News
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் என். வில்வரெட்னம் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
புத்தள மாவட்ட அ.இ.ம.கா பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட பிரதான காரியாலயத்தில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தகரங்கள் மற்றும் சீமந்து பொதிகள் அலி சப்ரி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி
27.12.2016 ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார, முகாமையாளர்களான பஷீர், அஸீஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
“சிங்கள, முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி” அமைச்சர் றிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு https://www.acmc.lk/?p=23395
ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்;படுத்தி சிங்கள – முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு இனவாதிகளின் இலக்காகுமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் அல் அஸ்ரபியா அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்ற அமைச்சர் ரிஷாட்…
வாழ்வாதார உபகரணங்களை கொண்டு வாழ்வினை முன்னேற்றுங்கள் – பிரதி அமைச்சர் அமீர் அலி
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவே இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை கொண்டு அவர்கள் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் வருமானங்களை ஈட்டி வறுமையின்றி வாழ வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். மட்டக்களப்பு மாவடத்தின் செங்கலடி பிரதேச செயலக நடைபெற்ற வாழ்வாதாரண உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி மேற் கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வாழ்வாதார உபகரணத்தை பெற்று செல்லும் ஒவ்வொரு…
“முன்னாள் பிரதமரின் மறைவு பேரிழப்பாகும்” அமைச்சர் றிஷாத்
முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இடதுசாரிச் சிந்தனையைக் கொண்ட முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயக, தனது அரசியல் வாழ்வை லங்கா சம சமாஜக் கட்சியின் மூலம் தொடங்கினார். பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டமையினால் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அமரர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் அரசியல் வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். மிக…
ஆன்மீகம் மற்றும் மொழிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பா.உ இஸ்ஹாக் ரஹுமான்
கலாவெவ கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (KESDA) மூலம் நடைபெற்றுவரும் ஆன்மீகம் மற்றும் மொழிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பரிசில்கள் வழங்கும்போது.
அஹதிய்யா பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்
மரதன்கடவல இஹலப்புளியன்குளம் அந்-நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.
கல்குடா சர்வதேச பாடசாலையின் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி
கல்குடா சர்வதேச பாடசாலையின் 10வது வருட பூர்த்தியும் 10வது மாணவர் வெளியேற்றும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சர்வதேச பாடசாலையின் தவிசாளரும் உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் , Dr.அப்தாப் அலி , திருமதி ஹயறுன்நிஷா அமீர் அலி சர்வதேச பாடசாலையின் தலைவர் கலீல் றகுமான் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். .
பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பம்
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
ஜெனீவா வைத்தியசாலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அனுமதி
தனிப்பட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜெனிவா வருகை தந்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு (வடக்கு) கல்வி சபை தலைவருமான ஏ.ஜே. எம். பாயிஸ் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக ஜெனீவா போதனா வைத்தியசாலையில் (Geneva University Hospital) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை (கொழும்பு மாவட்டம்) உறுப்பினரும், கொழும்பு (வடக்கு) கல்வி சபை தலைவருமான ஏ.ஜே. எம். பாயிஸ் கடந்த 20ம் திகதி தனிப்பட…
ஞானசாரருடன் அரசு மேற்கொள்ளும் பேச்சு, தீங்கையே விளைவிக்கும்
இனவாதம் பேசும் இனவாத கருத்துக்களை வெளியிட்டுவரும் ஞானசார தேரர் போன்றவர்களுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்ணயிக்கப்பட்ட சந்திப்பு செயற்றிட்டங்கள் (Engagement Process) பயனுள்ளவைகளாகத் தெரிந்தாலும் இறுதியில் தீங்கினையே (Impunity) விளைவிக்கும் என ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார். நல்லிணக்கம் தொடர்பாக கடும்போக்குவாத பௌத்த தேரர்களுடன் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மேற்கொண்டுவரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கருத்துக்களையே…
