News
மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்
மஹிந்த ராஜபக் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்தரமாக அரசியலிலிருந்து விரட்டுவோம். தோல்வியடையும் போராட்டங்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். எனவே , ஒரு முறை மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார். எனவே அவரை மீண்டும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்பதனை உறுதியாக கூறுகின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது…
பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா
பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தானே இருந்து வந்ததாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தானே பிரதமராகும் நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கட்சியை ஒருங்கிணைப்பதற்காகவும், வெற்றிபெற வைப்பதற்காகவும் பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்று அவர்…
ஜனாதிபதி நேற்று வழங்கிய விஷேட அறிவிப்பு
மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்பிருந்த அதே எதிர்ப்பே இன்றும் எனக்குள் உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்றது போன்றே அவர் எதிர்காலத்திலும் தோல்வியுறுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் அவரே இருக்க வேண்டும் என ஜனாதிபதிக்கான காலத்தை நீடிக்க வழி வகுத்தார். அது போன்றே கட்சியில் எத்தனையோ சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தும் பிரதமராக தாமே வரவேண்டும் என்று சிந்தித்து மற்றவர்களுக்குள்ள…
மஹிந்தவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!
பெரிய திருடனுக்கு வேட்பு மனு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிய திருடர்களுக்கு வேட்பு மனு வழங்கவில்லையாம். இதிலேயே இவர்களின் தரத்தை நாம் புரிந்துகொள்ளலாம். அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டை குடும்ப ஆட்சி இல்லாமல் நாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்டியெழுப்புவோம். என்று நிதியமைச்சரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பெரும்பான்மை பலமற்ற எமது அரசாங்கத்தினால் இவ்வளவு வேலைத்திட்டங்கள் செய்ய முடியுமானால் அடுத்து நீங்கள் தரப்போகின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுள்ள…
தேர்தல் சட்ட மீறல்கள் : பொது மக்கள் தகவல் தரலாம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்த முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும் என, பொலிஸ் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேட்புமனு வழங்கிய தினத்தில் இருந்து தேர்தல் நிறைவடையும் வரை பேரணி, வாகனப் பேரணி, ஊர்வலங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்பது உள்ளிட்டவை சட்டவிரோதமானதாகும். அதேபோல் பொது…
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு அடித்தளமிட்டவர் அமைச்சர் றிஷாத்
– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை வெற்றி பெற களமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மத் காமில் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெற்றி தொடர்பில் பாலக்குளி பிரதேச இளைஞர்கள் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில் :– இன்று வடபுலத்து முஸ்லிம்கள் கௌரமானதொரு மீள்குடியேற்றத்தை…
இஷாவிலிருந்து விடியும் வரை கஃபாவில் இறைவனை வணங்கும் 80 வயதுமுதியவர்!
சையதுஅலி பைஜி நீங்கள் படத்தில் பார்க்கும் முதியவர் ரஷ்யா, செசன்யாவை சார்ந்தவர். தற்போது உம்ராவிற்காக மக்கா சென்றிருக்கும் இவர் . 80 வயதை கடந்த கூன் விழுந்த வயோதிபர். அவர் மக்காவின் மண்ணை மிதித்த நாளிலிருந்து தினமும் இஷா தொழுகையில் இருந்து பஜ்ர் தொழுகை வரையிலும் ஓய்வின்றி உறக்கமின்றி இறைவனை நின்று வணங்கி கொண்டிருக்கிறார். இவரின் செயல் காண்போரை கவர்ந்து வருகிறது. இவரின் பாவங்களை மன்னித்து அல்லாஹ் இவரை பொருந்திக் கொள்வானாக!
நடமாடும் இறை இல்லம்!
சையதுஅலி பைஜி இந்தோனிஷியாவை சார்ந்த முஹம்மது சோப்ரீன் என்பவர் நடமாடும் இறை இல்லத்தை தோற்றுவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது. “கடந்த ரமழானில் நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு பெரிய சந்தைக்குள் நான் நின்று கொண்டிருந்தேன் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதும், ஒரு இடத்தில் அமர்ந்து நோன்பு திறந்து விட்டு மஃரிப் தொழுகைக்கா மஸ்ஜிதை தேடிய போது எனக்கு அருகில் எந்த மஸ்ஜிதும் தென்படவில்லை அப்போதுதான், இதற்கு ஒரு மாற்று ஏற்பாட்டை செய்வதின் அவசியத்தை நான் உணர்ந்தேன் மக்கள் அதிகம்…
மக்காவில் இரவு தொழுகையில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர்!
புனித ரமழானில் நேற்றைய இரவு தொழுகையை சிறப்பிக்கும் விதமாக சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவில் பங்கெடுத்தனர். நள்ளிரவில் நடைபெற்ற க்யாமுல் லைல் தொழுகையில் முஸ்லிம்கள் கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர். ரமழான் தொடக்கத்திலிருந்தே உலகின் பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் உம்ராவிற்காக வந்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையே ரமழானை முன்னிட்டு மக்கா மற்றும் மதீனாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சவூதி அரசு செய்துள்ளது.
மன்மோகன் சிங் பாதுகாவலர் கன்னத்தில் ‘பளார்’ விட்ட பெண்!
இந்திய, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை, வெளிநாட்டுப் பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட நபர்களையே அனுமதிக்க முடியும் என அவர் கூறி…
யால சரணாலயத்தில் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை
யால தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யால சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிறுத்தை மற்றும் ஏனைய மிருகங்களை கண்டவுடன் ஏனைய வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்துகின்றனர். இவ்வாறு அறிப்படுத்தியதும் விலங்குகள் இருக்கும் இடத்தை நோக்கி ஏனைய வாகனங்கள் வேகமாக வருகின்ற போது சிறுத்தை உள்ளிட்ட மிருகங்கள் வாகனத்தில் அடிப்பட்டு இறந்து விடுகின்றன. எனவே இதன் காரணமாக யால சரணாலயத்தினுள் செல்லும் பயணிகள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை…
ஜனாதிபதியை சந்தித்தார் புதிய கடற்படை தளபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிய கடற்படை தளபதி ரவீந்திர குணரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் 20 ஆவது கடற்படை தளபதியாக பதவியேற்ற ரவீந்திர விஜயகுணரத்னவுக்கு ஜனாதிபதியினால் நினைவுப் பரிசொன்றும் இச்சந்திப்பின்போது வழங்கிவைக்கப்பட்டது.
