News
விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தலும் , 25 விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் இடம்பெற்றது
திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீரா நகர் பொது விளையாட்டு மைதான சுற்றுமதில் நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி ஹாஜியாரின் வேண்டுகோளிற்கிணங்க நேற்று (16) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் மைதானத்துக்கான சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அங்குரார்ப்பண வைபவம்…
நம்பிக்கையில்லா பிரேரனை மீண்டும் தோற்கடிக்கப்பட்டு கட்சி பேதமற்ற ஒற்றுமையை அரசுக்கு வழங்கியுள்ளோம்- முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.
அரசாங்கத்து எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை கட்சி பேதமற்ற முறையில் மீண்டும் தோற்கடித்து சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (14) திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற…
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் AKM வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் AKM வீதிக்கு இருபது லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைப்பு வேலைகள் இன்று 13.07.2019 இணைப்பாளர் லத்தீப் ஹாஜி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை தலைவர் வாஸித் அலி , நகர் சபை செயலாளர் , ஷக்கி ஹாஜி, மற்றும் ஏறாவூர் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை எதிர்காலத்தில் நிலை நிறுத்துவோம்-அப்துல்லா மஃறூப் எம்.பி
இனி வரும் காலங்களில் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை நிலை நிறுத்துவோம் எமது சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமையோடு இந்த மண்ணில் வாழ வேண்டிய நிலையான ஆட்சியாளர்களை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதியோடு இருப்போம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக் கிழமை(14) கலந்து கொண்ட கிண்ணியா மத்திய கல்லூரியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு…
ஆத்மீக பணியில் ஈடுபடுபவர்களை வீணாக விமர்சித்து இனவாதிகளுக்கு தீனி போடாதீர்கள்! – ரிஷாத் பதியுதீன்
முஸ்லிம் சமூகத்தை ஆத்மீக, லெளகீக ரீதியில் வழிநடத்தும் உலமா சபையை நாம் விமர்சிப்பது இனவாத மத குருமார்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வெல்லம்பிட்டி அகதியதுல் தாருஸ்ஸலாம் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா கொழும்பு, மருதானை டவர் மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, நமது சமூகத்தில்…
மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது- கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்துக்காக அடிக்கல் நடும் நிகழ்வு
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாண நடவடிக்கைக்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அடிக்கல் நடும் வைபவம் இன்று (14) இடம் பெற்றது 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கடல் மேல் பாலமானது வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் பெற்றோலிய வள அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது நான்கு வருட காலமாக ஏமாற்றப்பட்டு வந்த குறித்த பால நிர்மாண நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால்…
மன்னார் பெரியமடு கிழக்கு G.M.M.S பாடசாலை நுழைவாயில் திறந்து வைப்பு
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் காணப்படும் பாடசாலைகளை வளம் மிக்க பாடசாலைகளாக மாற்றும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பெரியமடு கிழக்கு பாடசாலைக்கான நுழைவாயில் மற்றும் பாதை திறப்பு விழா நிகழ்வு மாந்தை பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான நௌபீல் அவர்களது தலைமையில் இடம்பெற்றது…
குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அன்மையில் கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் இஜாஸ் அவர்களின் தலைமையில் நேகமயில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
நம்பிக்கையில்லா பிரேரனை மீண்டும் தோற்கடிக்கப்பட்டு கட்சி பேதமற்ற ஒற்றுமையை அரசுக்கு வழங்கியுள்ளோம்
அரசாங்கத்து எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை கட்சி பேதமற்ற முறையில் மீண்டும் தோற்கடித்து சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (14) திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற…
தோப்பூருக்கான தனி பிரதேச செயலகம் உருவாக்கம் தொடர்பில் ஆராய்வு!!!
திருகோணமலை மாவட்டம் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் கோரி பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன இது விடயம் தொடர்பில் பல்வேறு சந்திப்புக்களும் குறித்த ஆவணங்கள் தொடர்பான அமைச்சரவை பத்திரம் மூலமான பல விடயங்கள் பேசப்பட்டதற்கு இணங்க இன்று (12) உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் தோப்பூர் பிரதேச செயலக தனி உருவாக்கம் பற்றிய ஆவணங்கள் அடங்கிய கோவைகளை…
வாக்குகளுக்காக இன வாதத்தை தூண்டி இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம். -முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.
வாக்குகளுக்காக இன வாதத்தை தூண்டி இன, நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று (12) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது சிலர் உயர்ந்த சபையில் இனவாத பேச்சுக்களை பேசி இனவாதத்தை கக்கும் சக தமிழ் பேசும் உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். சஹ்ரானின் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாகவும்…
தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.! பாராளுமன்றத்தில் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு
”வில்பத்து பிரதேசத்தில் 08 ஆயிரம் ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸ்ஸநாயக்க கூறுகின்றார். எனக்கு அவ்வாறு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார் அவ்வாறு நிரூபிக்காத பட்சத்தில் அவர் அரசியலிருந்து ஒதுங்க தயாரா?” என பாராளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சவால் விடுத்தார். மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, மக்கள் விடுதலை முன்னணியின் நம்பிக்கையில்லாத்…
