News
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட நவவி MP
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.எம் தாஹிர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி…
ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு பிரதியமைச்சர் அமீர் அலி உடனடித்தீர்வு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் அறுவடை செய்யும் நெல் 15.02.2017ம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்முதல் செய்யப்படுமென்று கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நேற்று முன்தினம் 14.02.2017ம் திகதி மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலயே அவர் தெரிவித்தார். வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவிலுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் தங்களது நெல் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படவில்லையென்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்முதலை இன்னும் ஆரம்பிக்கவில்லையென்றும் ஓட்டமாவடியில் கவனயீர்ப்புப்பேரணியொன்றை…
நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி
அ/ நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.
அல்-நசார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்
கொழும்பு 14 அல்-நசார் வித்தியாலயத்தில் 2017 ஆண்டு தரம் ஒன்று பிள்ளைகளின் பெற்றோர்களினால் பாடசாலைக்கு PHOTOCOPY இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்ட நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் கலந்துகொண்டார்.
நாச்சியாதீவு அல்-ஹிக்கம் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்த இஸ்ஹாக் ரஹுமான் MP
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அண்மையில் அ/ நாச்சியாதீவு அல்-ஹிக்கம் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். இச்சந்திப்பின்போது கல்லூரியின் எதிர்கால வளர்ச்சி பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
பங்களாதேஸ் செல்லும் வீரர்களுக்கு றிப்கான் பதியுதீன் நிதி உதவி
உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டுப் போட்டிக்காக இலங்கையில் இருந்து செல்லும் 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிதி வழங்கிவைப்பு. நேற்று இரவு (15) உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து சென்ற 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் வடமாகாண சபையின் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் தன்னால் இயன்ற…
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட சோளம் விதைகள்
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட சோளம் விதைகளை பயிரிட்டு அதனை அறுவடை செய்யும் நிகழ்வு நேற்று 15.02.2017ஆம் திகதி மேட்டு நில விவசாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் கலீல் முஸ்தபா.கண்ணன் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருப்பலுகாம மேட்டுநில …
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர் அமல் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி தினேஷ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, பிரசன்னா ,…
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் வில்வரெட்னம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, கருணாகரன், மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP
அநுராதபுரம் , தேவாநம்பியதிஸ்ஸபுரம் அ/ அஸ்ஹர் முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையின் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.
கள்ளஞ்சியகாம முஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு
கள்ளஞ்சியகாம , காகம அ/ அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுரம மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் கலந்துகொண்டார்.
அ.இ.ம.கா.வின் வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் அமைச்சர் றிஷாத் சந்திப்பில் நேற்று முன்தினம் (13) ஈடுபட்டார்.
