News
பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம்.பிக்களல்ல ஜனாதிபதியே….!
எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பிரதமர் பதவி யாருக்கு வழங்குவதென எம். பிகள் அன்றி ஜனாதிபதியே தீர்மானிப்பதாக குறிப்பிட்ட அவர், நல்லாட்சிக்கு ஜனாதிபதியின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் ஐ. தே. க பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டும் எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் ஐ. ம. சு. மு. ஆதரவாளர்கள் கூட தங்களை ஆதரிப்பதாக குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி…
மைத்திரிக்கு குவியும் பாராட்டுக்கள்
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சர்கள் பலத்த பாராட்டுகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்கிழமை நாட்டிற்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மத்தியில் உற்சாகமான மனோநிலை காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது. அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பல அமைச்சர்கள் சிறிசேனவின் உரையை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். பின்னர் அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னரும் மகிந்தராஜபக்சவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தமைக்காக அமைச்சர்கள் ஜனாதிபதியை பாராட்டியுள்ளனர். பின்னர்…
ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு!
– சையது அலி பைஜி – எனது இல்லத்தை தொழகுடியர்களுக்காகவும் தவாப் செய்யகுடியவர்களுக்காவும் சுத்தம் செய்யுங்கள் என்ற இறைவனின் ஆணைக்கு இணங்க புனித இல்லத்தின் ஒரு பகுதியாக உள்ள ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு மக்காவில் நடை பெற்றது. மக்காவின் இமாம்களில் ஒருவரும் புனித தலங்களின் பராமரிப்பு குழுவின் தலைவருமான அப்துரஹ்மான் சுதைஸ் தனது கரங்களால் ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவுவதைதான் படம் விளக்குகிறது.
சவப்பெட்டியில் அமர்ந்து திருமண புகைப்படங்கள்
தமது திருமண புகைப்படங்கள் மங்களகரமாக இருக்க வேண்டும் என திருமண பந்தத்தில் இணையும் ஜோடிகள் விரும்புவது வழமை.ஆனால் மரணச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை வழங்குபவர்களாக பணியாற்றும் ஜென்னி டாய் மற்றும் தரென் செங் (30 வயது) ஆகியோர் தமது திருமணப் புகைப்படங்களை சவப்பெட்டியொன்றினுள் அமர்ந்தும் அதற்கு அருகில் நின்றும் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சிங்கப்பூரில் புங்கொல் நகரிலுள்ள பூங்காவொன்றில் எடுக்கப்பட்டுள்ளன. பிரபல மரணச்சடங்கு ஏற்பாட்டாளர் ஒருவரின் மகளான ஜென்னி, மரணம் தொடர்பில் சிறுவர்களுக்கான புத்தகங்களை எழுதியுள்ளார். மக்கள் வாழ்க்கையின் அங்கமாகவுள்ள…
எரிவாயுக்களின் விலை குறைப்பு!
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எரிவாயுவின் விலை 1496 ரூபாவாகவும் 5 கிலோ எரிவாயுவின் விலை 632 ரூபாவாகவும் 2.3 கிலோ எரிவாயுவின் விலை 300 ரூபாவாகவும் காணப்படும்.
அரச வாகனங்களை பயன்படுத்த மாதம் 1 லட்சம் கட்டணம்
தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் குறித்த அமைச்சுக்கு மாதத்திற்கு ஒருலட்சம் ரூபா செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சி செயலாளர்கள் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த…
குட்டிக் குழந்தையை காப்பாற்றிய ஐந்து வயது அஹமத்
இங்கிலாந்தின் கிழக்கு சஸ்செக்ஸ் கவுண்டியைச் சேர்ந்த யுசிகேஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பென்னி (வயது 68). இவரது மனைவி கரோலின் (வயது 57). இவர்கள் இருவரும் தங்களின் ஒரு வயது பேத்தியுடன் கடைக்கு சென்றனர். குழந்தை ஐரிஸ் தூங்கியதால் காரின் பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு பொருட்களை வாங்கினர். சாவியை எடுக்கவில்லை. திரும்பி வந்து பார்த்தபோது கார் தானாகவே பூட்டிக் கொண்டிருந்தது. காரைத் திறக்க எந்த வகையிலும் முடியாததால், ஐரிஸின் பாட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து…
புள்ளே, லசந்த, எரிக் பதவி விலகல்!
பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் பதவி விலகியதாக சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே தெரிவித்தார். பொதுத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்த பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தோல்வியடையும் என்ற கருத்து…
தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று முற்பகல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாரளுமன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து…
வாக்குகளைப் பெற மதுபானம் பகிர்ந்தளிப்பு
–எம்.ஐ.அப்துல் நஸார்– வாக்காளர்களுக்கு போதைப் பொருள் மற்றும் மதுபானம் ஆகியவற்றை பகிர்ந்தளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் புத்தளம், பதுளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது தேர்தல் சட்டங்களை மீறுகின்ற செயற்பாடு மாத்திரமல்லாது மதுவரி கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்ற செயற்பாடுமாகும் என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கிடையே மதுபானங்களை வினியோகித்தல் ஒரு வகையில் சமூக விரோத செயற்பாடு என்பதோடு இதன்…
குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிச் சென்ற தந்தை கைது
ஆஸ்திரேலியாவில் 2 வயது குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிச்சென்ற தந்தையை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். சிட்னியைச் சேர்ந்த ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். நேர்முகத் தேர்வு நடைபெறும் பெல்லா விஸ்டா என்ற பகுதி வந்தவுடன், தனது குழந்தையை காரினுள் வைத்து பூட்டிவிட்டு சென்று விட்டார். பூட்டிய காருக்குள் குழந்தை இருப்பதை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த…
கட்டுநாயக்கவில் விமானம் அவசரமாக தரையிறக்கம்
டுபாயிலிருந்து அவுஸ்திரேலிய நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான A 380 விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 75 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு திடீர் சுகயீனத்துக்கு உள்ளானதாகவும் அவர் தற்போது நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கட்டுநாயக்க விமானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட குறித்த விமானம் மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி…
