News
யாழ் நகரில் நுண்கடனால் பாதிப்படைந்தவர்களுக்கு விமோசனம்!!!
நுண் கடன் மூலம் பாதிப்படைந்த குடும்பங்களை அக்கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதிதிகளாக அமைச்சர்களான மங்கள சமரவீர ரிஷாட் பதியுதீன், அகில விராஜ், அர்ஜுண ரணதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். மற்றும் அரச உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்… -ஊடகப்பிரிவு-
ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழ கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு..
ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் பாடசாலையை விட்டு வெளிச்செல்வதை பாடசாலை நிருவாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி குழுவின் முதலாவது கூட்டம் இன்று (வியாழக்கிழமை) 14.02.2019 பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் அதன் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் எஸ்.ரீ.எம்.புர்ஹான்…
பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன் துறை துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்!!!
துறை முக அபிவிருத்தி தொடர்பில் ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் இன்று (14) வியாழக் கிழமை காங்கேசன் துறை துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். காங்கேசன் துறை துறை துறை முகத்தை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ,துறை முகங்கள் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் . ஆகியோர்களின்…
மட்டக்குளி சேர் ராசிக் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா!
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம் . பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் மட்டக்குளியில் அமைந்துள்ள சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள எம். எச். எம்.அஷ்ரப் ஞாபகார்த்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை (14) அதிபர் நூர் நளீபா சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் சிறப்பதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, முஜிபுர் ரஹ்மான் எம்.பி , மேல்…
இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு உபகாரங்கள் வழங்கிவைப்பு…
பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒட்டமாவடி ஷரிப் அலி வித்தியாலயத்திற்கும் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திற்கும் தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலிகலந்து கொண்டு வழங்கி வைத்தார். பிரதியமைச்சர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்…..
அதிர்வு நிகழ்ச்சியில் தலைமைத்துவ பண்புகளுடன் கருத்துக்களை வழங்கிய அமைச்சர் ரிஷாத் மக்கள் பாராட்டு!!!
வசந்தம் தொலைக்காட்சியில் நேற்று 13 ஆம் திகதி இரவு இடம்பெற்ற அதிர்வு அரசியல் நேரடி நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட கேள்விகளுக்கு ஆத்திரப்படாமல் நிதானமாக யாருடைய மனதையும் புண்படுத்தாத நிலையில் கண்ணியமாகவும் கச்சிதமாகவும் பதிலளித்ததன் மூலம் ஒரு சமூகத்திற்கு தலைமை பதவியை வகிப்பதற்கு இவர் தகுதியானவர்தான் என்பதை நிருபித்துள்ளார் என அரசியல் விமர்சகர்களும் நடுநிலை மக்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் தொடர்பான கேள்விகளுக்கு…
புத்தளம் குப்பைப்பிரச்சினைக்கு தீர்வுகாண தீவிர முயற்சி : ஜனாதிபதி ,அமைச்சர் சம்பிக்க விடாப்பிடி! அமைச்சர் ரிஷாட் கூறுகிறார்.
புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரச தொலைகாட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இரவு (13) கலந்து கொண்ட அமைச்சர், குப்பை பிரச்சினை தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இதனைத்தடுப்பதற்காக தங்கள் மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்தார். கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அமைச்சரவைக்கூட்டத்திலும் புத்தளத்திற்கு குப்பைகளை கொண்டுவருவதன் எதிர் விளைவுகளை நானும் அமைச்சர் ரவுப் ஹக்கீமும் எடுத்துரைத்தோம். குப்பையை கொண்டுவருவதை எதிர்த்து பேசினோம். எனினும்…
இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!!!
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு தனது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் உள்ளக கொங்கீரிட் பாதை திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் இன்று வைத்திய அத்தியட்சகர் டாக்டர் மதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!
‘இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனம் முன்வந்துள்ளது. டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் இலங்கையின் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் மற்றும் அவர்களின் நிறுவனங்களையும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட முயற்சியினை இந்த சிங்கப்பூரின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து…
தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தித் திட்டங்களை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் திறந்து வைத்தார்.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் நேற்று (12) திறந்து வைத்தார். தம்பலகாம பிரதேச செயலக பிரிவின் சிறாஜ் நகர் பகுதிகளில் கொங்ரீட் வீதிகள் ,பாடசாலை மைதானம் ஷாலிஹாத் ஜும்மா பள்ளி மதில் என்பன மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பல மில்லியன்கள் ரூபா செலவில் இப் புதிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உட்கட்டமைப்பு கிராமிய அபிவிருத்தி…
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு!
யுனிசெப் நிறுவனத்தினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர் தலைமையில் இன்று காலை (13) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் அம்புலன்ஸ் வழங்கப்பட்டன. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டு கோளிற்கிணங்க மன்னார் மாவட்டத்தின் முருங்கன், சிலாவத்துறை, தலைமன்னார் ஆகிய வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட ,வன்னி மாவட்ட எம்.பிக்கள், மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி பூலாச்சேனை கிராமத்திற்கான காபட் பாதை!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக கல்பிட்டி பிரதேசபைக்குட்பட்ட பூலாசேனை கிராமத்திக்கான பாதையினை பூலா சேனை வட்டார மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் கலாம் ஹாஜியார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காபட் பாதை வேலைத்திட்டம் நிறைவு பெற்றுள்ளது…. நிறைவு பெற்றுள்ள வேலைத்திட்டத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் இல்யாஸ் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்தி அமைப்பாளர் ஆப்தீன் எஹியா,…
