News
கொகா கோலாவுக்கு மன்னிப்பு!
கொகாகோலா நிறுவனத்திற்கு தற்காலிக அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. களனி கங்கையில் எண்ணெய் கழிவு கலப்பதாக குற்றம் சுமத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றாடல் அனுமதிப்பத்திரம் அண்மையில் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டிருந்தது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீளவும் அனுமதிப்பத்திரத்தை வழங்க சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. இவ்வாறான தவறுகள் மீள இழைக்கப்படாது என நிறுவனம் உறுதியளித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய காரணத்தினால் தற்காலிக அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக அதிகார சபையின்…
8 ஆவது பாராளுமன்றனம்.. கரு ஜயசூர்யா சபாநாயகராக நியமிக்கப்பட்டார்
8ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
8ஆவது பாராளுமன்ற முதல் அமர்வு. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளின் விபரம்
– எம். எஸ். பாஹிம் – எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது சம்பிரதாயபூர்வ அமர்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கோலாகலமாக இடம்பெறுகிறது. சம்பிரதாயபூர்வ அமர்விற்கு முன்ன தாக சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவுக்காக பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடுவதாக பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நில் இத்தகவலை தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெற இருப்பதோடு புதிய சபாநாயகராக கரு ஜயசூரியவின் பெயர் பிரதமர் ரணில்…
மைத்திரியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது தாம், தேர்தல் காலத்தில் ஜனாதிபதி தொடர்பில் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக விமல் வீரவன்ச, மைத்திரிபாலவிடம் மன்னிப்பை கோரினார். எனினும் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போனவை போனவையாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் தாம் எதிரிடை அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். இந்தக்கூட்டம் நேற்று…
சவூதியில் 9 மாதங்களில் 5.5 இலட்சம் பேர் நாடு கடத்தல்
சவுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 32500 பேர் மீது பல்வேறுபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இவர்கள் சட்டத்திற்கு புறம்பான சவுதியில் நுழைய உதவியவர்கள், sponsor ஐ விட்டு வெளியே வந்து வேலை பார்த்தவர்கள் ,visa காலாவதி அகியும் நாட்டுக்கு செல்லாமல் மற்றும் visa புதிப்பித்தல் செய்யாதது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவர்கள். இதை தவிர 280 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இது வரை 30 லச்சம் திறஹம் பிழை வசூலிக்கப்பட்டுள்ளது. இவர்கள்…
சபாநாயகராக கரு ஜெயசூரிய?
எட்டாவது நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான கருஜயசூரியா சபாநாயகராகத் தெரிவு செய்யப்படலாம் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரு ஜயசூரியா சபாநாயகராக தெரிவாகலாம். இதேபோல் பிரதிசபாநாயகராக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.
சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது : மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், சமல் ராஜபக்ஷவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவி குறித்து சமலிடம் யாரும் தொடர்புகொண்டு பேசவில்லையெனவும், அது பொய்யான தகவலென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிரணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும்…
இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் – அமெரிக்க எழுத்தாளர்
இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக மேற்குலகம் மற்றும் சில அறிவு ஜீவிகளும் கூவி வரும் நிலையில் அமெரிக்காவின் அறிவு ஜீவியும் பிரபல எழுத்தாளருமான சூயி அவர்கள் இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் என்றும் இஸ்லாமிய மார்கத்தில் ஆண்கள் தான் அப்பாவிகள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். உலகம் எண்ணுவது போல் இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக முதலில் தாம் எண்ணியதாக கூறும் சூயி சில மாதங்கள் சவுதி அரேபியாவில் வாழும் வாய்ப்பு கிடைத்த போது தான் தனது…
குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர்!
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது ? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள்…
கடுமையான இடி மழைக்கு இடையேயும் கஃபாவை மக்கள் வலம் வரும் அழகிய காட்சி !
மழை இறைவனின் மிக பெரிய அருள்களில் ஒன்றாகும். இந்த மழையின் மூலமே பூமி உயிரோட்டம் நிறைந்ததாக நீடிக்கிறது. இந்த மழையின் மூலமே பூமி பசுமை நிறைந்ததாக மாறுகிறது . இந்த மழையின் மூலமே பூமியின் நிலத்தடி நீர் வளம் வழர்கிறது. இறைவன் எங்கு எப்போது மழையை இறக்க வேண்டும் என்று விரும்புகின்றானோ அங்கே அவன் விரும்பும் நேரத்தில் மழையை இறக்குகிறான் . கடந்து சென்ற மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை மக்கா மாநகரை அலங்கரித்தது. இடியுடன் கூடிய மழைக்கிடையேயும் இறைஇல்லத்தை வலம்…
வினாப் பத்திரங்களை திருத்தும் பணிகள் செப்டம்பர் 09 – 14 வரை
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாப் பத்திரங்களை திருத்தும் பணி செப்டம்பர் 9 முதல் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 38 பாடசாலைகளில் இப்பணி இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள 2907 நிலையங்களில் நடைபெற்ற தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரத்தி 926 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை, தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாப்பத்திரங்களை…
தொழுகையை நேரம் தவறாமல் தொழ பழகுவோம்!
கடமையான ஐந்து நேர தொழுகை என்பது நமக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி நம்மால் தொழுது விட முடியும். ஆனால் நம்மில் பலர் இந்த ஐந்து நேர தொழுகைகளில் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். எதற்கும் உதவாத சினிமாவுக்கு 3 மணி நேரத்தை ஒதுக்க நமக்கு நேரமிருக்கிறது. ஆனால் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த நமக்கு ஒரு நாளையில் அரை மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை. சவுதி அரேபியன் ஏர் லைன்ஸின் விமானியின்…
