News
வித்தியா படுகொலை – பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை (photos)
வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக இந்த உத்தரவினை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். மேற்படி உத்தரவிற்கமைய இன்றிலிருந்து 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்களை விசாரிக்க மன்று அனுமதியளித்தது. இதனையடுத்து இன்றையதினமே யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்கள் 9 பேரையும் விசாரணைக்காக…
இபாஸாவுக்கு காது கேட்க உதவுவீர்களா?
பணத்தினால் உதவ முடியாவிட்டாலும் இந்த தகவலை SHARE செய்வதன் மூலம் உதவலாமே? (16/06/2015) அஸ்ஸலாமு அலைக்கும், முகம்மது இனாயத்துல்லாஹ் இபாஸா என்னும் முஸ்லிம் மாணவி தற்போது மொறட்டுவை பல்கலைகழகத்தில் முதலாம் வருட மாணவியாக Quantity Surveying (QS) பட்ட படிப்பினை தொடர்கின்றார். இவருடைய தந்தை ஒரு கிராம சேவகர் (GS) ஆவார். தனது உயர் தர படிப்பை வெற்றிகரமாக முடித்த இவருக்கு பட்ட படிப்பை முடிப்பதற்கு முன் வல்ல இறைவனின் சோதனை அணைத்துவிட்டது. தனது இரண்டு காதுகளின்…
பலசேனா தூஷணம் பாடுகிறது – டிலான் பெரேரா
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். “பொதுபலசேனாபோன்ற கடும்போக்கு இனவாத மதக்குழுவுடன் அவர்களது அநாகரிக செயற்பாடுகள் தொடர்பாக நேருக்கு நேர் தகுந்த பதில் கூறியவன் என்ற விதத்தில் இத்தகைய இனவாதிகளின் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று அன்று பல தடவைகள் முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்….
உயிர் தியாகம் செய்ய தயார் – ஜனாதிபதி மைத்திரி
“அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க செய்த தியாகத்தை எமது நாடு மீண்டும் வேண்டி நிற்கிறது. நாட்டுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர எனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ளேன்” – என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். உலகில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உழைத்த எந்தவொரு அரசியல்வாதியும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய உயிர்களையும் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எந்த சவால்களுக்கும் அஞ்சாது எல்லா சமூக அரசியல்…
600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள்
அஸ்ரப் ஏ சமத் லைலா டீன் உம்மா பௌன்டேசனினால் நோன்பு காலத்தில் தெமட்டக்கொட பிரதேசத்தில் வாழும் 600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் பொதிகளை வழங்கும் நிகழ்வு தெமட்டக்கொட அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் நடைபெற்றது. காலாநிதி ஹாரீஸ்டீன் ஏற்பாட்டில் இப் பொதிகள் வழங்கப்பட்டன. தெமட்டக்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டாா். இம்முறை ஏறாவுர் போன்ற பல்வேறு இடங்களி்வல் 2000 பொதிகள் நோன்பு நோற்பதக்காக ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது.
எச்சரிக்கை!
தென்கொரியாவில் துரிதமாக பரவி வரும் உயிர்கொல்லியான ‘மர்ஸ்’ வைரஸ் இலங்கைக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் விசேட முன்னெச்சரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு பிரிவின் தகவல்படி, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களை பூரண பரிசோதனை உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 24 மணித்தியால சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை பிரஜைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்…
றிஷாத் பதியுதீனை புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் – சிங்ஹல ராவய எச்சரிக்கை
அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாளை மறுதினம் புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் என சிங்ஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்பத்து, மடு போன்ற பகுதிகளில் காடழிக்கப்பட்டு வருவாதகவும் அது தொடர்பிலானவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள சிங்ஹல ராவய குறித்த தினத்திற்குள் ரிசாத் பதியுதீ;ன் கைது செய்யப்படவில்லையாயின் எமது அமைப்பு பலத்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. காடழிப்பு நிறுத்தப்பட்டாலும் அது தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு…
கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தரமுயர்வு
அஸ்ரப் ஏ சமத் கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நகர அலுவலகமாக தரமுயர்த்தி 16.06.2015 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகின்றது. இவ் வைபவம் இன்று திங்கட் கிழமை நடைபெறவிருந்தும் சாய்ந்தமருதூரில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்ட்டதால் இவ் வைபவம் நாளை நடைபெற ஏற்பாடக உள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலியினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படும். ;அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல். எஸ்…
முஸ்லிம் மீடியா போரத்தின் போட்டிக்கான இறுதித் திகதி நீடிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தும் பரிசுப் போட்டிகளுக்கான இறுதித் திகதி ஒகஸ்ட் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு
உடவலவ – மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகிலிருந்து மாணவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த மாணவன் நேற்று தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பாமையினால் அவரது தந்தை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!
2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சிறுவர் தொழிலாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்;டுள்ளார். சிறுவர்களுக்கு உரிய கல்வி வழங்கப்பட வேண்டியது அவர்களின் உரிமையாகும். எனினும் பல சிறுவர்கள் இன்று தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று நட்டாஸா தெரிவித்துள்ளார். இலங்கையின் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில், 18வயது வரை அவர்கள் பாடசாலை கல்வியை பெறவேண்டும் இதற்கு கீழ் உள்ள…
கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்!
கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர். பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின்…
