News
வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்!
நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். வழக்கு முடிந்து சிறைச்சாலை வாகனத்தில் சந்தேகநபர்கள் ஏறியபோது, ஊடகவியலாளர்களை தமது அருகில்…
குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி – மைத்திரி
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஸ்ரீ போதிராஜா விகாரையில் ஆரம்பமான நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றிய பொழுதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கை வரவுள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இவர்களின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இலங்கையில் வர்த்தக சமூகத்தினரை மையமாகக் கொண்டு ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிசலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஏதுக்கள்…
மாணவன் தாக்கியதில் ஆசிரியர் வைத்தியசாலையில்!
காலி பிரதேச பாடசாலையொன்றில் இந்தத் தாக்குதல் சம்பவம் இன்று (11) முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. காலி பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவனாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலினைத் தொடர்ந்து படுகாயமடைந்த ஆசிரியர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே மாணவர் அவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பிலான விசாரணைகளை அக்மீமன பொலிஸார்…
மிஹின் லங்கா விமானம் பறப்பதை 6 மணிநேரம் தாமதப்படுத்திய எலி!
– ஆர்.கிறிஷ்ணகாந் – கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் (9) காலை மதுரை நோக்கி புறப்படவிருந்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்தமான என் 3001 என்ற விமானம் புறப்படுவதற்கு 6 மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்திற்குள் எலியொன்று புகுந்துள்ளதாக பயணியொருவர் விமானப் பணியாளர்களுக்கு அறிவித்ததனையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். விமான நிலைய பொறுப்பாளர்கள் எலியை விமானத்திலிருந்து வெளியேற்றுவதற்கு ஏறத்தாழ 6 மணித்தியாலங்கள் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் முற்பகல் 7.30 மணிக்கு…
ஒபாமாவின் செல்ல நாயை கடத்த திட்டமிட்டவர் கைது
தன்னை இயேசு கிறிஸ்து என கூறிக்கொண்ட ஒருவர் ஒபாமாவின் நாய்களில் ஒன்றைக் கடத்திச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டுள்ளார். 49 வயது ஸ்கொட் ஸ்டோக்கட் என்பவரே வொஷிங்டன் ஹோட்டலில் இரகசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் செல்ல நாய்களில் ஒன்றான போவை ஸ்கொட் கடத்துவதற்கான திட்டம் குறித்து இரகசிய தகவல் மூலம் தெரிய வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபரின் வாகனத்தில் சில ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள்…
மாவோ சேதுங்கின் 120 அடி உயரமான சிலை தகர்க்கப்பட்டது
சீனாவில் அண்மையில் திறக்கப்பட்ட மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை ஸ்தாபித்து 1976 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்த மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை, ஹெனான் மாகாணத்தின் ஸுஷிகாங் நகரில் கடந்த மாதம் திறந்துவைக்கப்பட்டது. 120 அடி (36.6 மீற்றர்) உயரமுடையதாக இச்சிலை அமைந்திருந்தது. 9 மாத காலமாக இச்சிலையின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. சுமார்…
போதையில் வாகனம் செலுத்திய புதுமைப் பெண்கள்
மது போதையில் மோட்டார் சைக்கிளை வீதி முழுவதும் அங்கும் இங்குமாக செலுத்தி வந்த இரு இளம் பெண்கள் களுத்துறை, வடியமண்கட சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு அங்கு மது அருந்திவிட்டு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தப் பெண்கள் பாணந்துறையிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் எனவும் வாதுவை நகரில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண், கடும் போதையில் நிற்க முடியாது…
2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும்
பூமியை தொடர்ந்து செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக சந்திரனில் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஏற்கனவே, சந்திரனுக்கு மனிதர்கள் சென்று கால் பதித்து விட்டனர். அதன் அடிப்படையில் அங்கு புதிய கிராமங்களை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் ஏஜென்சி சந்திரன் 2020–2030 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. அதில் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய…
மூத்த ஊடகவியலாளர் கே.கே.இரத்தினசிங்கம் காலமானார்!
‘சுடர்ஒளி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) நேற்று (10) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இவர், பல மூத்த தமிழ் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார். கண்டிப்புக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கே.கே.ஆர். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில்…
டெங்கு அபாயம் அதிகரிப்பு!
நாடு முழுவதும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 837 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதில் அநேகமான நோயாளர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களுக்குள் வட பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு…
