News
பௌத்த பிக்குகள் ஜோதிடம் பார்க்கத் தடை
இலங்கையில் பௌத்த பிக்குள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடத் தடை விதிக்கப்பட உள்ளது. பௌத்த பிக்குகள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடவும், அது தொடர்பிலான விளம்பரங்களை செய்யவும் தடை விதிக்கும் வகையிலான சட்டங்களை விரைவில் அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. வர்த்தக, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளல், வாகனம் செலுத்துதல் ஆகியன உத்தேச புதிய சட்டத்தில் தடை செய்யப்படவுள்ளது. புதிய சட்டத்தின் அடிப்படையில் சமூக சேவைகளில் ஈடுபடுதல், சமய மற்றும் கல்வி நடவடிக்கைகளில்…
துமிந்த சில்வாவுக்கு பிணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சொத்துக்கள் விவரங்களை பிரகடனம் செய்யாமையை எதிர்த்தே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன
தட்டிக் கேட்க தயங்கமாட்டோம் – அமைச்சர் றிஷாத்
நமது நாட்டில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த கதை போன்று தற்போது கொண்டுவரப்படும் புதிய யாப்பும் இருக்கக் கூடாது என்றும், சிறுபான்மை மக்களின் நலன்களை பேணும் வகையில் உத்தேச யாப்பு அமைவதன் மூலமே நமது வெற்றி தங்கியுள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். தேர்தல் திருத்தச் சட்டத்திலும், அரசியல் யாப்பு திருத்தத்திலும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எமது கட்சி அதனைத் தட்டிக்…
கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்- கர்தினால்
கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பு பிசோப் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும். இவ்வாறான கட்சிகள் அமைப்புக்கள் எம்மை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதில்லை. மாறாக எம்மை பிளவடையச் செய்யவே முயற்சிக்கின்றன. நீண்ட கால அடிப்படையில் கடும்போக்குடைய அமைப்புக்கள் மற்றும் இன மதவாத அடிப்படையிலான அரசியல்…
பாண் விலை அதிகரிப்பு
அனைத்து பேக்கரி உற்பத்தி விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு இறாத்தல் பாணின் விலையும் பனிஸ் ஒன்றின் விலையும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிணை
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் சத்தியபிரமாணம்
சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு யாத்திரிகர்களின் தேவை கருதி திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் நியமனம் பெற்றுள்ளனர். நோர்வூட் பொதுசுகதார பரிசோதகர் கே.ஜெய்கணேசன், மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் பீ.கே.விஜேவீர அம்பகமுவ, பீ.கே.எல்.வசந்த பொகவந்தலா பொது சுகாதார பரிசோதகர் பொகவந்தலா ஆகிய மூவரே நேற்று ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜ.பீ.டீ லியனகே முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்
– K.Kapila – இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் (12) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. அதிகாரிக்கு முன், துணிச்சலை வெளிப்படுத்திய றிஷாத்
இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப் பாதுகாத்தவர்கள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக் காலத்தை முடித்துவிட்டு, ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை…
சிராஸ் மீராசாஹிப் நிபுணத்துவ ஆலோசகராக நியமனம்
– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனால் நேற்று (11) நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. அத்தோடு அமைச்சில் அமைந்துள்ள அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருக்கான அலுவலகத்தில் தனது கடமைகளை சிராஸ் மீராசாஹிப் பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பதவியானது கைத்தொழில் மற்றும் வணிக…
ஹிருணிகா பிணை பெறுவதில் கின்னஸ் சாதனை
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறுகிய கால இடைவௌியில் பினையில் விடுவிக்கப்பட்டமையானது, புதிய கின்னஸ் சாதனை என, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “ஹிருணிகா விரைவாக சிறை சென்று விரைவாக வௌியே வருவார்” என தான் முன்னரே கூறியதாகவும், அது தற்போது நடைபெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பேராசிரியர் நாலக கோடஹேன பல நாட்களாக சிறையில் இருக்கையில், ஹிருணிகா குறுகிய காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டமை கின்னஸ் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (11)…
மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
– ஜவ்பர்கான் – மண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அரசடியில் இப்போராட்டம் இடம்பெற்றது. மாவட்ட எம்.பீ.வியாழேந்திரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
