Headlines

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைப் பொலிசாரால் கலைக்க முடியுமாயின் ஏன் இந்த கலகக்காரர்களை கலைத்திருக்க முடியாது? இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்று ஒரு வாரத்திலேயே கண்டியில் மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இதற்கான நியாயங்கள் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, இஷாக் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில், நாம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருடனும் பேசியபோது பொலிஸ்மா அதிபர்…

Read More

அம்பதென்ன, வெலேகடையில் முஸ்லிம் வர்த்தகரின் மர ஆலைக்கு தீ வைப்பு! அமைச்சர் ரிஷாட் களத்துக்கு விஜயம்!

அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில் சற்றுமுன்னர் (07) முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மரஆலைகளை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பவத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், களத்திற்கு விரைந்து தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டார்.              

Read More

கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கண்டியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை… கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி எரிக்கப்பட்டு வருவதற்கு…

Read More

இறைமையைப் பாதுகாக்கும் முஸ்லிம்களுக்கு இனவாதிகள் தரும் பரிசா இது? பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

-ஊடகப்பிரிவு- அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் பாதுகாப்பில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடியது போன்று, முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மதஸ்தலங்களையும், சொத்துக்களையும் நாசமாக்கும்…

Read More

‘கண்டி திகன சம்பவம் தொடர்பில் பிரதமர், ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-ஊடகப்பிரிவு- கண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக் கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பிரதியமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். பிரதியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்….

Read More

கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம்!

-ஊடகப்பிரிவு- கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பளிவாசல்கள், கடைத்தொகுதிகளை அமைச்சர் ரிஷாட் பார்வையிட்டார்.. பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு களத்திலிருந்து பொலிஸ்மா அதிபரிடம் மீண்டும் வலியுறுத்து திகனையில் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் இனவாதிகள் நடாத்திய மோசமான தாக்குதல் சம்பங்களை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து இன்று மாலை (05) அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்துகொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இரவு 09.00 மணியளவில் கட்டுகஸ்தோட்டையிலும் இனவாதிகள் தாக்குதல் நடத்துவதாக கேளிவியுற்றதையடுத்து அநதப் பிரதேசத்துக்கு விரைந்தார்.   கட்டுகஸ்தோட்டை, கஹல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள…

Read More

‘பாதுகாப்பு உயர்சபையை உடனடியாகக் கூட்டுங்கள்’ ஜனாதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவி, அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு, முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் குடியிருப்புக்கள் மீது சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதுடன் முஸ்லிம்கள்…

Read More

திகன பிரதேசத்தில் மீண்டும் அட்டகாசம்! முஸ்லிம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பிரதமருக்கு அழுத்தம்!

-ஊடகப்பிரிவு- கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். பிரேத ஊர்வலத்தில் செல்வோர் திகன, உடுதும்பர பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிலையங்களை தகர்த்து வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் தெரிவித்தார். பூதவுடலை சுமந்துகொண்டு கண்டி, திகன நகரத்துக்குக்குள் ஊர்வலமாக செல்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ள…

Read More

‘பாடசாலை கல்வி அபிவிருத்திக்கு சமூகத்தின் ஒற்றுமை முக்கியம்’ இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- கல்வி வளர்ச்சி மற்றும் கல்வி அபிவிருத்தி என்பவற்றுக்கு அதிபர், ஆசிரியர் போன்றவர்களது அர்ப்பணிப்புக்களை விட ஒரு சமூகத்தின் ஒற்றுமை மிக முக்கியம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் தெரிவித்தார். மடவளை மதீனா தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா, கல்லூரி அதிபர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தலைமையில் நேற்று முன்தினம் (03) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்….

Read More

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவுக்கு அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

-ஊடகப்பிரிவு- சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.கே.முபாரக் அலி இன்று காலை (05) காலமான செய்தி அறிந்து கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் மர்ஹூம் கியாஸின் மகனான முபாரக் அலி தனது தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் பெரும்பணி செய்தவர். மல்வானையைப் பிறப்பிடமாகக கொண்ட இவர், சமூகத்தின்பால் கொண்ட அக்கறையினால் சமூகப் பணியை மும்முரமாகச் செய்தவர். முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஸ்வரின் இணைப்புச் செயலாளராக இருந்து, அவரது…

Read More

‘பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் மீண்டும் உறுதி!

  -ஊடகப்பிரிவு- அம்பாறை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று மாலை (03) பிரதமரிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது, அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் தாமும், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி,…

Read More

இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு!

-ஊடகப்பிரிவு- 40 சதவீதத்திற்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் துறையில் மிக ஆர்வமாக ஈடுபடுகின்றன. இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையானது, ஆடை தொழில்துறையை விட விசாலமானது என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பு, கிங்ஸ்பேரி ஹோட்டலில் இடம்பெற்ற உணவுப் பொதியிடல் மற்றும் உற்பத்திக் கண்காட்சியை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் இந்திய மற்றும் சீனாவிற்கான…

Read More