News
முஸ்லிம் மாணிக்க வியாபாரி மடகஸ்காரில் கொலை
இலங்கை – காலி பிரதேசத்தில் வசித்து வந்தவரும் தெல்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மாணிக்க வியாபாரியான நயிம் ஹாஜியார் (வயது-56) மடகஸ்காரில் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணிக்க வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு மடகஸ்கார் சென்ற போது இவர் தங்கியிருந்த அறையில் வைத்தே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தன்னுடன் கொண்டு சென்ற பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன் இவரது ஜனாசா நேற்று மடகஸ்காரில் நல்லடக்கம்…
பொலிஸ் கெப் புகையிரதத்தில் மோதி விபத்து
அம்பலங்கொட – கெபு ஹெல பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பற்ற புகையிரத கடவையை, கடக்க முற்பட்ட பொலிஸ் கெப் ரக வாகனம், புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது வாகனத்தின் இயந்திரம் செயல் இழந்துள்ளது. பிறகு அதில் இருந்த பொலிஸார் இறங்கியுள்ளனர். பின்னரே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விமானப்படை வீரர்களுக்கு முகப்புத்தக பாவனைக்கு தடை?
விமானப்படை தளபதி சுகத் புளத் சிங்களவின் உத்தரவுக்கு அமைய விமானப்படை நிர்வாக இயக்குனர் இதற்கான அறிவுறுத்தலை விமானப்படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார். அதன்படி சுமார் 4000 விமானப்படை வீர வீராங்கனைகள் தமது முகப் புத்தகத்தை பயன்படுத்தும் உரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் தற்போது விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் பயன்படுத்திவரும் முகப்புத்தக கணக்குகளையும் அவர்கள் மூட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக விமானப்படை வீரர்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே இவ்வாறு முகப் புத்தக தடை அமுல் செய்யப்பட்டுள்ளதாக…
உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு!
உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இதன் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அழகுக்கல் நிறுவகம் மதிப்பிட்டுள்ளது. எனினும் இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டுள்ளார்….
இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று மாலை நான்கு மணி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதி, பண்டாரநாயக்க சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை ,…
சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது
இந்தியாவுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது, அதற்குப் பதிலாக வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், இந்தியாவுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படப் போவதாகவும் இதனால் இலங்கையை இந்தியா ஆக்கிரமித்துவிடும் என்றும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இதில் உண்மையெதுவுமில்லை. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெளிவான அறிக்கையொன்றை விடுத்தார்.தனது இந்திய விஜயத்தின் போது சீபா உடன்படிக்கை தொடர்பாக பேசப்படவில்லை. அவ் உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது என்றும் தெரிவித்தார். தேசப்பற்று தொடர்பாக பேசும்…
எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் மட்டுமே.. நிலக லங்கார தேரர்
– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் – யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்றப்பட்ட பின்னரும் எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மட்டுமே. எங்களின் இன்ப துன்பங்களிலும் அவர் பங்கேற்பவர் என ஸ்ரீ பன்வௌ விகாராதிபதி நிலக லங்கார தேரர் தெரிவித்தார். வெலி ஓயா பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) அமைச்சர் றிஷாட் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டு அந்த பிரதேச மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஸ்ரீ பன்வௌ பகுதியில் இடம்பெற்ற கூட்ட மொன்றில்; உரையாற்றிய…
நபிகள் நாயகத்தின் கொள்கைகள் மட்டுமே இந்த உலக அமைதிக்கு ஒரேயொரு தீர்வு
நோபல் பரிசு பெற்றவரும் , திபெத்திய ஆன்மீக் தலைவருமான தலாய்லாமா அவர்கள்.கூறும் போது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழிகாட்டக் கூடிய இறைவனால் கொடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்றால் அது அல்-குர்ஆன் என்று வர்ணித்தித்துள்ளார். மேலும், இந்த மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவை செய்த ஆன்மீக தலைவர் என்றால் அது நபிகள் நாயகன் மட்டும் தான் அவரின் வாழ்க்கை இந்த மனிதகுலத்திற்கு சிறந்த உதாரணமாகும். இந்த உலகத்தில் அமைதியை நிலைநாட்டவும் பயங்கரவாதம் மற்றும் கொடுங்கோன்மையை முடிவுக்கு கொண்டுவரவும் நபிகள் நாயகம்…
கொலன்னாவை நகர சபை தலைவர் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலன்னாவை நகர சபை தலைவர் பத்ம உதய சாந்தவை கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பைமலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி எதுவும் தெரியாது: மஹிந்த
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மேலும் 9 கட்சிகள் இணையவுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளிவருகின்றமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியை ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைப்பது தொடர்பில் எந்தவொரு நபரும் தன்னுடன் இதுவரை பேசவோ அல்லது அபிப்பிராயங்களோ கேட்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள மஹிந்த, வேலையற்ற ஒரு சிலர் இவ்வாறான கதைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழில்நுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியை உருவாக்குவதில் மும்முரம் காட்டும் மஹிந்த அணி
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கும் நோக்கில் மஹிந்த அணியானது புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த வாரமும் இடம்பெற்றதாகவும் நாளை செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ…
