News
அமைச்சர் றிஸாட் அவர்களின் பணிப்புரையின் கீழ் மாவடிப்பள்ளியில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்படன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின், வழிநடத்தலின் பிரகாரம் மாவடிப்பள்ளியிலுள்ள மக்களின் கண் பார்வைப் பிரச்சினைக்கான சிகிச்சையும் இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.30 மணியளவில் மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாயிசின் நிதி ஒதுக்கிவிட்டில் வீதி புனரமைப்பு.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் வெல்லம்பிட்டி கித்தம்பஹுவ வீதி கொங்கிரீட் இடப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மொஹமட் பாயிஸ் மற்றும் ஊர் மக்களும் கலந்துகொண்டனர்.
வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல் அக்ஸா மத்கபின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்
வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல் அக்ஸா மத்கபின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு, மக்தபின் அதிபர் கே ரபிவூத்தீன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இதன் போது ஊர் இளைஞர்களால் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் வி ஜயதிலக, வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் என் பி ஜுனைத், எஸ் ஐ எம் இமாம் உட்பட பலர்…
வவுனியா சூடுவெந்தபுலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்
பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வவுனியா சூடுவெந்தபுலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மது, அப்துல் பாரி, ஜிப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா பாவற்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்
பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வவுனியா பாவற்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக, ஆடை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மது, அப்துல் பாரி, ஜிப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம். அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு.
புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்று (11) நடைபெற்ற போது அமைச்சர் றிஷாத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த அச்சத்தை வெளியிட்டார். முஸ்லிம்…
சேர் ராசிக் பரீட் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்
கொழும்பு 15 சேர் ராசிக் பரீட் மகளிர் வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்படவுள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் குறைபாடுகளை தேடிப்பார்ப்பதற்காக இன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் பெருளியளாலர் திருமதி பட்டு கொரதரவும் கலந்துகொண்டனர்.
பிரதியமைச்சர் அமீர் அலி நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள்.
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமங்களான ஊத்துச்சேனை மற்றும் வடமுனை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வழிகாட்டலில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை இரு கிராமங்களிலும் இடம்பெற்றது. இதனடிப்படையில் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்…
அரசியல் என்றால் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பது இது இந்த காலகட்டத்தில் ஒரு கடினமான பணி
முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் அரசியல் என்றால் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பது. ஆனால் இது இந்த காலகட்டத்தில் ஒரு கடினமான பணியாகும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக்களை புனரமைப்பு செய்யும் பொருட்டு அட்டாளைச்சேனை பல நோக்கு…
றிஷாத்தின் பாராளுமன்ற உரை சமூக உணர்வும் சதி திட்டமும் !
முஸ்லீம் சமூக விடயங்களில் தமிழ் கூட்டமைப்பு நியாயமாக நடக்கவில்லை. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வட மாகாண சபை அணுவளவு உதவிகளையும் புரியவில்லை.வடக்கும் கிழக்கும் இணையவே கூடாது. வடக்கு முஸ்லீம் அகதிகள் விடயத்தில் அரசு, குருடர்களாகவும் செவிடர்களாகவும் உள்ளது.ஜனாதிபதி முறை ஒழிக்கப்படக்கூடாது.52 அமைச்சு செயலாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.25 மாவட்டங்களுக்கும் அரச அதிபர்கள் உள்ளபோதும் அதில் ஒருவர் கூட முஸ்லிம் அரச அதிபர் இல்லை. 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் மகபூல் என்ற ஒருவர் முஸ்லிம்…
கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா பிரதம அதிதியாக நவவி எம்.பி
தில்லையடி ரத்மல்யாய பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்க்கான அடிக்கல்நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 15 இலட்சம் ரூபாய் செலவில் இம்மைதானம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“புதிய தேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம்” பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் ஆணித்தரமாகத் தெரிவிப்பு…
சிறுபான்மை சமூகங்களான மலையக முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் மாலை (08/ 11/ 2017) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கும், கிழக்கும் தனித்தனி மாவட்டங்களாக இருக்க வேண்டுமெனவும், எந்தவொரு கட்டத்திலும் இவ்விரண்டு மாகாணங்களும் இணைக்கப்படக் கூடாதெனவும், அகில இலங்கை மக்கள்…
