News
சுயாதீன தொலைக்காட்சியின் இப்தார் நிகழ்வு
அஸ்ரப் ஏ சமத் சுயாதீன தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக தொலைக்காட்சியின் தலைமையகத்தில் அங்கு கடமையாற்றும் 12 முஸ்லீம் ஊழியா்கள் சோ்ந்து பிரமான்ட முறையில் இப்தாா் நிகழ்வை நடாத்தினாா். இந் நிகழ்வு ஜ.ரீ.என். 7 மணி சிங்கள செய்தியில் நேரடி ஒலிபரப்பட்டது. இந் நிகழ்வுக்கு சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சியின் பணிப்பாளா்கள் பொதுமுகாமையாளா்கள் ஊடகவியலாளா்கள் அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டனா். இந் நிகழ்வுக்கு மொலவி தாசீம் அனுசரனை வழங்கியிருந்தாா். அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, அசாத் சாலி மற்றும் முன்னாள்…
மஹிந்தவை யானை தாக்கும்!
மரத்திலிருந்து வீழ்ந்த மஹிந்தவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தகிதி யானைத் தாக்கும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் எனது பிறந்த ஊராகும், கம்பஹாவிற்கு நான் பரசூட் மூலம் குதிப்பது மாவட்டத்தை சுத்தப்படுத்தவே தவிர கொள்ளையடிப்பதற்கு அல்ல. குட்டி ரோமபுரியை அழிவடையச் செய்தது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த காலங்களில் மக்கள் பணத்தில் கை வைக்காத காரணத்தினால் நாடாளுமன்றில் ஊமை போன்று செயற்படவில்லை. நாட்டில் நிலவிய சட்டம் ஒழுங்கீனங்களுக்கு எதிராக உயிர்…
மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தேர்தலின் பின்னர் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏகமனதான தீர்மானமாகும். அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் தெரிவுசெய்யப்படுவார். யார் தடுத்தாலும் மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் எமக்கு இல்லை. அவரே தொடர்ந்தும் தலைவராக இருப்பார் எனவும் அவர்கள்…
தேர்தலை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தேர்தலை கண்காணிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு திட்டத்தின் தலைமை அதிகாரியாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினரான கிறிஸ்டியன் ப்ரேடா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் சில நாட்களில் இலங்கை வரவுள்ளார்.இதேவேளை இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தலை எந்தவித குறுக்கீடுகளும் இல்லாமல் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக கண்காணிப்பதே எமது நோக்கம் என்று கிறிஸ்டியன் ப்ரேடா தெரிவித்துள்ளார்.
அளுத்கம முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும்
கடந்த ஆண்டு அளுத்கமவில் நடைபெற்ற இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இது குறித்து அரசு விஷேட கவனம் செலுத்தவேண்டுமென முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் வேண்டுகோள் விடுத்தார். அளுத்கம அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் தெஹிவளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கை இராணுவத்தின் மேற்குப் பிராந்தியத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவெல இந்நிகழ்வில் கலந்து…
றிஷாத் பதியுதீன் வடக்கு, கிழக்கை வழிநடத்தும் எல்லாத் தகுதிகளும் பெற்றவர்
– ஜெஸ்மி எம்.மூஸா – முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இரண்டரை தசாப்தங்களாக ஏகபோக அரசியல் கட்சியாக ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த மு.கா. வுக்கு எதிரான ம.கா வின் எழுச்சி முஸ்லிம்களுக்கு ஊட்டமளிக்கக் கூடிய ஊக்க மருந்து போன்றது என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார் சம கால அரசியல் கள நிலைவரம் தொடர்பான கருத்துப் பரிமாறலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறியதாவது இத்தேர்தலில்…
வெஸ்டர் றியாஸ் அ.இ.ம.கா. வில் இணைவு
-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினராகாவும் கட்சியின் உயர் பதவிகளிலும் இருந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். மாகாணசபை உறுப்பினரின் செயற்பாடுகளில் திருப்திகொண்ட அமைச்சர் றிசாத் பதியூதீன், அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்து ஜெமீலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியதுடன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தேசியப்பட்டியலில் அவரது பெயரை…
நாடு திரும்புகிறார் சந்திரிகா
முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் கூட்டங்கள் பலவற்றில்…
மோசடி:கோத்தாவின் ஒப்பந்தங்கள் யாவும் பிரதமரினால் ரத்து
– லக்ஷ்மி பரசுராமன் – மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளை ஏழு மில்லியன் ரூபாவென பொய்கூறி தவணையடிப்படையில் விற்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலையீட்டி னையடுத்து ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா நேற்று தெரிவித்தார். ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்களுள் அநேகமானவர்கள் தமிழர்களாக இருந்த போதும் ஒப்பந்தப் பத்திரங்கள் தமிழில் இல்லாமை கவலைக்குரிய விடயமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக…
வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்ச அதிபர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான அனுமதியை தேர்தல் ஆணையாளர் நேற்று முன்தினம் அரச அச்சகத்துக்கு வழங்கியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அதிகளவில் போட்டியிடுவதால், வாக்குச்சீட்டு நீளமானதாக இருக்கும் எனவும் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் இஸ்லாம் கம்பீரத்துடன் உயர்ந்து நிற்கிறது!
சோவியத் கூட்டமைப்பு உடைந்து சிதறியபோது அதில் இருந்து ஆறு இஸ்லாமிய குடியரசுகள் உதயமானது. இதற்கு பிறகும் இன்றைய சோவியத் ரஷ்யாவில் 28 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சோவியத் ரஷ்யா முழுவதும் எட்டயாயிரத்திற்கும் அதிகமான இறை இல்லங்கள் அமைந்துள்ளன. மாஸ்கோ நகரில் மட்டும் ஐந்து மிக பெரிய இறையில்லங்கள் அமைந்து அலங்கரித்து கொண்டுள்ளது. ரஷ்யாவின் செசன்யா பகுதி முஸ்லிம்களை பெருபாண்மையாக கொண்ட ஒரு பிரதேசமாக அமைந்திருக்கிறன. இந்த ரமாழானில், இஸ்லாத்தை வளர்ப்தற்கும் – இஸ்லாமிய பிரச்சாரங்களை மேலும் விரிவு படுத்துவதர்கும் உரிய வாய்ப்பாக…
சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?
சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான் வெந்தயம். வெந்தயமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. மேலும் வெந்தயம் நீரிழிவை கட்டுப்பாட்டுன் வைப்பதோடு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அதே சமயம் வெந்தயம் உடலில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக விளக்கும் கொலஸ்ட்ராலுக்கும் நல்லது. வெந்தயம் எப்படி…
