News
அவதானத்துடன் இருக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கை
உலகின் மிக நலிந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைதிக்கான நிதியம் குழச வெளியிட்டுள்ளது. 178 நாடுகளிடையே நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 34 ஆவது இடத்தை பிடித்துள்ள இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக நலிவுற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தென் சூடான் பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாம்,மூன்றாம், நான்காம் இடங்களை முறையே சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. மிக உயர்ந்த நிலைபேண் தன்மை கொண்ட நாடாக…
வாட்ஸ்அப்பில் யாரையாவது திட்டினால் துபாயில் 92 லட்சம் ரூபாய் அபராதம்
துபாயில் இனி யாரையாவது வாட்ஸ்அப் மூலமாக திட்டினால் 92 லட்சம் இலங்கை ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அதிக அளவிலான வேலை வாய்ப்பு உள்ள இடமாகவும் அந்நாடு உள்ளது. ஆனால், அங்கு இருந்துக்கொண்டு இலவச வைபை வசதியை பயன்படுத்தும் போது மற்றவர்களை திட்டுவது, அந்நாட்டைப் பற்றி மோசமான விஷயங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்யாமல் இருப்பது அவர்களின் பர்ஸ்க்கு நல்லது. ஏனென்றால் தற்போது…
நோன்பை பற்றி அருள்மறையும், நபிமொழியும்!
ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் : “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்குர்ஆன் 2:183) “(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்)…
பெண்ணை காப்பாற்ற முனைந்து நால்வர் உயிரிழப்பு
ரம்புக்கனை பிரதேசத்தில் உள்ள ஊர் ஒன்றில் மலசலகூட குழிக்குள் விழுந்த பெண் ஒருவரை காப்பாற்ற முயற்சித்த மேலும் மூன்று பேர் நச்சு வாயு தாக்கபப்ட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டார் மஸ்ஜித்களுக்கு அருகாமையில் A/C வசதியுடன் இப்தார் கூடாரங்கள்!
-எம்.வை. இர்பான் தோஹா- கட்டாரில் பல பாகங்களிலும் நோன்பு திறப்பதற்கான பெரிய, சிறிய அளவிலான இப்தார் கூடாரங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் அமைக்கபட்டுள்ளது. அப்படி தோஹா ஹிலால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கூடாரத்தை படத்தில் காணலாம். இதில் A/C வசதி செய்யப் பட்டுள்ளது. இவற்றை தொண்டர் நிறுவங்கள், தனியார் கம்பனிகள் , மற்றும் தனி நபர்களின் அனுசரனையுடன் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்
அஸ்ரப் ஏ சமத் கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளைப் பெற்ற குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச, அமைச்சா் கபீா் காசீம், பிரதியமைச்சா் சம்பிக்கா பிரேமதாச ஆகியோறும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.
‘ஜனாதிபதி மைத்திரியின் இதயம் பலமானது’
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சரவைப் பேச்சாளரும் , அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன பதிலளிக்கும் போது, கேள்வி: அப்படி என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமில்லையா? பதில்: ஏன், இல்லை. அவரும் அவரது குழுவும் நல்லாட்சியின் பின்னால் வரமுடியும். எஸ்.டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்க சாகும் வரை முன்னோக்கி சென்றார். எங்கள் குடும்பமே நாசமாகிவிடும் என்று தெரிந்துகொண்டுதான் நாங்கள் அரசாங்கத்திலிருந்து…
கடந்த ஆண்டு ஆறு கோடி பேர் அகதிகளானார்கள்: ஐநா
உலக அளவில் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் போர்கள் காரணமாக சொந்த வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பு எப்போதையும்விட மிக அதிகபட்சமாக உயர்ந்திருப்பதாக ஐநா மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஆறுகோடி பேர் உலக அளவில் இப்படி பலவந்தமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறும்படி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஐநா மன்றம் கணக்கிட்டுள்ளது. இப்படியான அகதிகளில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் சிறார்கள். சிரிய மோதல்களில் தான் அதிகபட்சமானவர்கள் இப்படி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். நாடுகளின் அரசாங்கங்கள் எந்த கவலையும் இல்லாமல் நினைத்தமாத்திரத்தில்…
ரமழான் நோன்பு கடைப்பிடிக்க ஹிந்துக்கள் முடிவு!
மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் வாழும் ஹிந்துக்கள், தங்களுடைய அண்டை வீடுகளில் வாழும் முஸ்லிம்களுடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, லக்னெüவில் புந்தேலி சமாஜ் என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாரா பட்கர் கூறியதாவது: “மஹோபா நகரில் உள்ள உதால் செக் பகுதியில், வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம் சமூகத்தினருடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளோம். 60 நபர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேரி, இஃப்தார்…
பெரும்பாண்மை இன சகோதரர்கள் அமைச்சர் றிஷாதுடன் இணைவு!
அகமட் எஸ். முகைடீன் அம்பாறை மாவட்டத்தின் தமன, உகன, தெகியத்த கண்டிய, நாமல் ஓயா போன்ற பிரதேசங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாக செயற்பட்ட பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின்பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அரசியல் பயணத்தில் (18.06.2015) இணைந்து கொண்டனர். மறைந்த பெரும் தலைவர் இன மத வேறுபாடு கடந்து தேசிய ஐக்கிய முன்னணியினை உருவாக்கி சகல இனத்தவரையும் ஒரு…
ரமழானை முன்னிட்டு 113 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து தங்களுக்கு இது குறித்த உத்தரவு வந்துள்ளதாக கூறிய மலிர் ஜெயில் துணை சூப்பிரண்டு முகமது ஹூசைன் செஹ்டோ , புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 113 மீனவர்களும் லாகூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர்…
