News
பரசூட் மூலம் குருநாகல் சென்ற மகிந்த ராஜபக்ச
ஊடகத்துறை அமைச்சர் ஜயந்த கருணாதிலக, மகிந்த ராஜபக்ச தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். தமக்கு 2 வருட கால ஜனாதிபதி பதவிக்காலம் எஞ்சியிருந்த போதே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ச மக்களால் நிராகரிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது, தமது மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் போட்டியிடாது பரசூட் மூலம் குருநாகல் சென்று தனது வாக்கைக்கூட தனக்காக பயன்படுத்த முடியாத கவலைக்குரியவராக மாறியுள்ளார் என்றும் ஜயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
ராஜித சேனாரத்னவுக்கு சர்வதேச விருது
உலக சுகாதார அமைப் பின் 2015 ஆம் ஆண்டுக் கான புகையிலை எதிர்ப்பு தின சர்வதேச விருதினை சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன வென்றெடுத்துள்ளார். ஆண்டுதோறும் உலக சுகாதார அமைப்பு அதன் 6 வலயங்களை உள்ளடக்கியதாக புகைத்தல் மற்றும் புகையிலைக்கு எதிராகச் செயற்படுவோரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகின்றது. இந்த விருதுக்கு ‘உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் விருது’ என பெயரிடப்பட்டுள்ளது. இம்முறை தென் கிழக்காசியாவுக்கான விருதை டாக்டர் ராஜித…
மஹிந்தவின் கூட்டத்தில் புதிய தேசிய கோடி
கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பகுதியில் இன்று மகிந்த ராஜபக்ஷ பங்கு பெறும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளதை சிங்கள மொழி முன்னணி ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் சிறுபான்மையினரை பிரநிதிதித்துவம் செய்யும் நிறங்களை அகற்றிய கொடிகளை ஏந்தி சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச பங்குபெறும் அரசியல் கூட்டத்தில் இந்த கொடிகள் பறக்கவிட்டபட்டற்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படும்…
தாஜூதீனின் படுகொலை செய்யப்பட்டார் – நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத்துறை
இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் விபத்து அல்ல. கொலை என்று குற்றப்புலனாய்வுத்துறையினர் கொழும்பு மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளனர். மரணத்துக்கு முன்னர் தாஜூதீனின் கழுத்துக்கு கீழ் பகுதியில் கடுமையான சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. அத்துடன் அவரின் பற்கள் உடைக்கப்பட்டிருந்தன. விலாஎலும்பு மற்றும் தொடை எலும்புகளில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர். இதேவேளை தாஜூதீனின் கொலை தொடர்பான இறுதி மரணப ரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்றும்…
மஹிந்தவால் அவருக்கே வாக்களிக்க முடியாத நிலை!
இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்வ தனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் உடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தேர்தல் மேடைகளில் இனவாத கருத்துக்களை கூறி நாட்டை தீயிட்டு நாசமாக்க முனையக்கூடாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அதிகாரப் பரவலாக்கம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா திலக தெரிவித்தார். இதன் பிரகாரம் இனவாதத்தைத் தூண்டி நாட்டை அராஜகப்போக்கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீரவன்சவிற்கு அடிபணிந்த கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பின்தள்ளப்பட்டமை கவலையளிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்….
அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்
மாரடைப்பால் நேற்று மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாரத ரத்ன விருதைப்பெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணச் செய்தியை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதேவேளை, அப்துல் கலாமின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவரது அனுதாப…
கல்குடா மக்கள் சேவைகள் மன்றம் அமீர் அலிக்கு ஆதரவு
– அனா – எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்; போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியை ஆதரிப்பது என கல்குடா மக்கள் சேவைகள் மன்றம் தீர்மாணித்துள்ளதாக அவ் அமைப்பின் தலைவர் எச்.எம்.எம்.அரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. எமது அமைப்பின் விஷேட நிருவாக சபைக்கூட்டம் (25.07.2015) சனிக்கிழமை இடம் பெற்றது இதில் கடந்த…
கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்
மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார் அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு அழைத்துச் சென்ற தலைசிறந்த மனிதர் மௌனித்துவிட்டார். நீங்கள் எப்போதும் எமக்கு முன்னுதாரணமாயிருப்பீர்கள். உங்களைப் போன்ற ஒரு தலைசிறந்த மேதை மறைந்தது பாரத தேசதுக்கு மட்டுமல்ல அறிவால் நிறைந்த முழு உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். உங்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை…
ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை : பொதுபல சேனா
பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட யாரும் ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை என அவ் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திர் அமைச்சர் கே.கே.டீ.எஸ். குணவர்தனவினால் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்களை தாக்கியதாக கூறிய கருத்திற்கு திலந்த விதானகே கண்டனம் வெளியிட்டதோடு, பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் சவால் விடுத்துள்ளார். நாட்டின் அமைச்சர் என்ற ரீதியில் போலியான கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம் இனத்தின்…
இலங்கையில் ISIS ஆபத்தில்லை – மூக்குடைந்த ஞானசார
ஐ.எஸ்.ஐ.எஸ்.களினால் இலங்கையில் ஆபத்து கிடையாது என காவல்துறையினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.இலங்கையில் குறித்த தீவிரவாத இயக்கம் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். தமது உயிருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான ஐ.எஸ்.ஐ.எஸ். வாதி தம்மை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், குறித்த இயக்கம் இலங்கையில் செயற்பட்டு வருவதற்கான எவ்வித ஆதரங்களும் கிடையாது எனவும், அவ்வாறான அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும்…
அப்துல் கலாம் காலமானார்
மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு…
உலக முஸ்லிம்கள் ஒன்று பட்டு எழ வேண்டும் – பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம்
முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலத்தை மீட்டு எடுக்க முஸ்லிம் உலகம் ஒன்று பட்டு எழ வேண்டும் பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம் வேண்டு கோள்! இன்று பைத்துல் முகத்தஸில் தொழுகைக்காக சென்ற பலஸ்தீன முஸ்லிம்களுக்கும் இஸ்ரேல் பொலிஸ் துறைக்கும் இடையே மாபெரும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் ஸ்ரேலின் பொலிசார் இறை இல்லத்திற்கு உள்ளேயே கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்து புனித தலத்தின் புனிதத்தை சீர் குலைக்க முனைந்துள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் பொலிசார்களை எதிர் கொண்ட பாலஸ்தீன முஸ்லிம்கள் பலர் காயமடைந்தனர்இந்த…
