News
கொண்டயாவின் புகைப்படங்கள்! (photo)
கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த காவற்துறையின் தடுப்பில் இருக்கும் போது தாக்கப்படவில்லை என காவற்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். எனினும் காவற்துறையினர் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியிருந்த துனேஷ் பிரியசாந்த, காவற்துறையினரின் தாக்குதலில் உடலில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் காட்டும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இதனால், காவற்துறைப் பேச்சாளார் தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறியிருப்பது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிறுமி சேயாவின் கொலை சம்பந்தமான…
ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை: அமைச்சர் மஹிந்த அமரவீர
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு நாங்கள் பயமில்லை. இலங்கையின் கடல் எல்லையை மீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும். அத்துடன் எல்லை மீறி வந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் மீன்பிடி…
றிஷாத் மீதான கல்லெறியும் ஏமாற்றப்பட்ட மக்களும்
– ஏ.எச்.எம்.பூமுதீன் – அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது. யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்சேனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் , எதிர்பார்ப்புக்கு கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவியை வழங்கி மு.கா அம்மக்களை ஏமாற்றி விட்டது. பொதுத்தேர்தலின்போது நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கெல்லாம் சென்ற ரவூப் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஆசையை ஊட்டி அம்மக்களின் வாக்குகளை சூரையாட பெரும் கைங்கரியங்களை எல்லாம்…
ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல்
ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவில் அதிர்ச்சி கொடுத்த 70 அடி நீளமான திமிங்கலம்!
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதி கடற்பரப்பில் 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. எனினும் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் எட்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் கடலினுள் மீண்டும் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 23ம் திகதி கொக்கிளாய் கடற்பகுதியில் நடைபெற்றுள்ளது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கலம் கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உயிருடன்…
மஹிந்த ஆணைக்குழுவின் முன் பிரசன்னம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்காக செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே இன்றும் நாளையும், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது.
மன்னிப்பு கேட்ட வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ.
ஜப்பானின் நடந்துவரும் வாகன கண்காட்சியில், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்தற்காக வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ. மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, வோக்ஸ்வாகன் டீசல் கார்களின் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்திருப்பதை கண்டறிந்து அது பற்றிய செய்தியை வெளியிட்டது. ஒரு கோடியே 10 லட்சம் டீசல் கார்களின் மாசுக்கட்டுப்பாட்டில் மோசடி செய்திருப்பதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதற்காக மன்னிப்பும் கேட்டது. இந்த செய்தி வெளியான பிறகு வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பங்குகள்…
இரகசிய மாளிகையல்ல; நிலக்கீழ் வதிவிடம் கோத்தா விளக்கம்
ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சொகுசு மாளிகையானது, இரகசியமாக அமைக்கப்பட்ட மாளிகையல்ல. மாறாக ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு சபை, இராணுவ தளபதி உள்ளிட்டோரின் ஆலோசனைக்கு அமைவாக அமைக்கப்பட்ட வதிவிடம் மட்டுமே என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரேயே இந்த நிலக்கீழ் பாதுகாப்பு வதிவிடம் அமைக்கப்பட்டது.அப்போதிருந்த சூழலில் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்புக் கருதியே அது நிர்மாணிக்கப்பட்டது. எவரினதும் தனிப்பட்ட தேவைக்காக அது அமைக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்…
கொழும்பு துறைமுகத்தில் மிதக்கும் நூலகம்!
எட்டு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு புத்தகங்களை கொண்ட மிதக்கும் உலக புத்தக கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. இக்கப்பலில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விடயங்களைக் கொண்ட பல தரப்பட்ட புத்தக கண்காட்சியும் இடம்பெறுவதாக இக்கப்பலின் தொண்டர் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அதிகாரியான எப். வின்ஸ்டன் தெரிவித்தார். அவர் மிதக்கும் புத்தகக் கப்பல் பற்றிய தகவல்களை மேலும் தெரிவிக்கையில் இலங்கைக்கு மீண்டும் வருகை தந்துள்ள லோகோஸ் ஹோப் கப்பலின் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பயன்…
கொஸ்லாந்தையில் மண்சரிவு இடம்பெற்று ஓராண்டு!
மலையக மக்கள் பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பேரிடியாக நிகழ்ந்த சம்பவம்தான் கொஸ்லாந்தை மண்சரிவு அனர்த்தம். கடந்த வருடம் பண்டாரவளை – கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் ஒரு கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போனது யாவரும் அறிந்ததே! ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடம் இதேநாள் காலை வேளையில் ஏற்பட்ட குறித்த அனர்த்தத்தால் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதேவேளை, அவர்களில் பலரின் சடலங்களையேனும் மீட்கமுடியாத அவலநிலை ஏற்பட்டது. அத்துடன் சுமார் 10…
ஆணைக்குழு முன் மஹிந்த இன்றும் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார். கடந்த தேர்தல் காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளின் போது அரச தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி குறித்த ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(NF)
தேங்கிக் கிடக்கும் 6700 முறைப்பாடுகள்
இலஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் லஞ்ச, ஊழல்கள் தொடர்பான 6700 முறைப்பாடுகள் தேங்கிக் கிடப்பதாக அறியக்கிடைத்துள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், இத்தகவல்களை நேற்றைய செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டுள்ளார். இவற்றில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த சில மாதங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவாகும். தற்போதைய நிலையில் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் கீழ் 170க்கும் மேற்பட்ட பொலிசாரும், நான்கு விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழுவின்…
