News
நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டுமா?
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டையை, வாக்காளர்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை, தேர்தல்கள் செயலகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனடிப்படையில், “லிங்க்” இணையத்தளத்துக்குச் சென்று, அதிலிருக்கின்ற 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை கிளிக் செய்யவும். அதில் உள்ள கட்டங்களில், தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஒன்பது இலக்கங்களுடன் ஆங்கில எழுத்து மற்றும் நிர்வாக மாவட்டத்தைத் தட்டச்சுச் செய்யவும். உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சரியாகப் பதிவு செய்தால், 12 இலக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதுவரை…
ஈரானியர்கள் முஸ்லிம்கள் இல்லை – சவூதி அரேபியாவின் தலைமை முப்தி பத்வா
ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா நிர்வகிப்பது குறித்து ஈரான் உயர்மட்ட தலைவர் கண்டனம் வெளியிட்ட அடுத்த தினமே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஆயதுல்லாஹ் அலி கமெனியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி அடையவில்லை என்று அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் மாஹியின் புதல்வர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாத்திற்கு முன்னர் ஈரானில் ஆதிக்கம் செலுத்திய சொரொஸ்ட்ரியனிஸம் மதத்தையே இதன்போது…
லசந்தவின் சடலத்தை தோண்டியெடுப்பதற்கு, நீதிமன்றம் உத்தரவு
கொலைச் செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தை தோண்டியெடுப்பதற்கு கல்கிஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் இதற்கான அனுமதியை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கமைய, அவருடைய சடலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி தோண்டியெடுக்கபடவுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது – அமைச்சர் கிரியெல்ல
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது, மூடவும் முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மாணவர்கள் பல்கலைக்கழகமொன்றுக்கு செல்வது கல்வி கற்பதற்காக. ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பல்கலைக்கழகத்திற்குள் சங்கங்கள் கிடையாது. எனினும் நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாத தரப்பினர் பல்கலைக்கழகங்களில் சங்கங்களை அமைத்துக்கொண்டுள்ளனர். ஒர் அரசியல் கட்சி குருணாகலில் நடைபெற்ற போராட்டத்திற்கு 50 பஸ்களை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது, இனி…
வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு யோசனை சமர்ப்பிப்பு!
வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்துடன் சமர்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 11 வீதமாகக் காணப்படும் வற் வரியை 15 வீதமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.எனினும், உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது. அமைச்சரவையின் அனுமதியின்றி சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து புதிய வற்…
தந்தையின் தீர்ப்பு இன்று ; ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில்
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றிற்கு சற்றுமுன்னர் வருகைத்துந்துள்ளார். ஹிருணிகாவின் தந்தை பாரதலக்ஷ்மன் பிரேமச்சறந்திரவின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதால் இவர் நீதிமன்றுக்கு சமுகமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரத லக்ஸ்மன் கொலையின் இறுதி தீர்ப்பு – பலத்த பாதுகாப்பில் நீதிமன்றம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
துபாய் விமான தீவிபத்துக்கு விமானத்தின் சக்கரங்கள் தரை இறங்கும்போது செயல்படாததே காரணம்
துபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் நிறுவன விமானம் தரைஇறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. பயணிகள் அவசரகால வழிகளில் உடனே வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர். மீட்புப்பணியில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் பலியானார். இந்த விபத்துக்கான காரணம் பற்றி துபாய் விமான போக்குவரத்து ஆணையத்தின்…
ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பு கம்பெல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது . அனைத்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஐhதிக சேவக ஊழியர்கள் சங்கம் மகா நாடு தொடர்பாக தெரிவிக்கையில் 30ற்கும் மேற்பட்ட தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மகா நாட்டில கலந்து கொள்ள உள்ள விருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…
மலேரியா அற்ற நாடாக இலங்கை பிரகடனம்
இலங்கையை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளது கொழும்பில் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் வருடாந்த மாநாட்டில் இதற்கான சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மார்க்ரெட் சென் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று கையளித்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சமிந்த பெரேரா ஆகிய இருவரின் விளக்கமறியலும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீதிக்கப்பட்டுள்ளது. பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடரபுடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவ்விருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,…
வித்தியா கொலை வழக்கு! மரபணு அறிக்கையை கோரிய சந்தேகநபர்
மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் வாசித்து காட்டினால் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தான் விடுபட சாத்தியமுள்ளது என நீதவானிடம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவர் கூறியுள்ளார். குறித்த படுகொலை தொடர்பான வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்றிற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 12 சந்தேக நபர்களையும் நோக்கி நீதிவான் ஏதாவது உங்கள் சார்பாக விண்ணப்பங்களை மேற்கொள்ள உள்ளீர்களா? எனக் கேட்டார். இதன்போது 5வது…
