News
GSP வரிச்சலுகையை மீளப்பெற அரசு விண்ணப்பம்
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மனித உரிமைகள் நிலை பற்றிய கரிசனைகளால், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை, ஐரோப்பிய ஒன்றியம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தியது. இந்தச் சலுகையை மீளப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசாங்கம், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நேற்று முறைப்படி விண்ணப்பித்தது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா; இலங்கை…
இணக்கசபை வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதன்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி…
பாலித்த தேவபெரும நல்லாட்சிக்கு விடுத்த கோரிக்கை!
மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு இன்றைய தினம் உரிய தீர்வு கிடைக்காவிடில் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் பாலித தேவபெரும தெரிவித்துள்ளார். மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் முதலாம் ஆண்டுக்காக 10 மாணவர்களை சேர்த்து கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் பெற்றோர்களால் மத்துகம வலயகல்வி அலுவலகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. இதனால்…
இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எல்லைதாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 6 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை இன்னும் சில மணிநேரத்தில் நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பதுளையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநரான அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம், நாளை 30ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆங்கில மொழியை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவால் ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனுடன் நீடிப்பது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என மெஜாரிட்டி ஆக 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இதனால் பிரிட்டனில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குழப்பங்கள் மற்றும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து, ஆங்கில மொழியை ஐரோப்பிய…
மனித ஆற்றல் தரவரிசை வெளியீடு: பின்லாந்து முதல் இடம், இலங்கைக்கு 50 ஆவது இடம்
மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதோடு இலங்கை முன்னேறி 50 ஆவது இடம் கிடைத்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை,சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இம் மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது….
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நன்மைக்குரியதல்ல – டேவிட் கெமரூன்
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல என அந்நாட்டின் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விலக போவதாக அறிவித்த பின்னர் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய…
வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டங்கள்
வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக குறித்த வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல நகரங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று கிரிபத்கொட, கடவத்த, மாகொள, களனி ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நகரங்களின் வர்த்தகர்கள் நடைபயணத்தை மேற்கொண்டு கிரிபத்கொட சந்தி வரை சென்று அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
71வது பிறந்த நாளைக் கொண்டாடும் சந்திரிக்கா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவரது பிறந்த நாள் நிகழ்வானது அநுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதியில் சமய வழிப்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் ஹொரகொல்லயில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் இலங்கையின் 5வது ஜனாதிபதி என்பதுடன் 1994-2005 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆட்சி செய்த முதல் பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்தான்புல் தாக்குதல் – ஜனாதிபதி இரங்கல்
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வௌியிட்டுள்ளார். அத்துடன், உலகலாவிய தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுமையுடன் நிறுபோம் எனவும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றிரவு சுமார் 10.00 மணியளவில் டாக்சியில் வந்த மூன்றுபேர் பயணிகள் வருகை பகுதி கூடத்துக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவர் இயந்திர துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் பீதியடைந்த மக்கள்…
பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வந்தால் கவனம்
பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகவுள்ள பேஸ்புகில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன. ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது. பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது மடிக்கணனி, கையடக்கதொலைபேசி மற்றும் கணனிகளுக்கு வைரஸ்கள் பரவுகின்றன. புகைப்படங்கள் மூலம்…
