News
தி/ஸாகிரா கல்லூரிக்கு அமைச்சர் றிசாத் விஜயம்
திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார். பாடசாலை அதிபர் அலி சப்ரி தலைமையில் வெள்ளிக் கிழமை (02) குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டு பாடசாலை வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும் இதன் போது பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பாடசாலை நிருவாக உத்திதோகத்தர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்
” ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம் எம்.பிக்கள் என்றுமே செயலாற்றியதில்லை” தெஹிவளை ஜும்ஆ பள்ளி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் இணைந்து தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசலில் நேற்று (04) நடாத்திய விசேட மாநாட்டில் உரையாற்றிய போது அமைச்சர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அச்சம்,மன உளைச்சல்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து முன்னாள் அமைச்சர்…
உயர்தரப் பரீட்சையை வெற்றி கொள்ள இறைவனை பிரார்த்திக்கிறேன்
தற்போது ஆரம்பமாகியிருக்கும் கா.பொ.தா.சா.தர உயர்தரப்பரீட்சையில் சகல மாணவர்களும் வெற்றிகொள்ள வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். உயர்தரபரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இன்று (05)விடூத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மாணவச் சமூகம் உயர்தரபரீட்சையின் பின்பு சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் பல துறைகளிலும் சாதித்து நாட்டில் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் இவ்வாறான கட்டங்களை எதிர்காலத்தில் தாண்டி சிறந்த…
உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் அமீர் அலி வாழ்த்து
ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதே கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை தான். இப்பரீட்சையின் வெற்றியென்பது அந்த மாணவனை வெற்றியின் விழிம்பிற்கே கொண்டு சென்று விடுகிறது. எனவே, குறித்த பரீட்சைக்குத்தோற்றும் அனைத்து மாணவர்களும் சித்தியடையவும் பல்கலைக்கழக வாய்ப்பைப்பெறவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உயர் தரத்தேர்வில் சறுக்குகின்ற மாணவன் முழு வாழ்க்கையையுமே இழப்பதற்குச் சமமான நிலைக்குத் தள்ளப்படுகின்றான். அவ்வளவு தூரம் குறித்த…
சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது. கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்
சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் செலுத்த முடியுமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் எமக்கு கிடையாதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் தெரிவித்தார். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நேற்று மாலை (02.08.2019) கிண்ணியாவில் இடம் பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்…
குச்சவெளி பிரதேசத்தில் சமுர்த்தி உரித்து படிவங்கள் வழங்கும் நிகழ்வு
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் வைபவம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டன. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப் படிவங்களை இன்று (02) குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார். குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன்…
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று 01.08.2019 மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் அரசாங்க அதிபர் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது . நிகழ்வில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் ,ஸ்ரீநேசன் , உதவி அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் முகுந்தன்,…
மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு மாவட்ட எம் பிக்களின் பங்கேற்புடன் தீர்வு காண முயற்சி
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன் கொழும்பில் உயர் மட்ட கூட்டம் ஒன்ரை ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள வகை செய்வதாக உறுதியளித்தார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று…
மன்னார் ஆயருடன் அமைச்சர் ரிஷாத் சந்திப்பு
மன்னார் மாவட்ட ஆயர் இம்மானுவேல் பர்ணார்ந்து அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்று காலை (௦1) ஆயர் இல்லத்தில் சந்தித்து பேசினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வுகள் மற்றும் சந்தேக பார்வையை நீக்கி பரஸ்பர சமூகங்களுக்கு இடையே நல்லெண்ணத்தையும் கட்டி எழுப்புவதன் அவசியம் குறித்து இருவரும் கலந்துரையாடினர். எதிர் காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான…
திருகோணமலை மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்
திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி ,மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி,இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் பட்டதாரி பயிலுனர் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் இன்று (01) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 193 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது இதில் 40…
திருகோணமலை துறை முக அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்
ஜப்பான் நாட்டின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள திருகோணமலை துறை முக அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலொன்று இடம் பெற்றது. துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மற்றும் துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க ஆகியோருக்கிடையே இன்று (31) கொழும்பு துறை முக அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியின் மூலம் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதை…
தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ந்தேர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் – பதவிப் பெறுப்பேற்பு நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் உரை
தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் இன்று (30) காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி சில இனவாதிகள் பல்வேறு…
