News
‘பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு!
-சுஐப் எம்.காசிம்- அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி…
நல்லாட்சி அரசை பௌத்த பேரினவாதிகளே வழிநடாத்துவதாக அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு.. சற்றுமுன் கொழும்பு திரும்பிய பிரதமருடன் அவசர சந்திப்பு!
-ஊடகப்பிரிவு- நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளை பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும்…
‘அம்பாறை வன்முறை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷித் கல்குடா- அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- அம்பாறை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாயல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார…
‘ஸ்திரமான ஆட்சியே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும்’ புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
-ஊடகப்பிரிவு- அரசாங்கம் இன்று விழுந்துவிடும், நாளை விழுந்துவிடும் என ஊடகங்கள் கட்டியங்களையும், ஊகங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் ஸ்திரமான ஆட்சி ஒன்றையே வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் 60 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை (01) புல்மோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஆட்சியின் ஸ்திரம்…
‘இலங்கையின் கூட்டுறவு சொத்துக்களின் பெறுமதி 03 பில்லியன் ரூபாயினை அண்மித்துள்ளது’ அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- இலங்கை கூட்டுறவு சங்கத்தின் அடிப்படை சொத்தின் பெறுமதி ஏறத்தாள 03 பில்லியனாக அதிகரித்துள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ச்சியாக உதவி பெறுகின்றவைகளாக இல்லாமல், அவைகளும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் போட்டியிட முன்வர வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, கலதாரி ஹோட்டலில் சர்வதேச கூட்டுறவு அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆசிய பசுபிக் கூட்டுறவு அபிவிருத்தி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். …
வன்னி மாவட்ட நிலையான அபிவிருத்திக்கு இன,மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!
-ஊடகப்பிரிவு- யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார். வவுனியா சாளம்பைக்குள ஆயிஷா பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர்…
இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயற்சி! அம்பாறை பௌத்த விகாராதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு!
இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவித்து அதன் மூலம் மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்கு இட்டுச் செல்லும் பணியில் ஒரு சிலர் ஈடுபடுவது நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அம்பாறையில் தெரிவித்தார். அம்பாறை பிரதான பௌத்த விகாரையின் விகாராதிபதி சீலரத்ன ஹிமியினை அம்பாறை அரசாங்க அதிபர் பணி மனையில் வைத்து சந்தித்து தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு…
அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்! அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்!
-ஊடகப்பிரிவு- அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வனிகசிங்க தலைமையில் இன்று மாலை (28) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார். பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட…
சுயதொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட சுய தொழில் பயிற்சிகளை நிறைவு செய்தவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார். சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ) நிதி உதவியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள…
பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்? அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!
-சுஐப் எம்.காசிம்- அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தலைமையிலான குழு தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், கடைகள் மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் பள்ளி தர்மகர்த்தாக்களிடமும்,…
‘தயவு தாட்சண்யமின்றி உடன் கைது செய்யுங்கள்’ ஜனாதிபதி, பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து!
-ஊடகப்பிரிவு- அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியதோடு இது ஒரு திட்டமிட்ட முஸ்லிம்களுக்கெதிரான சதி நடவடிக்கையென சுட்டிக்காட்டினார். இன்று காலை அமைச்சரவை கூடிய போது அம்பாறை நாசகார நடவடிக்கை தொடர்பில் அமைச்சர்களான, ரவூப் ஹக்கீம், மனோ கனேசன் ஆகியோரும் இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில்…
“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்”அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- கூட்டுறவுத் துறை சார்ந்த அமைப்புக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவ்வமைப்புக்கள் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள், முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 03 மாதத்துக்குள் அந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு துறை சார்ந்த 14 பிரதான அமைப்புகளுக்கும், அமைச்சருக்கும் இடையே கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, கூட்டுறவு துறை சார்ந்த…
