News
கல்வியின் மூலமே சிறந்த சமூகத்தை நாம் உருவாக்கமுடியும் – பிரதி அமைச்சர் அமீர் அலி
கல்வியின் மூலமே சிறந்த சமூகத்தை நாம் உருவாக்கமுடியும் என்று வாகரை பால்சேனை கலை மகள் வித்தியாலயத்தில் பன்னையாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டார். இந் நிகழ்வு மில்கோ நிறுவனத்தை பிராந்திய முகாமையாளர் க கனகராஜா தலைமையில் இடம்பெற்றது தொடர்ந்தும் உரையாற்றுகையில். .. உழைக்கும் மக்கள் என்றும் மேன்மையானவர்கள் அவர்களின் உழைப்பு இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு என்றும் துணையாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்வியை உயர்ந்த நிலைக்கு…
16.14 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு
நேற்று 29.12.2016 ஆம் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலக செயலாளர் திரு கோபாலரட்ணம் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 16.14 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.
முன்பள்ளி மாணவர்களின் ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும் – A.R.M.ஜிப்ரி
முன்பள்ளி பருவ மாணவர்களின் உடல், உள, ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டியவர்களில் பெற்றோரும் முன்பள்ளி ஆசிரியர்களும் இன்றியமையாதவர்கள் என கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார். அண்மையில் சம்மாந்துறை அல் – அர்ஷத் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்டார் பாலர் பாடசாலையின் ஆண்டிறுதி அறுவடை எனும் தலைப்பிலான பரிசளிப்பு கலைவிழா அதன் அதிபர் எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில்…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீமந்து மூட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!
கஹடகஸ் திகிலிய மற்றும் மதவாச்சி பிரதேசத்தில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் சீமந்து மூட்டைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார மானியம் மூலம் அண்மையில்வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
வளர் பிறை கழகம் – பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு
நேற்று 29.12.2016 ஆம் திகதி வளர் பிறை கழகத்தின் புதிய நிர்வாக உறுப்பினருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
கல்விமான்களை கொண்ட சமூகத்தை உருவாக்குவதே எனது கனவு – பிரதி அமைச்சர் அமீர் அலி
எனக்கு பிடித்த இரண்டு சமூகங்ளில் ஒன்று உழைக்கும் சமூகம் மற்றையது கல்விக்காக பாடுபடும் சமூகமாகும். உங்களை பொறுத்தரை நீங்கள் அதிகமாக உழைக்கும் பால் பண்ணையாளர்கள். உங்களுடைய உழைப்பை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கின்றேன். என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மில்கோ பால் பண்ணையாளரின் முதலாம் தரத்திற்க்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் க. கனகராஜா தலைமையில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம…
ஜனவரி ஒன்பதில் முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுகின்றனர்
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஒன்று கூடி சமூகத்தின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் தீர்மானங்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிறிதொரு தினத்தில் சந்தித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரவுள்ளனர்.இது தொடர்பில் லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசியிடம் கருத்து வினவிய போது அவர் பின்வருமாறு…
அரசியல் அதிகாரங்களை அடாவடித்தனங்கள் மூலம் பெறமுடியாது – அமைச்சர் றிஷாத்
அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமோ சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதெனவும் அது இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடையெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பிரபல தொழிலதிபர் ஜிப்ரி அவர்களை மக்கள் காங்கிரசில் இணைக்கும்; நிகழ்வும், மீனவ சமூகத்திற்;கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் புத்தளம் கடற்கரைப் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி…
ஊடகவியளாளருக்கும் எனக்கும் எவ்விதப் பிரச்சினையும் இல்லை – பிரதியமைச்சர் அமீர் அலி
நேற்று (28) மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானத்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு இவ்வாறு கருத்தினை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில். சில மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். எதனை எங்கு பேச வேண்டும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை மேலும் தாங்கள்…
த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் – பிரதியமைச்சர் அமீர் அலி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(28.12.2016) புதன்கிழமை நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடக நண்பர்களை நான் அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு…
த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் – பிரதியமைச்சர் அமீர் அலி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(28.12.2016) புதன்கிழமை நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடக நண்பர்களை நான் அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு…
சண்டை அல்லது கருத்து மோதல்கள் ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு-அமீர் அலி
இந்த ஓட்டமாவாடிச் சந்தியில் ஓர் விபத்து நடந்தால் அங்கு சண்டை அல்லது கருத்து மோதல்கள் இடம் பெறும் அவ்வாறான கருத்து மோதல் கூட ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு அவ்வாறான என் கனவினை இந்த கல்லூரி கடந்த பத்து வருடங்களாக நிபர்த்தி செய்து வருகின்றது. கடந்த, 26. 12 . 2016 அன்று கல்குடா இண்டர் நெஷனல் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,…
