News
மொஹமட் அஸ்மி கிடைத்தார்!
பண்டாரவளையைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி (17 வயது) என்ற மேற்படி மாணவரை கடந்த (14/06/2015)ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என www.acmc.lk செய்தி வெளியிட்டு இருந்தது அறிந்ததே.. இது பற்றி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு இருந்த நிலையில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்த அதேவேளை, சற்றுமுன் எம்மை தொடர்பு கொண்ட தகவலை வெளியிட்டவர், குறிப்பிட்ட மாணவர் கிடைக்கப் பெற்றுள்ளதாக எம்ம்மிடம் தெரிவித்தார். பண்டாரவளையைச் சேர்ந்த இவர் வீட்டில் அறிவிக்காமல் கொழும்பில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு…
காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை பார்வையிட்ட ACJU
-எம் எச் எம் அன்வர்- காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாபத்வா குழு பிரதிநிதிகள் 11 பேர்நேற்றுநேரில் சென்றுபார்வையிட்டனர் பூர்வீக நூதனசாலையானது சிலைகள் வைக்கப்பட்டமை தொடர்பாகஅண்மையில் பல்வேறு விமர்சனங்கள் பலதரப்பாலும் எழுப்பப்பட்டிருந்தன இதன் காரணமாகஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாபிரதிநிதிகள் வந்துபார்வையிட்டு அவர்கள் எதைஎடுக்கச்சொல்கிறார்களோ அல்லது எதைநீக்கச்சொல்கிறார்களோ அது நீக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.
நாட்டின் அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்களிப்பும் அளப்பறியது: பிரதி ஊடக அமைச்சர்
நிறைவேற்று அதிகாரம்- அரசியலமைப்பு- சட்டம் நீதி மற்றும் ஊடகம் என்பவற்றினால் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி நடைபோடும் என பிரதி ஊடக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சுக்களின் ஊடக செயலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- ஒரு அரசாங்கத்தை உருவாக்கத்தின் ஊடகம் பாரிய பங்களிப்பை வழங்குகிறது. அது நல்லபடியாக நடக்கவேண்டும். அரசியல்வாதிக்கு ஊடகம் மிகவும் அவசியம். அரசியல்வாதியின் ஒரு…
புனித நோன்பு நிமித்தம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை
நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நாளை (18) விடுமுறை வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளதால் இவ்விடுமுறை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் எதிர்வரும் ஜுலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனவாத ஊடக அராஜகத்துக்கு எதிரான ராவய பத்திரிகையின் சாட்டையடி!
ஏ எம் எம் முஸம்மில். – பதுளை இந் நாட்டு மக்களின் நல்லபிமானத்தை பெற்ற, ஊடகத் துறையில் பல இமாலய சாதனைகளை மேற்கொண்ட, இந் நாட்டின் பல ஆட்சி மாற்றங்களுக்கு அச்சாணியாக செயற்பட்ட ராவய பத்திரிகை சிங்கள ஊடகத்துறையில் ஒரு பிரபலமான பத்திரிகையாகும் . இப்பத்திரிகையின் ஊடகவியலாளரான மஹிந்த ஹத்தக கடந்த வாரம் “வில்பத்து காடழிப்பு” புரளியின் உண்மைத் தன்மைகளை கண்டறியும் நோக்கில் மரிச்சுகட்டி பிரதேசத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு கடந்த வார ராவய…
புனித நோன்பு ஆரம்பமும்; றிஷாதின் வேண்டுகோளும்
ஏ.எச்.எம்.பூமுதீன் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு, புனித நோன்பு மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் இந்த 30 நாட்களையும் கண்ணியமிக்கதாகவும் சகோதர இனங்களுக்கு இடையில் பரபஸ்பர நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையிலும் எமது செயற்பாடுகளையும்…
பெரியமடு மஹா வித்தியாலயத்தில் நவோதய கட்டிடம் திறப்பு
இன்று எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளையும்,சவால்களையும் முகம் கொடுக்கும் துணிவை இறைவன் கொடுத்துள்ளான் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியலை மக்களின் விமோசனத்திற்காக பயன்படுத்தாமல் தனிப்பட்ட நோக்கங்களுக்காக செயற்படுத்துகின்ற போது அது மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவாகும் என்றும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியமடு மஹா வித்தியாலயத்தில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவோதய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மடு…
முசலி பிரதேச பரிசளிப்பு விழா
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற கழகங்களுக்கான பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை முசலி தேசிய பாடசாலையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அழைத்துவரப்படுவதையும்,முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான்,வடமாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் அமர்ந்திருப்பதயும்,வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்தினை மாகாண சபை உறுப்பினர் வழங்கி வைப்பதையும் படத்தில் காணலாம்.
விபத்தில் 20 பேர் காயம்!
தலவாக்கலை – லோகி தோட்டம் பகுதியில் பவுஸர் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!
ஊவா மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்க கோரி ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஊவா மாகாண சபை வரை ஊர்வலமாக சென்று அதன்பின் ஊவா மாகாண சபைக்கு முன்பு சுமார் 3 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்புடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது 150ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு…
இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு
இலங்கையில் மீண்டும் ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 29 அமர்வு நேற்று ஆரம்பமாகியது. அந்த அமர்வில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் பாதையில் தொடர்ந்தும் பயணிக்குமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தினால் ஆகஸ்டில் வெளியிடப்படவுள்ள அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. செப்டம்பரில் அறிக்கையை…
நம்பத்தகுந்த பொறிமுறை அவசியம்- செய்ட் அல் ஹுசைன்
இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்போது நம்பத்தகுந்த பொறிமுறை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன், 29வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்ப நிகழ்வில் நேற்று பங்கேற்று இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கை அதிகாரிகள் இந்த விடயத்தில் தெளிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய அரசியல்அமைப்பு திருத்தம், நாட்டில் புதிய ஜனநாயக ஆட்சி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…
