News
உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில்: பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!
“உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு” எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் , சிறப்பதிதியாக வர்த்தகம், கைத்தொழில், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் 110 இற்கு மேற்பட்ட நாடுகள் பங்கேற்பதோடு இலங்கையை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள் மாநாடு முடிவடைந்த பின்னர் மேலும் இரண்டு நாட்கள் வெளிக்கள சுற்றுலாவுக்கும்…
நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி!!!
நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் மாகாண சபை தேர்தலா, ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடைபெறும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்பாளர்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று இரவு 918.02.2019) மீராவோடை அந் நூர்…
மாகாண அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாகவே நிரந்தர தீர்வு கிட்டும் தோப்பூரில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார அமைச்சையும் அதிகூடிய பட்சம் முதலமைச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். தோப்பூரில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை திறந்து…
திருகோணமலை துறை முகங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதியமைச்சர் செயலாளருக்கு பணிப்புரை!!!
துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களை துறை முகங்கள் கப்பல் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்ரம திசாநாயக்க அவர்கள் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (20) புதன் கிழமை கொழும்பில் உள்ள துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது. ஒலுவில் துறை முகத்தில் காணப்படும் மீனவர்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வுகளை விரைவுபடுத்துமாறும் திருகோணமலை துறை முக அபிவிருத்திக்கான சகல நடவடிக்கைகள் தொடர்பாக மீளாய்வு…
கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு
இந்தியா கர்நாடகாவில் நாளை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று (20) காலை வட மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டாகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீனை சந்தித்தனர். 18 பேர் அடங்கிய இலங்கைக் குழுவில் மன்னாரில் முன்னணிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 4 வீரர்களும், 3 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்….
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு!!!
ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சர் றிஷாட்பதியுத்தீன் அவர்களிடம் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கேட்டு கொண்டதற்கு இணங்க பாடசாலை காணிக்கான நிதியினை கையளிக்கும் நிகழ்வு 14.02.2019 அதிபர் திருமதி சைனம்பு தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ரூபா 500000 லட்சம்…
அசணாகொடுவ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் கிளை மற்றும் அறிமுகம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் கட்சிக் கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி அசணாகொடுவ கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கடந்த (17-02-2019) அ.இ.ம.கா குருநாகல் மாவட்டத்தலைவரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள்…
வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவருக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு !
மண்கும்பான் வேலனை பகுதிக்குரிய, ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் மண்கும்பான் வெள்ளைக்கடற்கரை பகுதியில் இருந்து வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு தினமும் நடையாக சென்று கல்விகற்றுவந்த பரிதாப நிலை யாழ் மாநகரசபை உறுப்பினர் கௌரவ K.M நியாஸ் (நிலாம்) அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மாணவர்களுக்கு எவ்வகையிலேனும் உதவி புரிந்து சிறப்புக்குரிய கல்வியை தொடர வழிவகுக்கவேண்டும் என்ற அவரது தூய்மையான மனப்பாண்மைக்கு அமைய உரியவர்களை தொடர்புகொண்டு எடுத்த அவரது தனிப்பட்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பிரபல…
அமைச்சர் அமீர் அலியின் துரித முயற்சியினால் 350 மில்லியன் ரூபாய் செலவில் மட்டு.ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை
முதன்முறையாக மட்டக்களப்பு-ஓட்டாமாவடியில் நான்கு வழிப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கென 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயவாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரிவித்தார். நாலவடிச் சந்தியிலிருந்து தியாவெட்டுவான் பாலம் வiரையான 2 கிலோ மீற்றர் நீளமான பாதை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டு இடையில் மின்விளக்குகள் பொருத்திப்பட்டு நவீனமயமாக்கப்படவுள்ளன.இதற்கென 300 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அத்துடன் 1 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட ஓட்டமாவடி பாலத்திலிருந்து…
அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் பாடசாலைகள், மத வழி பாட்டுத்தலங்கள் பின் தங்கிய தோற்றத்தில் காணப்பட்டிருக்காது
அதி திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கும்புக்வெவ நிமல் சிறி வித்தியாலயம் பல குறைபாடுகள் நிறைந்த பாடசாலையாக காணப்பட்டது. பிரதானமாக 4,5 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கென ஓர் வகுப்பறை கட்டிடமில்லாமல் தென்னை ஓலையினால் அமைக்கப்பட்ட ஓர் குடில் போன்ற அமைப்பிலிருந்தே தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்களது பாடசாலைக்கான வகுப்பறை…
எனக்கு கிடைக்கவிருந்த மேலுமொரு பிரதியமைச்சை, TNA தடுத்தது – அப்துல்லா மஹரூப் வேதனை
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார அமைச்சையும் அதிகூடிய பட்சம் முதலமைச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். தோப்பூரில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை திறந்து…
யாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்
யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் இருந்துவரும் தடைகளை நீக்கி, அதனை வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த தீவிர முயற்சிகளுக்கு தற்போது உரிய பலன் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தில் இதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பதாகவும் மௌலவி சுபியான் தெரிவித்தார். யாழ்ப்பாண கச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில், நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களின் மீள் குடியேற்ற தடைகள் குறித்தும், வீடுகளை அமைப்பதற்கு காணிகள் இல்லாத பிரச்சினைகள் தொடர்பிலும்…
