News
24 மணி நேரத்தில் விபத்துக்களில் ஏழு பேர் உயிரிழப்பு; 26 பேருக்கு காயம்
நாடளாவிய ரீதியில் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுக்கு வந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்ததுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளை, நாரம்மல, பன்னல, ஹுங்கம, கிரிஉல்ல மற்றும் புளத் சிங்கள ஆகிய பகுதிகளிலேயே இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை தம்புள்ளை பொலிஸ் பிரிவின், தம்புள்ளை – கெக்கிராவை பிரதான வீதியின் மிரிஸ்கோணியாவ சந்தியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில்…
அமெரிக்காவின் சதித்திட்டமே உள்ளக விசாரணையாகும்
யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை. தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உள்ளக போர்க்குற்ற விசாரணையானது அமெரிக்காவின் சதித்திட்டமாகும். இது நாட்டுக்கு ஆபத்தானது என சிரேஷ்ட ராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். மற்றபடி போர்க்குற்ற விசாரணைகள் இதற்கான பரிகாரமாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே தயான் ஜயதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.குறித்த செவ்வியில் அவர்தொடர்ந்து கூறியுள்ளதாவது,உலகின் எந்தவொரு நாடும்…
மஹிந்த நன்றிகெட்ட அரசியல் சந்தர்ப்பவாதி: எஸ்.பி
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்தே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய திவயின ஞாயிறு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், தான்திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். “இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், இந்தத் தடவை தேர்தல் ஆரம்பித்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ, பசில் மற்றும் கோத்தபாய…
8ஆவது பாராளுமன்றம் நாளை! புதிய எம்.பிக்கள் விரும்பிய ஆசனங்களில் அமர ஏற்பாடு
இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன வரிசைகள் நிரந்தரமாக உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார். நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இலங்கையின் 08வது பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வு ஆரம்பமாகும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுபாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அன்றையதினம் காலை கூடி சபாநாயகரை தெரிவு…
கிழக்கு மாகாணத்தில் வரட்சி: 225,000 பேர் பாதிப்பு!
கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சி காரணமாக சுமார் 2,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 1,25,000 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 68,000 பேரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 26,000 பேரும் இவ்வரட்சி காரணமாக நோரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடுமையான வரட்சி காரணமாக அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இங்குள்ள நிர் நிலைகளும் வற்றியுள்ளது. குடி நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கால்நடைகளுக்கான…
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களில் பலர் படுகொலை
வெள்ளை வானில் கடத்தப்பட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கிரித்தலே இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இயங்கி வந்த சித்திரவதை மற்றும் கொலை முகாமில் கடுமை யாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வெளியிடங்களில் உள்ள கல்லறைகளில் மேல் பாகம் திறக்கப்பட்டு அந்த கல்லறைகளுக்குள் மறைத்து வைக்கப்…
நீதிமன்றம் செல்லும் தேர்தல்கள் ஆணையாளர்!
நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பான முறைப்பாடுகளுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார காலத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பாக சுமார் 1156 முறைப்பாடுகளுக்கெதிராக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்லவுள்ளார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்வது இதுதான் முதற் தடவையாகுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார். இதன்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளையும் பரிசீலனை…
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை த.தே.கூ. துரிதப்படுத்த வேண்டும்
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்ந்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் வலியுறுத்தியுள்ளார். வட மாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை சொந்த வாழிடங்களில் குடியமர்த்த முன்னர் வடக்கு, கிழக்கு இணைப்பு, குறித்து பேசுவது அர்த்தபூர்வமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் தனிமாகாணம் போன்ற கதைகள் ஜனவரி 8ம் திகதியும்…
ஜனாதிபதிக்கும் முன்னணி கட்சி தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று காலை இக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி தலைவர்களுக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச நேற்று குறிப்பிட்டிருந்தார். இக் கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி கலந்துகொள்ளவுள்ள நிலையில் தங்கள் கருத்தை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய…
பாலித்த தேவரப் பெருமவின் புதல்வர் உயிரிழந்தார்
அளுத்கம, பேருவளை கலவரத்தின் போது முஸ்லிம்களுக்காக போராடியவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாலித்த தேவரப் பெரும அவர்களின் புதல்வர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. 25 வயது ஷான் தேவரப் பெரும என அறியப்படும் இவர் கடந்த சில காலமாக சுகயீனமாக இருந்து வந்ததுடன் நேற்று மாலை 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகிறது. இலங்கை முஸ்லிம்களின் சகோதரகாக வாழ்ந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப் பெரும அவர்களுக்கு acmc.lk வாசகர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
முஸ்லிம் காங்கிரஸின் விசமப்பிரசாரம் பலிக்கவில்லை : தயா கமகே
பொதுத் தேர்தலுக்கு முன்தினம் கூட என்னை ஒரு சிங்களவரென்றும், முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கக்கூடாதெனவும் முஸ்லிம் காங்கிரஸ் விசமப்பிரசாரம் செய்தும் கணிசமான முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்திருந்தனர். இத்த மக்களுக்கு பெருநன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிந்தவூர் மத்தியகுழு அலுவலகத்தில் நடைபெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி பகரும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஐக்கிய…
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பாடசாலைகள் செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதோடு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும்…
