News
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் மற்றுமொரு பகுதி காணி; விரைவில் விடுவிப்பு
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட காணியில் விடுவிக்கப்படாமலிருக்கும் எஞ்சிய நான்காயிரத்து 400 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக யாழ் பாதுகாப்புச் சேவைகள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார் . கீரிமலை வீடமைப்புத்திட்டம் இம்மாத இறுதியில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். நேற்று (7) கீரிமலைக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்காக…
மாற்றுவலுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் : இலங்கை அணியில் 9பேர்
பிரேசிலில் இடம்பெறவுள்ள மாற்றுவலுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற, இலங்கையிலிருந்து 9பேர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது. அனில் பிரசன்ன ஜயலத் என்பவரின் தலைமையின் கீழ் இந்த அணி அனுப்பப்பட்டுள்ளது. இவர் 100, 200 மீ. ஓட்டப் போட்டிகளிலும் நீளம்பாய்தலிலும் பங்குபற்றுகிறார். இவர் ஏற்கனவே இந்தப் போட்டிகளில் சாதனையாளராக உள்ளார். 2012இல் இலண்டனில் இடம்பெற்ற போட்டிகளில் ஒரு வெண்கலப் பதக்கத்தை தங்கள் குழு வென்றெடுத்தாக குழுத் தலைவர் ஜயலத் தெரிவித்தார். செப்டெம்பர் 7இலிருந்து 18 வரை இடம்பெறும் இந்தப்…
இலங்கை போக்குவரத்து சபை தனியார்மயப்படுத்தப்படமாட்டாது.
இலங்கை போக்குவரத்துச் சபையை எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில இன்று(8) பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதில் அளிக்கையிலேயே இந்;;த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சேவை தேசிய சொத்தாகும் இதனால் எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னைய அரசியல்வாதிகளின் தவறுகளாலேயே புதிய அரசியல் கலாசாரத்தின் தேவைஎழுந்துள்ளது.-ஜனாதிபதி
கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் தத்தமது நிலைகளை சீர்குலைத்துக்கொண்டதன் விளைவாக, தற்போது புதியதோர் அரசியல் கலாசாரத்திற்கான தேவை எழுந்துள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை தொகுதியின் தலைமை அலுவலகத்தை நேற்றுமுன்தினம் (செவ்வா ய்க்கிழமை) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டர்.
மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல
-எம்.ஐ.முபாறக் – இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுல் அதிகமானவர்கள் யுத்தம் என்ற போர்வையில் ஒளிந்துகொன்டு தமிழருக்கு கொடுமை இழைத்தவர்களாகவே காணப்படுகின்றனர். யுத்தத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில்-புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டமையும்-காணாமல் ஆக்கப்பட்டமையும்- கொல்லப்பட்டமையும்-இடம்பெயர்க்கச் செய்யப்பட்டமையும் நீண்ட வரலாறாக இருக்கின்றன. இந்தக் கொடுமைகள் அத்தனைக்கும் நீதி தேடி இன்று தமிழர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டு நீதியை அடையும் கட்டத்தை எட்டியுள்ளன. பிரச்சினைகள் சர்வதேசமயமாக்கப்பட்டமையும் இராஜதந்திர நகர்வுமே இந்த சாதகத் தன்மைக்கு காரணம்….
சுதந்திர தின விழாவில் பிரேசில் அதிபருக்கு எதிராக கூச்சல்
பிரேசில் அதிபராக இருந்த டில்மா ரூசோப் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மைக்கேல் டெமர் புதிய அதிபராக கடந்த வாரம் பதவியேற்றார். இந்த நிலையில் பிரேசில் சுதந்திர தினவிழா நேற்று தலைநகர் பிரேசிலியாவில் நடந்தது. அதையொட்டி ராணுவ அணிவகுப்பு மரியாதை நடந்தது. விழாவில் பங்கேற்ற அதிபர் மைக்கேல் டெமர் திறந்த ஜீப்பில் ஏறி அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மைக்கேல் டெமரின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக ‘ஓ’ வென…
சமூகத்தை முன்னேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் – மலேஷிய இணையதளம்
-எம்.ஐ.அப்துல் நஸார் – மதகுருமார் மீதும் இராஜதந்திரிகள் மீதும் தாக்குதல் நடத்துவதை விடுத்து சமூகத்தை முன்னேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் என மலேஷிய இணையதளம் காட்டமான அறிவுரை வழங்கியுள்ளது. எப்.எம்.ரி என்ற இணையத் தளமே தாக்குதலில் இலங்கை இராஜதந்திரி மீது தாக்குதல் மேற்கொண்டோருக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளது.
பாடசாலை என்பது நல்ல மனிதர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும் – அமீர் அலி
-நாச்சியாதீவு பர்வீன் – பாடசாலை என்பது நல்ல மனிதர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும். நல்ல ஒழுக்கமுள்ள,பண்புள்ள சிறந்த பரம்மரையினரை உருவாக்குவதில் பாடசாலையின் பங்களிப்பு அளப்பெரியது, எனவே கல்வியில் நீங்கள் காட்டும், ஆர்வத்தைப்போலவே ஒழுக்க விழுமியங்களை பேணுகின்ற விடயத்திலும் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கு…
இலங்கை வருகிறார் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. tm
பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தொலைத்தொடர்பு சேவை!
விரைவில் ஆரம்பமாகும் பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தொலைத்தொடர்பு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மடு பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற (08) நிகழ்வின் போதே வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தாது’
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படுவதன் பின்னர், தற்போது செயற்பாட்டிலுள்ள இலங்கை பத்திரிகைச் சபை மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகிய இரண்டும் செயலிழக்கச் செய்யப்படும் என, நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, நேற்றுப் புதன்கிழமை (07) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அந்தச் செய்தியாளர் மாநாட்டின் போது, தொடர்ந்து உரையாற்றிய…
