News
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்
இன்று 26.12.2016 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர் கள் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சிலவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு மக்கள் பாவனைக்கு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனினால் மன்னார் சிலாவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான 2000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் தாங்கி மக்கள் பாவனைக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் மற்றும் பள்ளி…
மட்டு. மாவட்டம் போதைவஸ்து பாவனையில் முதலாம் இடம்-பிரதி அமைச்சர் அமீர் அலி கவலை!
‘மட்டக்களப்பு மாவட்டம் போதைவஸ்து பாவனையில் நாடளாவிய ரீதியில்மு தலாம் இடத்தில் உள்ளது. என ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. இந்த மாவட்டத்திலே பிறந்தஇ மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இது மிகவும் கவலையளிக்கின்றது’ என்று என்று பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச வறியவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதி அமைச்சரும்…
புத்தளம் கடற்கரை வீதியில் இடம்பெற்ற அ.இ.ம.கா.வின் நிகழ்வு
கடற்றொழிலார்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல், வறிய மக்களுக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குதல் ,தொழிலதிபர் ஜிப்ரி கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வும் புத்தளம் கடற்கரை வீதியில் இடம்பெற்றபோது.
புத்தளம் ,நாகூர் மர்கஸ் பள்ளி வீதியை காபட் பாதையாக்குவதற்கான அடிக்கல் நடும் விழா
புத்தளம் நாகூர் மர்கஸ் பள்ளி வீதியை காபட் பாதையாக்குவதற்கான அண்மையில் இடம்பெற்ற அடிக்கல் நடும்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்து கொண்டார் இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி,புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசியல் அதிகாரங்கள், பதவிகள் அனைத்தும் நாம் அணிந்திருக்கும் ஆடைக்கு சமனாகும்
அரசியல் அதிகாரங்கள், பதவிகள் அனைத்தும் நாம் அணிந்திருக்கும் ஆடைக்கு சமனாகும். இந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்து வர நேர்ந்தால் அந்த ஆடையை கழற்றி எறிவதற்கோ,அதனை மாற்றுவதற்கோ அல்லது புதிய ஆடை அணிவதற்கோ நாம் தயங்கோம் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
“மஹிந்த அரசு கற்றுக்கொண்ட பாடங்கள் எல்லோருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்” – அமைச்சர் றிஷாத்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த வாரம் பிரதமர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட…
வடக்கு முஸ்லிம்களுக்கு ஓரங்குல காணியேனும் வழங்கப்படவில்லை முடிந்தால் நிரூபிக்குமாறு CV இடம் ஜனூபர் பகிரங்க சவால்
வடமாகாணசபை முஸ்லிம்களை அரவணைத்தே செல்வதாகவும் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை எனவும் மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார். முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை தான் அங்கே இருக்கவில்லை எனவும் இன்றைய பத்திரிகைச் செய்திகளைப் பார்த்த போது இந்தச்செய்தி தமக்கு அதிர்ச்சியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3000 முஸ்லிம்களுககு அல்ல 3 முஸ்லிம்களுக்காவது முதலமைச்சர் காணி வழங்கியிருந்தால் அதனை நிரூபித்துக்…
நல்லிணக்கத்திற்கு பாதகமான சம்பவங்கள் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்
இனி வரும் காலங்களில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எற்படா வண்ணம் அனைத்து தரப்பும் நடந்து கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இன நல்லிணக்கம் தொடர்பான விஷேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இன ரீதியான முரண்பாட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு சுமூகமான நிலைமையை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்கம் தொடர்பாக…
“உப்பு உற்பத்தியில் இரு வருடங்களில் இலங்கை தன்னிறைவு” அமைச்சர் றிஷாத் நம்பிக்கை
உப்பு உற்பத்தியில் இன்னும் இரு வருடங்களுக்குள் இலங்கை தன்னிறைவு அடையுமென்றும் அதற்கான பல்வேறு திட்டங்களையும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தென்னாசிய செயற்பாட்டு தளத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் செயற்பாட்டுத் தலைவர் தலைவர் சுதிர் என் முரளிதாஸ் தலைமையிலான தூதுக்குழுவினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இன்று (22) மாலை சந்தித்துப் பேசிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஐ நா செயற்பாட்டு நிர்வாகம் இலங்கையில் முன்னெடுத்து…
பண்டிகைக் காலத்தில் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு விஷேட வேலைத்திட்டம்
பண்டிகளைக்காலத்தில் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப் பாடு ஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொருட்களின் விலைகளை வேண்டுமென்று அதிகரித்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நாடுமுழுவதிலும் திடீர் சுற்றுவளைப்புக்களை மேற்கொண்டு சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை…
சந்தையில் அரிசியின் விலை உயர்வதை தடுப்பதற்காக அரிசியினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக போதுமான மழை கிடைக்காமையினால் வருடத்தில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர் செய்கை நிலங்கள் குறைந்துள்ளன. இதனால் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனக் கருதி விலை அதிகரிப்பை தடுப்பதற்கு பாதுகாப்பான தொகையொன்றை பேணுவதற்காக தனியார் துறையினரால் அரிசியினை இறக்குமதி செய்வதற்கும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியினை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவ்வரிசியினை முறையாக சந்தைக்கு பகிர்ந்தளிப்பதற்கும் கைத்தொழில்…
