜாம்பவான் மரடோனா தெரிவித்துள்ளார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சுவிட்ஸர்லாந்தில் உள்ளது. இதன் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் அலி பின் அல்– ஹுசைன் விலகிக் கொள்ள செப் பிளாட்டர் 5ஆவது முறையாக தலைவர் ஆனார். இதைத் தொடர்ந்து பல்வேறு ஊழல் செய்திகள் வெளியாக செப் பிளாட்டர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ஜென்டினா கால்பந்து ‘ஜாம்பவான்’ மரடோனா கூறியதாவது: அமெரிக்க புலனாய் வுத்…
ஜனாதிபதி ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் நியமிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, இன்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதற்கமைய, இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பஸ் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை!
பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாவும் ஏனைய கட்டணங்களை 10 வீதத்தால் அதிகரிக்குமாறும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ் உரிமையாளர்களின் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. tkstm
இறைவனின் நினைவு!(குட்டிக்கதை)
ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… ஒரு முக்கியமான வேலை…கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்… செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்.. ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்… போனை எடுக்க வில்லை.. என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்.. அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை… இவ்வளவுக்கும்… கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை நன்றாகப்…
வடக்கு முஸ்லிம்களுக்கான கையெழுத்து வேட்டை ; நாளை வெள்ளிக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுப்பு
ஏ.எச்.எம்.பூமுதீன் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம்;களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி 02 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் பாரிய பணி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து நாடுபூராகவும் இடம்பெறவுள்ளது. நாடுபூராகவும் உள்ள ஜூம்ஆ பள்ளவாசல்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கையெழுத்து வேட்டையை ஐந்து அமைப்புக்கள் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம், உடனடித் தீர்வுக்கான குழு, அல்ஜாஸீம் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வடமாகாண உலமா சபை ஆகியனவே அந்த 05…
அப்துல் கலாம் வருகிறார்; இலங்கைக்குதான்!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள சக்தி மற்றும் வலு தொடர்பான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக கலாம், இலங்கைக்கு வரவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை விடுத்த அழைப்பை கலாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைத்துவத்திற்கு தகுதியான சவூதி மன்னர் சல்மான் …!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவுக்கு அண்மையில் மொராக்கோ நாட்டு மன்னர் வருகை தந்தார். அவரை வரவேற்க மன்னர் சல்மான் விமான நிலையம் சென்றார். இருவரும் சந்தித்து கொண்டபோது பத்திரிக்கையாளர்கள் முந்திக்கொண்டு படம் பிடிக்க முயன்றனர். அந்த சந்தர்பத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரியை பணி நீக்கம் செய்து வேறு ஒரு அதிகாரியை அதிரடியாக நியமித்தார்…
வெள்ளிக்கிழமை 2 இலட்சம் கையெழுத்து வேட்டை
– வடக்கு முஸ்லீம்களுக்கான முன்னணி – வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த கோரி இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையினை தொடர்ந்து இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை பெறுகின்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது . வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த கையெழுத்து வேட்டை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிளும் அந்தந்த பிரதேச மஹல்லாக்களை மையப்படுத்தியும் இடம்பெறவுள்ளது. வடமாகான உலமா சபை, அல்ஜாசீம் ஆராய்ச்சி நிறுவனம், உடனடி தீர்வுக்கான குழு, (RRT), அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்…
மபாசா பள்ளிவாசல் மூடலும் பொத்துவில் சகோதரர்களின் முயற்சியும் (Photo)
-கபூர் நிப்றாஸ்- கடந்த மாதம் 28 ஆம் திகதி சட்டரீதியாக மூடப்பட்ட பொத்துவில் 5 பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயலினை மீட்பதற்கு அதன் நிருவாகம் பல முயற்சிகளை எடுத்தது, இருந்தும் அம்முயட்சிகளுக்கு பயன் கிடைக்காமல் போனது. . எதிர்வரும் ரமழானில் பொதுமக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற கட்டாய தேவையாக இருந்த இந்த பள்ளிவாயலினை வேறு ஒரு இடத்தில் அமைப்பதாக நிருவாகம் முடிவு செய்தது , தற்போது அதற்கான வளவு பள்ளிவாயளிட்காக வாங்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக தற்காலிக கட்டிடம்…
வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும் -சுபைர்
– அபூ பயாஸ் – முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது கட்சி பாகுபாடுகளை மறந்து ஒன்றிணைந்த முஸ்லிம் முன்னணியொன்றை அமைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் கொலைப்பட்டியலிலிருந்து விடுவித்து ஜனாதிபதியாக நாமம் சூடுவதற்கு முஸ்லிம்கள் பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஆனபோதிலும், தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதிகூட தட்டிக்கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்-தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கல்விப்…
கட்டார் உலகக் கோப்பைத் தொடரை நடத்தத் தடையில்லை – FIFA
சமீபத்தில் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி உலகப் புகழ் பெற்ற காற்பந்து போட்டியைக் கொண்டு நடத்தும் சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பான FIFA இன் முக்கிய சில உறுப்பினர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசியல் வாதிகள் 2010 உலகக் கோப்பையைத் தமது நாடு தலைமை தாங்குவதற்கு சார்பாக வாக்களிக்க கோடிக் கணக்கில் இலஞ்சம் அளிக்கப் பட்டதாகக் கசிந்த தகவலாகும். இந்த ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய சில முக்கிய FIFA அதிகாரிகள் சிலர் கைது செய்யப் பட்டு அவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில்…
