News
அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்த 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு (படங்கள் இணைப்பு )
( படங்கள்: ஜஹான்ஸர் கான் ) அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு சற்றுமுன் (15.10.2014) கொழும்பு தாஜ் சமுத்ராவில் இடம் பெற்றது.
இன்று முதல் சிறை கைதிகளுக்கு தொலைபேசி
சிறைக்கைதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மத்திய நிலையம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது. சமூகத்துடனும் குடும்பத்துடனுமான சிறைக்கைதிகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகள் வரலாற்றில் முதற் தடவையாக தொலைபேசி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரசேன பல்லேகமவின் தலமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்து கொள்ளவுள்ளார்.
பாலஸ்தீனை ஆதரியுங்கள்! (சிறப்புக்கட்டுரை)
காஸா – இஸ்ரேல் யுத்தம் முடிந்ததன் பின்னர் சர்வதே சத்தின் பார்வை பலஸ்தீனை நோக்கித் திரும்பியுள்ளது என்றே சொல்லவேண்டும். 65 வருடங்களாக பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப் புகளை -அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாத சர்வதேசத் தின் கண்களை காஸா – இஸ்ரேல் யுத்தம் திறந்துள்ளதை, பலஸ்தீனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. காஸா மீதான யுத்தம் நீடிக்க நீடிக்க அழிவுகள் கூடிக்கொண்டு போனமை ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்தப் பிரச்சினை , இஸ்ரேலின் கோர முகம்…
எயார் லங்கா விமானத்தில் கோளாறு: 122 பயணிகள் உயிர் தப்பினர்
கொழும்பிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற எயார் லங்கா விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சென்னை விமான நிலைய தகவல்களை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விரைவாக செயற்பட்ட விமானிகள், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். இதனையடுத்து விமானத்தில் பயணித்த 122 பயணிகளும் உயிர் தப்பியுள்ளதுடன் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த விமானத்தின் ஊடாக…
குடும்ப அரசியலை விரட்ட இந்து – சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்: பொது பல சேனா
நாட்டுக்குள் நிலவும் குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் இலங்கையை ஆட்சி செய்யும் கருப்பு வெள்ளையர்களை விரட்டியடிக்கவும் இந்து – சிங்கள இனத்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். அதேபோன்று, இந்த நாட்டின் மீதும் இனத்தின் மீதும் பற்றுள்ள இந்து – சிங்கள இளைஞர், யுவதிகளை அரசியலில் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கிருளப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே…
இலங்கையில் பட்டினி நிலை அபாயக்கட்டத்தில்
இலங்கையில் பட்டினி நிலை 39 ஆவது இடத்தில் உள்ளதாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் உலகளாவிய ரீதியில் 43 இடத்தில் இருந்த இலங்கை இந்த வருடத்தில் 39வது இடத்துக்கு முன்னேறி இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை பட்டினி நிலை தொடர்பில் இந்தியா 55 வது இடத்திலும், பாகிஸ்தான் 57 வது இடத்திலும், நேபாளம் 44வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. (u)
100 கோடி வழங்க கோரி சுவாமிக்கு எதிராக வழக்கு
பா. ஜ.க.வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியிடம் 100 கோடி ரூபா நஸ்டஈடு கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நான்தான் ஆலோசனை கூறினேன்.. அதன்படியே அவரும் செய்து வருவதாக தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அண்மையில் சுவாமி பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இலங்கை கடற்படை சேதப்படுத்தி, கைப்பற்றிய 102 தமிழக மீனவர்களின் படகுகளுக்கு…
குழந்தையின் உயிர்காத்த படையினர்
முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் 30 அடி ஆழமான வீட்டு கிணற்றுனுள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர். பிரசாதினி ஜனிஸ்கர் என்ற ஒரு வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தை தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்ததை அவதானித்த உறவினர்கள் கூச்சலிட்டுள்ளனர். இந்த நிலையில் அருகில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சாதூரியமாகச் செயற்பட்டு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். தற்போது காப்பாற்றப்பட்ட குழந்தை முல்லைத்தீவு…
16வயது முடிந்தால் தே.அ.அட்டை பெறுங்கள்: இல்லையேல் தண்டம்
இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் தண்டம் விதிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார் எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- அரசாங்கத் திணைக்களம் உட்பட வங்கி போன்ற பல சேவை மையங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டை மிக முக்கியமானது. இதனால் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 16 வயது முடிவடைந்து ஒரு…
காஷ்மீர் பிரச்சினையில் தலையிட முடியாது; ஐ.நா கைவிரிப்பு
காஷ்மீர் எல்லைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு சாத்தியமில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு முடிவு ஏற்படுத்த, இந்தப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்தது. காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ், இம்மாதம்; 12ஆம் திகதி ஐ.நா.பொதுச் செயலாளர்…
கிளிநொச்சி நகரின் பிரதான மின்விளக்குகளை சூரியமின்கல விளக்குகளாாக மாற்ற ஜனாதிபதி உத்தரவு
பாறுக் சிகான் கிளிநொச்சி நகரின் பிரதான வீதியில் சூரியமின்கல வீதி விளக்குகளை பொருத்துமாறு மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் (13) இடம்பெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இந்தப் பணிப்புரையை விடுத்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி நகர்பகுதியிலுள்ள வீதி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிராத காரணத்தினால் மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை…
ஜனாதிபதி யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். வட மகாண சபை உறுப்பினர் மற்றும் யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன்அங்கு வரவேற்றதுடன் அங்கு ஜனாதிபதியாழ் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 315 மாணவா்களுக்கு புததகப்பைகள் மறறும் பள்ளி உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
