News
டாக்டர்.ஜெமீலின் இராஜினாமாவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவராக இருந்த டாக்டர். ஜெமீல் தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும், கட்சி தொடர்பான அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததை அடுத்து, கட்சியின் அரசியல் அதிகார பீடம் கொழும்பில் நேற்று இரவு (28) கூடிய போது, அவரது இராஜினாமாவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக செயலாளர் எஸ்.சுபைதீன் தெரிவித்தார். (ஊடகப்பிரிவு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) Media Unit All Ceylon Makkal Congress Colmbo, Srilanka
அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகார பீடம் அங்கீகாரம் – செயலாளர் சுபைதீன் அறிக்கை
அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்தார். அதிகாரபீடக் கூட்டம் நேற்று (28) இரவு கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மற்றும் எமது தலைவர்…
சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் -முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.
ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சி போர்வைக்குள் சகல சிறுபான்மை கட்சிகளும் ஒன்றினைந்து அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடல் மூலமே தெரியவந்தது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (25) வியாழக் கிழமை அமைச்சர் சஜித் தலைமையில் செமட்ட செவண இரு மாதிரிக் கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…
திருகோணமலையில் இருமாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு
திருகோணமலையிலுள்ளா குச்சவெளி பிரதேச செயலகம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளிட்ட கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர் பெரிய குளம் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு கிராமம் இன்று (25) வியாழக்கிழமை வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் “பாவநாசம் 225வது கிராமம்” கையளிக்கப்பட்டது.இங்கு…
கந்தளாவில் நெசவுக் கைத்தெறி நிலையம் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியால் திறந்து வைப்பு
திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரண்டாம் கொலனி பகுதியில் கைத்தெறி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டன. பசுமைப் பெண்கள் அமைப்பு மற்றும் ஒஸ்லோ பெண்கள் சிறு குழு ஆகிய இரு பெண்கள் அமைப்பும் இணைந்து எம்.ஜே எனும் நெசவுக் கைத்தெறி நிலையம் இன்று (21) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் தலைவிகளான திருமதி.ஜெரா அருளானந்தம், திருமதி நைரூஸ் ஆகியோர்களது தலைமையில் இடம் பெற்ற இவ்…
350 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானங்களை பெறும் 500 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் அபேட்சகர் நளீம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) இரவு இடம் பெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச அபிவிருத்திகள் குறைபாடுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் வருகை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (19) காலை கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் அறுகம்பை பீச் ஹோட்டல் ஒன்றில் இடம் பெற்றது. பிரதேச அபிவிருத்திகள், குறைபாடுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் முக்கியஸ்தர்களுடன் கேட்டறிந்து கொண்டார். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன்…
எருக்கலம்பியடி கிராமத்திற்கான அதி நவீன பாதை அமைப்பிற்காக 110 மில்லியன் ஒதுக்கீடு
கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் அவர்களது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்குளம் பிட்டி கிராமத்திற்கான அதி நவீன பாதை மற்றும் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது சுமார் 110 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இவ்…
புதிய சமுர்தி பயனாளிகளுக்கு உரித்துப் படிவம் வழங்கும் வைபவம்!!!
நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் வைபவம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டன. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப் படிவமு இன்று (18) கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் வழங்கப்பட்டன கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக…
இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டேன்- முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காக போராடிவருகின்றோம். நியாயம் கிடைக்கும்வரை அரசியலமைப்புக்கு உட்பட்டு போராடுவோம். தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்று தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், இந்த நாட்டை அமைதியற்ற சூழலில் வைத்திருக்க எண்ணும் இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்….
நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வல்லமை படைத்த மாவட்டம் திருகோணமலை என்பதை கடந்த தேர்தலில் புரிய வைத்துள்ளோம்- முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை தீர்மானித்த மாவட்டமாக திருகோணமலை இருந்துள்ளது என்பதை கடந்த கால வாக்குப் பதிவுகள் கூறுகின்றன. என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் மீரா நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று(17) மாலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்…
