News
கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி
கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி பாடசாலையில் அண்மையில் (2017.02.17) நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டார்.
தாராபுரம் அல்-மினா முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி
மன்னார் தாராபுரம் அல் – மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர், திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (18) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்துச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
நேற்று 19.02.2017 ஆம் திகதி ஊத்துச்சேனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மோகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் , மீனவர்களுக்கான மீன் பிடி வலை, மண்வெட்டி, மற்றும் சோளன் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டது. யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக…
புத்தளம் ஆலங்குடாவிற்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விஜயம்
-A.R.A.RAHEEM நேற்று முன்தினம் (18) புத்தளம் ஆலங்குடா பகுதிக்கான திடீர் விஜயமொன்றை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் மேற்கொண்டார் வடக்கிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேறிய மக்கள் வாழும் கிராமமான ஆலங்குட மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வாழும் மக்களை சந்திப்பதற்காக இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள்…
மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத்
மன்னார் காக்கையாங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (17) கலந்து கொண்டார்.
பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக ஆக்க வேண்டும் – பிரதி அமைச்சர் அமீர் அலி
-எச்.எம்.எம்.பர்ஸான் தற்போதைய சூழலில் போதை வஸ்து பாவனையை அதிகம் அதிகம் பாவிக்கக் கூடியவர்களாக நம் இளைய சமூகத்தினர் ஆளாகியுள்ளனர் இந்த விடயமானது நம்மத்தியில் மிகக் கவலை தரும் விடயமாகவுள்ளது. என்று பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி நேற்று முன்தினம் 17ம் திகதி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மண்டபத்தில் கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். தொடர்ந்தும் அமைச்சர் பேசுகையில், போதை…
வர்த்தமானியில் மீள் பிரசுரிக்கப்பட்ட அரிசிக்கான உச்ச சில்லறை விலைகள்
அமைச்சின் ஊடகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று(17) அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை (MRP) வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார். அதன் பிரகாரம் வர்த்தமானியில் நேற்று நள்ளிரவு பிரசுரிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான உச்ச சில்லறை விலைகள் கீழே தரப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி—– கிலோ ரூபா 72/= (மாற்றமில்லை) உள்நாட்டு உற்பத்தி நாட்டரிசி———— கிலோ ரூபா 80/= இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி———-கெக்குலு…
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையம்
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட உள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணியை பார்வையிடுவதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி சென்று பார்வையிட்டார். பொருளாதார மத்திய நிலையம் அமைத்து தருமாறு முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் வேண்டிக் கொண்டதற்கு இனங்க இவ் மத்திய நிலையம் அமையப் பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். இவ் மத்திய நிலையம் அமையும் பட்சத்தில்…
மட்டக்களப்பு காஞ்சிரங்குடா பிரதேசத்தில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா
இன்று 18.02.2017 காஞ்சிரங்குடா தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கொளரவித்தனர். இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், மூர்த்தி…
“அமைச்சர் றிஷாட்டின் முன்மாதிரியை பின்பற்றினால் நிர்வாகப்பணிகள் இலகுவாகும்” – வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர்
அதிபர், ஆசிரியர் இடமாற்றத்திலும் பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகளிலும் தலையிடாதிருக்கும் அமைச்சர் றிசாட்டின் முன்மாதிரியை ஏனைய அரசியல்வாதிகள் முன்னுதாரணமாகக் கொண்டால் பணிகளை இலகுபடுத்த முடியுமென வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கும் அமைச்சர் றிஷாடிற்குமிடையிலான கலந்துரையாடல் சாளம்பைக்குளம் அல்-அக்ஸா மகா வித்யாலயத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட கல்விப் பணிப்பாளர் மேலும் கூறியதாவது, வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு பல்வேறு குறைபாடுகளும் பிரச்சினைகளும் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திப்பதற்கு…
வர்த்தமானியில் மீள் பிரசுரிக்கப்பட்ட அரிசிக்கான உச்ச சில்லறை விலைகள்
-அமைச்சின் ஊடகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று(17) அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை (MRP) வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார். அதன் பிரகாரம் வர்த்தமானியில் நேற்று நள்ளிரவு பிரசுரிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான உச்ச சில்லறை விலைகள் கீழே தரப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி————————– கிலோ ரூபா 72/= (மாற்றமில்லை) உள்நாட்டு உற்பத்தி நாட்டரிசி———————————— கிலோ ரூபா 80/= இறக்குமதி செய்யப்பட்ட…
கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கராத்தே போட்டி
கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ,மாகாண, தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு நேற்று 17.02.2017 ஆம் திகதி அதன் தலைவர் நவாஸ் மெளலவி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். பிரதி அமைச்சர் தொடர்ந்து உறையாற்றுகையில் . இக்கால கட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகளில் அதிகம் தங்களது பிள்ளைகளை கலந்து கொள்ள செய்வதன் மூலமும் எமது…
