News
கொழும்பு -09 ல் புதிய ஜூம்ஆப் பள்ளிவாசல் திறப்பு
அஸ்ரப் ஏ சமத் கொழும்பு -09 ஆரமாய பிளேசில் உள்ள தொடா் மாடி வீடமைப்புத் திட்டத்தில் அருகில் புதிய ஜூம்ஆப் பள்ளிவாசல் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு அமைச்சா்கள் ரவுப் ஹக்கீம், ஏ.எச்.எம் பௌசி, மேல் மாகாண சபை உறுப்பிணா்கள், அர்சத், பைருஸ் ஹாஜி மற்றும் இப்பிரதேச ஹிந்து, பௌத்த, கிரிஸ்த்துவ மத குருமாா்களும் கலந்து கொண்டனா். அத்துடன் சர்வதேச இஸ்லாமிய நிலையம், நவ்பா் மௌலவி, ஜம்மியத்துல் உலமா முபாரக் மௌலவி ஆகியோறும் உரையாற்றினாா்கள்.
சூடான் அதிபரை கைதுசெய்யுமாறு ஐசிசி தென்னாப்பிரிக்காவிடம் கோரிக்கை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர் என்று அறிவிக்கப்பட்ட சூடான் அதிபர் ஒமர் அல் பஷிர் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஒமர் அல் பஷிர் மீது சுமத்தப்பட்டுள்ளன.அவரைக் கைதுசெய்யுமாறு தென்னாப்பிரிக்க அரசாங்கத்திடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோரியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள உறுப்புநாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா சூடான் அதிபரைக் கைதுசெய்வதற்கு கடமைப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த…
சூடானிய அதிபர் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறத் தடை
சூடானிய அதிபர் ஓமார் அல் பஷீரை தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறமுடியாதவாறு விதிக்கப்பட்டுள்ள உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நீட்டித்துள்ளது. அவரைக் கைதுசெய்து, போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது தொடர்பான இன்னொரு விசாரணை திங்களன்று நடக்கவுள்ளது. ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டுக்காக அல் பஷீர் ஜொஹன்னஸ்பர்க் நகரில் உள்ளார். ஏனைய ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் அவர் சேர்ந்து நிற்கும் நிழற்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மாநாடு முடிந்து அவர் நாடுதிரும்புவார்…
நேர்மையாக நடந்து கொண்ட முஹம்மது நிப்ராஸ்!
சகல இலங்கையர்களுக்கும் பெருமையைத் தேடித்தரும் விதத்தில், கட்டார் நாட்டில் இலங்கை இளைஞரின் நேர்மை கட்டார் நாட்டின் பொது இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 90,000 கட்டாரி ரியால்களை இலங்கையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நிப்ராஸ் என்பவர் அவ்விடத்திற்கு உரிய பாதுகாப்பு அதிகாரியினூடாக போலீஸிடம் ஒப்படைத்ததையிட்டு கத்தார் நாட்டின் பாதுகாப்பு திணைக்களத்தின் Brigadier Nasser Jabr Al-Nuaimi அவர்கள் இவரின் இந்த நல்ல செயலை பாராட்டியதுடன், கத்தார் தலைமை பாதுகாப்பு திணைக்களத்தின் இணையத்தளத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை ரூபா சுமார் 32…
விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு அறிவுறுத்தல்
வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அல்லது விசேட கணக்கெடுப்பாளர் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நாட்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இவ்வருடத்துக்குரிய விண்ணப்பப் படிவங்கள் யாவும் கிராம உத்தியோகத்தர் மற்றும் விசேட கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அனுமானித்துள்ளதாக…
கரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பம்
ரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது. கடரையோரப் பிரதேசங்களில் நிலத்தடி நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருப்பதால் அதனை குடிநீராகப் பயன்படுத்த முடியாது மக்கள் சிரமப்படுவதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சுல்பிகர் காதர் தெரிவிக்கிறார். மன்னார் உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். புத்தளம் போன்ற கரையோரத்தை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலத்தடி நீரை குடிநீராகப் பயன்படுத்த…
கொழும்பில் மிதந்துவந்த மீனுடன் விளையாடிய 21 பேர், வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸை கடலில் மிதந்து வந்த நச்சுத்தன்மை கொண்ட ஜெலி மீன் (நுங்கு மீன்) ஒன்றை வைத்து விளையாடிய 21 பேர் கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்தநிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான சொறி, எரிச்சல், தடிப்பு மற்றும் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எவரது உயிருக்கும் ஆபத்து இல்லை என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
8 கர்ப்பிணிகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு
நாட்டில் காணப்படும் H1 N1 இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 8 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக தென்மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கராப்பிட்டிய மற்றும் பலப்பிட்டிய பகுதியிலேயே இரண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் டொக்டர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார். ஹம்பாந் தோட்டை, காலி, தர்காடவுன், கேகாலை, மட்டக்களப்பு மற்றும் களுபோவில ஆகிய…
சூரியன் மறையாத பகுதிக்கு, புதிய ‘நோன்பு விதி’ அறிமுகம்
இருபத்தி நான்கு மணிநேரமும் சூரிய ஒளி இருக்கும் ஆர்டிக் வட்ட பிராந்தியத்தில் பகல் வேளையில் ரமழான் நோன்பை கடைப்பிடிக்க அங் குள்ள முஸ்லிம்களுக்கு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஜுன் 18ஆம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பமாகும் நிலையில் சூரியன் மறையும்வரை உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்று சுவீடன் முஸ்லிம் அமைப்பொன்று புதிய வழிகாட்டியை வழங்கியுள்ளது. எனினும் ரமழான் ஆரம்பித்து மூன்று நாட்களில் அங்கு ஆண்டின் மிக நீண்டநாள் பதிவாக வுள்ளது. “ஆர்டிக் வட்டத்தின் வடபகுதியில் இருப்பவர்கள்…
சுனாமி, மறிச்சுக் கட்டி மற்றும் வடக்கில் இருப்பிடம் இழந்த மக்களுக்கான அவசரக் கூட்டம்
சுனாமியில் வீடிழந்த மக்கள், மறிச்சுக் கட்டியில் நிலம் இழந்த மக்கள் ,வடக்கில் இருப்பிடம் இழந்த மக்களுக்காக அவர்களது துயர் துடைக்க இவ்வாறு இவர்கள் ஒரு அவசரக் கூட்டம் கூட்டப் பட்டிருக்குமானால் அவர்களது துயரங்கள் எப்போதோ துடைக்கப் பட்டிருக்கும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறது . நமது கட்சி அரசியலில் களம் இறங்கியது மக்கள் துயர் துடைக்கவே அன்றி வேறில்லை ஆனால் இப்போது நடை பெறுவது இதுதான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 20ஆவது…
மரண தண்டனை குறித்து, ஜனாதிபதி விரைவில் அறிவிப்பார் – ஜோன் அமரதுங்க
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் அறிவிப்பார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி ஒரு சில தினங்களில் அறிவிப்பார். மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு 90 வீதமானவர்கள் ஆம் என்றே கூறியிருக்கின்றார்கள். எனவே மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஜனாதிபதி விரைவில் அறிவிக்க உள்ளார். போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக…
போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன் : மஹிந்த ராஜபக்ச
தேர்தலில் போட்டியிட்டால் பொதுவான வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். தேசிய பட்டியலில் தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலமான கொளனை கோரளை விகாரையின் விகாராதிபதியின் தேகத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக அங்கு சென்றிருந்தபோது அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் போட்டியிடுவதென்றால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவோம். அவரின் கீழ் போட்டியிடுவதற்கு இடமில்லையென அவர் கூறியுள்ளாரே. எப்படியும் தேசிய பட்டியலில் இடம் தருவதாக கூறினாலும் வெற்றி பெற்ற பின்னர் பெயரை வெட்டி விடுவார்கள்….
