News
மலேஷியா செல்கிறார் மஹிந்த
ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாடு வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகி, 4ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்த்தன, லொகான் ரத்வத்தை, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு வரும் செப்ரெம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையிலும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ…
பேராதனை மோதல் சம்பவம் மூன்று குழுக்கள் விசாரணை
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மோதல் சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பேராதனை பல்கலைக்fழக இணைந்த சுகாதார கல்விப் பீட சிரேஷ்ட மாணவர்கள் சிலருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்குமிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 12 க்கும் மேற்பட்ட மொழிபேசும் மாணவர்கள் காயமடைந்த போதும் 5 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்….
விபத்தில் 20 பேர் படுகாயம்
குருநாகலிலிருந்து பத்தரமுல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸும், குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் துல்ஹிரியவில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தோர், வறகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
350 பேருக்கு சமாதான நீதவான் பதவிகள்
நாட்டில் சமுக சேவையில் ஆர்வம் காட்டி வரும் 350 பேருக்கு சமாதான நீதவான் பதவகள்வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இம்மாதம் 31ம் திகதி புத்தசாசன அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. சமாதான நீதவான் பதவி மக்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்படும் கௌரவ பதவியாகும்.
மஹிந்த வடக்கு மக்களை காட்சிப்பொருளாக்கினார்
யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடக்கில் பல புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். கட்டிடங்கள் அமைக்கப்பட்டன, வீதிகள் புனரமைக்கப்பட்டன, ஆனால் வடபகுதி தமிழ் மக்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்தவத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார். வடக்கு மக்களின்…
நீதிமன்றில் மோதிக் கொண்ட பெண்களுக்கு விளக்க மறியல்!
நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்…
கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலம் மானனெல்ல பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டது. கொழும்பு பம்பலப்பிடிய பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தாஜூடீன் கொலை! தொலைபேசி அழைப்பு விபரங்கள் முழுவதும் அழிப்பு
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையின் மேலதிக செயலாளர்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களில் இது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தொலைபேசி அழைப்பு விபரங்களை அழித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் பணியை விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது….
வருகிறது ஊடக மத்திய நிலையம்
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துல்லியமாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஊடக மத்திய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சின் கட்டமைப்பின் கீழும் பிரதமர் செயலகத்துடன் இணைந்தும் இந்த ஊடக மையம் செயற்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை தகவல்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பொறிமுறைகளை செயற்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையையும், துல்லியத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செயற்பாடு மிகவும் அவசியமாகும்….
இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு
இத்தாலியில் நேற்று (24) இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 159 பேர்உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய இத்தாலியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 6.2 ரிச்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 159 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: நாடாளுமன்றில் விசேட பிரேரணை
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி நடத்தப்படுகின்றமைக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று (25) பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தால் கூட்டு எதிர்கட்சியினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. அதன் ஒரு கட்டமே அண்மைய நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து டலஸ் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டமை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொரள்ளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்க கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…
ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாடு
இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர் ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்களின் நாட்டில் அமுல்படுத்தப்படவிருக்கும், வீடமைப்பு மற்றும் குடியிருப்பு செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. வீடமைப்பு, குடியிருப்பு அபிவிருத்தி, நகரமயமாதல், போன்ற…
