News
பாகிஸ்தானின் 8 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்கிறது
இலங்கைக்கு தமது நாட்டின் 8 ஜேஎப்-17 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையை பாகிஸ்தான் செய்துக்கொண்டுள்ளது. பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப்பின் தற்போதைய இலங்கை விஜயத்தின் போது இது சாத்தியமாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் நவாஸ் செரீப்பும் மைத்திரிபால சிறிசேனவும் நேற்று (5) செய்து கொண்ட 8 உடன்டிக்கைகளில், பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இந்த 8 விமானங்களை இலங்கைக்கு…
வீதிகளில் தனிமையில் செல்லும் பொதுமக்கள் மிக அவதானம்
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலங்களாக வீதியோரத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் வீதிகளில் தனிமையாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள சன நடமாட்டம் குறைவாக உள்ள உள்வீதிகளினால் பொதுமக்கள் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வருபவர்கள் தங்க ஆபரணங்களை அபகரித்துச்செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை தவிர்த்துக்கொள்வதற்காக வேண்டி குறிப்பாக பெண்கள்…
ரஷ்யா உருவாக்கும் எலி படை
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.களை ஓழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எஸ். களை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவ படை’யை தயார் செய்து வருகிறது. எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றை ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தில் பயன்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. எலிகளின் மூளையை இணைக்கும் மைக்ரோ சிப் ஒன்றைய சிகிச்சையின் மூலம் அதன் தலைக்கு உள்ளே வைக்கப்படும். இதன் மூலம் எலிகளின் மூளை…
நவாஸ் ஷரீப் கண்டிக்கு விஜயம்
நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு செல்லவுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கண்டி ஜின்னா மத்திய நிலையத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது . பாகிஸ்தான் பிரதமர் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கும் செல்லவுள்ளதுடன் அங்கு மரக்கன்று ஒன்றினையும் நடவுள்ளார். நேற்று (5) முன்தினம் நாட்டிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த சூழ்ச்சிகள் மூலமே தோற்கடிக்கப்பட்டாராம்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கை நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட தினம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொம்பே உடுபில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கம் மகிந்த மீது கொண்டுள்ள அச்சமே இதற்கான காரணமாகும்.நல்லாட்சி அரசாங்கம் மகிந்தவை அரசியலிலிருந்து ஒரம் கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம்…
சோள உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படலாம்
க்லைபோசெட் எனும் களைநாசினியை தடைசெய்தமையால் சோளஉற்பத்தியில் 20 வீதம் வீழ்ச்சி ஏற்படலாம் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாரையும் பழிவாங்குவதற்காக இந்த களைநாசினியை தடை செய்யவில்லை எனவும் குறித்த களைநாசினியால் ஏற்படுகின்ற பாதிப்பை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின்போது நிவாரண அடிப்படையில் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட உரத்தை 1200- 1300 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் எனவும் சில வர்த்தகர்கள் அதனை 3000-3500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்…
பிலிப்பைன்ஸில் வேகமாக வளரும் இஸ்லாம்
கிறித்தவ நாடான பிலிப்பைனில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேப்போல் அரபு நாடுகளில் பணிப்புரியும் கிறித்தவர்களும் இஸ்லாத்தை ஆர்வத்துடன் அறிந்து சாரை சாரையாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். பிலிப்பைனில் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்கள் பள்ளிவாசலில் தொழுவதற்கு நாளுக்கு நாள் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் சாலைகளில் தொழுது வருகின்றனர். இதனால் இடப்பற்றாக்குறையை போக்கும் வண்ணம் அண்மையில் பிலிப்பைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரிய பள்ளிவாசலை தான் படத்தில் பார்க்கிறீர்கள். யார் அல்லாஹ்வுக்காக ஒரு வீட்டை கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ்…
கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு
பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரை கைது செய்து கைவிலங்கிட்டிருந்தனர். இந்நிலையில் சந்தேக நபர் திடீரென தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. சந்தேக நபர் கைவிலங்குடன் வாகனம் ஒன்றினை கலஹா நகரின் ஊடாக செலுத்திச் சென்ற…
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
கோதுமை மா ஒரு கிலோவின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 87 ரூபாவாக இருந்த கோதுமைவின் விலை 89 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் செய்த உதவிகளை மறக்கமாட்டோம் – மைத்திரி
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வருகை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். மேலும், யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிகளவான உதவிகளை வழங்கியதாக நினைவூட்டிய ஜனாதிபதி அதை தாமும் தமது நாட்டு மக்களும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மனித உரிமைகள்…
மஞ்சள் பாதையைக் கடப்பதற்கான, மின்சார இயந்திர தொழிட்ப ரோபோ கண்டுபிடிப்பு
-இக்பால் அலி- மாவத்தகம பிரின்ஸ் சந்திரசேன குளிர்சாதனப் பெட்டி திருத்தும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒருவர். இவர் சிறு பராயம் முதல் இன்று வரை புதிய கண்டு பிடிப்புக்களைச் செய்து பல முதல் தர விருதுகளைப் பெற்றவர். சர்வதேச மட்டத்தில் வருடாந்தம் நடத்தும் புதிய கண்டு பிடிப்பாளர் போட்டியில் பங்கு கொண்டு முதல் பரிசினையும் கூட பெற்றுள்ளார். கைகளை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மவுசு பயன்படுத்தும் நவீன முறை கருவியை கண்டு பித்தமைக்காக சுவிஸ்லாந்து நாட்டில்…
வசீம் தாஜூதின் கொலை, சர்வதேச உதவியை நாடவேண்டும் – கொழும்பு பல்கலைகழகம்
வசீம் தாஜூதினின் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வசீம் தாஜூதினின் உயிரிழப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் திரட்டப்பட்ட சீ.சீ.டி.வி காணொளிகள் ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டடிருந்தது. எனினும் சீ.சீ.டி.வி காணொளிகளில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த வாகனங்களின் இலக்கங்களையும் அதில் காணப்படும் நபர்களையும் அடையாளம் காணமுடியாத நிலை காணணப்படுவதாக பல்கலைகழகத்தினர் நீதிமன்றில் குறிப்பிட்டள்ளனர்.
